Empty Salna in Tamil | Salna recipe in Tamil | சால்னா | Plain Salna | Easy Salna

See this Recipe in English

சால்னா பரோட்டா,  சப்பாத்தி,  இட்லி,  தோசை,  முட்டை பணியாரம்,  ஆகியவற்றுடன்  சுவையாக இருக்கும். ஹோட்டல்களில் விதவிதமான சால்னா வகைகள் கிடைக்கும்,  கெட்டி சால்னாஎம்டி சால்னா, வெஜ் சால்னா, சிக்கன் சால்னா, இவற்றைப் போலவே ரோட்டோர கடைகளில் கிடைக்கும் சால்னாவின் சுவை அலாதியாக இருக்கும், இதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். நீங்களும் பிளைன் சால்னாவை செய்து சுவைத்து மகிழுங்கள்.

சுவையான சால்னா செய்ய சில குறிப்புகள்

  • பட்டை, இலவங்கம், போன்ற வாசனைப் பொருட்களை அப்படியே சேர்த்துக்கொள்ளலாம்,  விருப்பப்பட்டால் அவற்றை அரைத்து பொடியாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • முந்திரிப்பருப்பு சேர்ப்பதற்கு பதிலாக  சிறிதளவு பொட்டுக்கடலை அல்லது வேர்க்கடலை  சேர்த்துக் கொள்ளலாம்.
  • வெங்காயம் தக்காளி கலவையின் அளவை பொருத்து சால்னாவின் அளவு மாறும்,  அதிக அளவில் சால்னா தேவை என்றால் வெங்காயம் மற்றும் தக்காளியை எண்ணிக்கையை அதிகப்படுத்தி கொள்ளவும் அதற்கு ஏற்றார்போல் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளவும்.
  • புதினாவை அவசியம் சேர்த்துக் கொள்ளவும்,  சால்னா விற்கு புதினா, தனி சுவையும் மணமும் தரும்.
  • தண்ணீர் சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்,  அதிக நேரம் கொதிக்கும்போது சால்னாவின் சுவை கடைகளில் கிடைப்பது போன்று இருக்கும்.

இதர சால்னா வகைகள் – கெட்டி சால்னாஎம்டி சால்னா, வெஜ் சால்னா, சிக்கன் சால்னா

சைவ குருமா வகைகள் – வெஜிடபிள் சால்னாசோயா குருமாவடைகறிரோட்டுக்கடை காளான் மசாலாகத்திரிக்காய் கிரேவிபன்னீர் கிரேவிகும்பகோணம் கடப்பாதக்காளி குருமாஆந்திரா கத்திரிக்காய் மசாலாபூரி மசாலாவெஜிடபிள் குருமாசென்னா மசாலாபன்னீர் பட்டர் மசாலாகாளிஃபிளவர் பட்டாணி குருமா.

 

 

See this Recipe in English

தேவையான பொருட்கள்

  • நல்லெண்ணெய்/ கடலை எண்ணெய் – 5 தேக்கரண்டி
  • பிரிஞ்சி இலை – 1 
  • சோம்பு – ½  தேக்கரண்டி 
  • பட்டை – 1
  • ஏலக்காய் – 3
  • கிராம்பு – 4
  • பெரிய வெங்காயம் – 2
  • கருவேப்பிலை –   சிறிதளவு
  • கொத்தமல்லி –    சிறிதளவு
  • புதினா –  சிறிதளவு
  • இஞ்சி பூண்டு விழுது – 2  தேக்கரண்டி 
  • தக்காளி – 2
  • உப்பு – ½  தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – ¼  தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
  • மல்லித் தூள் – 2  தேக்கரண்டி
  • கரம் மசாலா – ½  தேக்கரண்டி 

தேங்காய் விழுது அரைக்க தேவையான பொருட்கள்

  • துருவிய தேங்காய் – ¼ கப்
  • முந்திரி பருப்பு – 5
  • சோம்பு – ½ தேக்கரண்டி 
  • கசகசா – ½ தேக்கரண்டி 

செய்முறை

1. சால்னா  செய்வதற்கு,  ஒரு வாணலியில் 5  தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

2. எண்ணெய் சூடானதும், 1 பிரெஞ்சு இலை,  ½  தேக்கரண்டி சோம்பு, 1  துண்டு பட்டை, 3  ஏலக்காய், 4 கிராம்பு ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

3. 2 பெரிய வெங்காயத்தை மெலிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்,  வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

4. வெங்காயம் நன்றாக வதங்கியதும் கறிவேப்பிலை,  கொத்தமல்லி,  புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

5. அதனுடன் 2   தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.

6. இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பிறகு, 2  தக்காளிப் பழங்களை நறுக்கி சேர்த்து கொள்ளவும். தக்காளி மென்மையாகும்  வரை வதக்கவும்.

7. அதனுடன் தேவையான அளவு உப்பு, ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 2  தேக்கரண்டி மல்லித் தூள், ½  தேக்கரண்டி கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

8. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும்வரை கொதிக்க வைக்கவும்.

9. ஒரு மிக்ஸி ஜாரில் ¼ கப் துருவிய தேங்காய், 5  முந்திரிப் பருப்பு, ½  தேக்கரண்டி சோம்பு, ½  தேக்கரண்டி கசகசா, ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

 10. அதனுடன் சிறிது  தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

 11. அதனை தயாராகவுள்ள மசாலாவில் சேர்க்கவும்.

12. பின்னர் 1½  – 2 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

13. மூடி வைத்து மிதமான தீயில் 20 – 25 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

14. ஓரங்களில் எண்ணை பிரிந்து வந்ததும், சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கி வைக்கவும்.

15. சுவையான சால்னா தயார். 

Leave a Reply