Burger Recipe in Tamil | வெஜிடபிள் பர்கர் | Veg Burger in Tamil | How to make vegetable burger

See this Recipe in English

வெஜிடபிள் பர்கர்  காய்கறி கட்லெட், சீஸ், லெட்யூஸ், வெங்காய ஸ்லைஸ், தக்காளி ஸ்லைஸ், தக்காளி சாஸ், மற்றும் மயோனஸ் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படுகிறது.  பர்கர் மதிய உணவு மற்றும் மாலை நேர சிற்றுண்டிக்கு ஏற்றது. குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான பர்கர் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் சுலபமாக தயாரிக்கலாம்.   

வெஜிடபிள் பர்கர் தவிர மீன் கட்லட் மற்றும் சிக்கன் கட்லெட் ஆகியவற்றைக் கொண்டு பிஷ் பர்கர் மற்றும் சிக்கன் பர்கர் தயாரிக்கலாம். சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் பர்கர் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

சுவையான பர்கர் செய்ய சில குறிப்புகள்

  • வெஜிடபிள் பர்கர் தயாரிப்பதற்கு காய்கறி கட்லெட்  செய்யும்பொழுது விருப்பமான காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம்.
  • காய்கறிக்கு பதிலாக சிக்கன் மற்றும் மீன் கொண்டும் கட்லெட் செய்யலாம்.
  • தயாரித்த உடன் பரிமாறினால் சுவையாக இருக்கும். 
  • பர்கர் செய்வதற்கு காய்கறிகளை வேகவைக்கும் பொழுது மென்மையாக வேக வைத்துக்கொள்ளவும் அதே சமயத்தில் காய்கறிகள் குழைந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
  • காய்கறிகள் வெந்த பிறகு அதிலுள்ள தண்ணீரை சுத்தமாக வடித்து விடவும். அதே சமயத்தில் நன்றாக ஆறிய பிறகு மற்ற மசாலா பொருட்களை அதில் சேர்க்கவும். சூடாக இருக்கும் பொழுது சேர்க்க வேண்டாம். 
  • காய்கறி கட்லட் சூடாக இருக்கும் பொழுது அதன் மீது சீஸ் துண்டை வைத்து விடவும் அது லேசாக உருக்கி சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். 
  • பர்கர் செய்த உடன் சாப்பிடுவதற்கு உகந்தது,  அதனை அதிக நேரம் வைத்து பின்னர் சாப்பிட வேண்டாம்.

இதர மேற்கத்திய உணவுகள் – பிரெட் பீட்சா, மசாலா பாஸ்தா, பன்னீர் பர்கர், சிக்கன் பர்கர்,  முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக் , முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக், தவா பர்கர்.

ஓவன் இல்லாமல் பீட்சா/கேக் – ஓவென் இல்லாமல் பீஸ்ஸாபீஸ்ஸா செய்வது எப்படி?, முட்டை சேர்க்காத டூட்டி ஃப்ரூட்டி கேக், முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக்,ஹனி  கேக், ரவா கேக், ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி?, ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக், முட்டை சேர்க்காத சாக்லேட் கேக், ஓரியோ கேக், பர்கர் பன்.

 வெஜிடபிள் பர்கர் செய்ய தேவையான பொருட்கள்

  காய்கறி கட்லெட் 

  • 1 கப் நறுக்கிய உருளைக்கிழங்கு
  • 1/2 கப்  நறுக்கிய கேரட்
  • 1/4 கப் பச்சை பட்டாணி
  • 1 பெரிய வெங்காயம்
  • 4 தேக்கரண்டி  அவல்
  • தேவையான அளவு உப்பு
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
  • 3 தேக்கரண்டி மைதா
  • 1/2 கப் பிரெட் தூள் 
  • எண்ணை பொரிக்க தேவையான அளவு

 பர்கர்

  • 4 பர்கர் பன்
  • 4 தேக்கரண்டி மயோனைஸ்
  • 4 தேக்கரண்டி தக்காளி சாஸ்
  • லெட்யூஸ்
  • 4  சீஸ் ஸ்லைஸ்
  • 4 தக்காளி  ஸ்லைஸ் 
  • 8 வெங்காய ஸ்லைஸ்

வெஜிடபிள் பர்கர் செய்முறை

1. 3 உருளைக்கிழங்குகள்( பொடியாக நறுக்கியது) 2  கேரட்( பொடியாக நறுக்கியது) மற்றும் 1/4 கப் அளவு பட்டாணி  ஆகியவற்றை இட்லி பாத்திரம் அல்லது குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.

2. காய்கறிகள் வெந்த பிறகு நன்றாக மசித்து கலந்து விடவும்.

3. பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, கால் கப் அவல்,  தேவையான அளவு உப்பு, 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

 4. ஒரு சிறிய பாத்திரத்தில் 3 தேக்கரண்டி மைதாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைதா பேஸ்ட் தயாரித்துக் கொள்ளவும்.

 5. காய்கறி கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து  தட்டையான வட்டமான கட்லட் செய்து கொள்ளவும்.

 6. அதனை மைதாவில் தோய்த்து எடுத்து பிரட் தூள் பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.

 7. அதனை சூடான எண்ணெயில்  போட்டு பொரிக்கவும் பொன்னிறமாகும் வரை 2 அல்லது 3 நிமிடங்களுக்கு பொரித்து தனியே எடுத்து வைக்கவும்.

 8. தற்பொழுது பர்கர் பன்னை பாதியாக நறுக்கி ஒரு பக்கம் மைனஸ் தடவி கொள்ளவும்,  மற்றொரு பக்கம் தக்காளி சாஸ் 1 தேக்கரண்டி அளவு தடவிக் கொள்ளவும்.

 9. பொரித்து வைத்துள்ள கட்லட் தக்காளி சாஸ் மீது வைக்கவும்.

 10. அதன்மீது லெட்யூஸ், சீஸ், தக்காளி மற்றும் வெங்காய  ஸ்லைஸ் ஆகியவற்றை வரிசையாக வைக்கவும்.

11. அதன் மீது சிறிதளவு தக்காளி சாஸ் சேர்த்து பர்கர் பன்னை மூடிவிடவும்.

12. சுவையான வெஜிடபிள் பர்கர் தயார்.

 

Leave a Reply