Ennai Kathrikkai Kulambu in Tamil | எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு | Ennai Katharikkai Kuzhambu | Brinjal Curry for rice | Kara Kuzhambu

See this Recipe in English

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு காரசாரமான குழம்பு வகை. இது சாதம், பிரியாணி, இட்லி, தோசை  ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.  இது பிஞ்சு கத்தரிக்காய்கள்,  சின்ன வெங்காயம், புளி,  ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது இதற்கென பிரத்தியேகமாக மசாலா அரைத்து சேர்க்கும்போது சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும். 

சுவையான எண்ணை கத்திரிக்காய் குழம்பு செய்ய சில குறிப்புகள்

  • குழம்பு செய்வதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தவும் அதுவே சுவைக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்றது.
  • கத்தரிக்காய்களை பிஞ்சாக பார்த்து பயன்படுத்திக் கொள்ளவும்,  சிறிய கத்தரிக்காயாக இருந்தால் முழுதாக பயன்படுத்தலாம்,  பெரிய கத்திரிக்காயாக இருந்தால் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • மசாலா அரைக்கும் பொழுது மிளகு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்திருப்பதால் குழம்பில் மிளகாய் தூள் சேர்க்கும் பொழுது உங்கள் காரத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
  • நல்ல புளிப்பாக உள்ள புளி பயன்படுத்திக் கொள்ளவும், இனிப்பு புளியாக இருந்தால் சற்று கூடுதலாக சேர்த்துக் கொள்ளவும்.
  • கத்தரிக்காய்களை வதக்கும் பொழுது முழுமையாக வேக விடாமல் 50%  வெந்தால் போதும்,  அதே சமயத்தில் கிளறும்போது கத்தரிக்காய் உடையாமல் கிளறவும்.
  • ஓரங்களில் எண்ணை பிரிந்து, குழம்பு கெட்டியாக இருந்தால் தயாராகிவிட்டது.
  • கடைசியாக வெந்தயத்துடன் சிறிதளவு மிளகாய் சேர்த்து அரைப்பதற்கு பதிலாக வெறும் வெந்தயத்தையும் பெருங்காயத்தையும் பொடி செய்து சேர்த்துக் கொள்ளலாம்.

இதர வகைகள் – பருப்பு உருண்டை குழம்பு, காராமணி குழம்பு, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, மோர் குழம்பு,முருங்கைக் கீரை கூட்டு, வாழைக்காய் பொரியல்,  தக்காளி ரசம், எலுமிச்சை ரசம், முட்டைகோஸ் கேரட் பட்டாணி பொரியல், உருளைக்கிழங்கு வருவல், சேப்பங்கிழங்கு வறுவல், பாகற்காய் வறுவல், வாழைப்பூ வடை.

எளிமையான மதிய உணவு வகைகள்  –சீரக சாதம், சக்கரை பொங்கல், புதினா சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், சிறுதானிய பிரியாணி.

 

See this Recipe in English

தேவையான பொருட்கள்

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

  • நல்லெண்ணெய் – 1  தேக்கரண்டி
  • கொத்தமல்லி விதைகள் – 4 தேக்கரண்டி
  • சீரகம் – ½  தேக்கரண்டி
  • மிளகு – ½  தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் – 5
  • காய்ந்த மிளகாய் –  தேவையான அளவு
  • துருவிய தேங்காய் – 4  தேக்கரண்டி
  • உப்பு –  தேவையான அளவு

இதர பொருட்கள்

  • கத்திரிக்காய் – 8 
  • புளி – சிறிய எலுமிச்சைபழ அளவு
  • நல்லெண்ணெய் –  10 தேக்கரண்டி
  • உப்பு –  தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – ¼  தேக்கரண்டி
  • சாம்பார் மிளகாய்த்தூள் –  சுவைக்கேற்ப
  • கடுகு – ½  தேக்கரண்டி 
  • சீரகம் – ¼  தேக்கரண்டி
  • கருவேப்பிலை –   சிறிதளவு
  • சின்ன வெங்காயம் – 10
  • பூண்டு பற்கள் – 10 – 20
  •  தக்காளி – 1 
  • வெந்தயம் – ¼  தேக்கரண்டி
  • வர மிளகாய் – 2
  • பெருங்காயத் தூள் – 1  சிட்டிகை
  • கொத்தமல்லித் தழை –   சிறிதளவு

செய்முறை

1. 8 கத்தரிக்காய்களை நடுவில் கீரி விட்டு 10 நிமிடங்களுக்கு தண்ணீரில் போட்டு வைக்கவும்.

2. ஒரு எலுமிச்சைப்பழ அளவு புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்.

3. மசாலா அரைப்பதற்கு  ஒரு பானில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.  எண்ணெய் சூடானதும் 4  தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள், ½  தேக்கரண்டி சீரகம், ½  தேக்கரண்டி மிளகு ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளவும்.

4. அதன் 5 சின்ன வெங்காயம், தேவையான அளவு காய்ந்த மிளகாய்  சேர்த்து வதக்கவும்.

5. பின்னர் நான்கு தேக்கரண்டி துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.

6. தேங்காயின் ஈரப்பதம் போகும் வரை வறுத்துக் கொள்ளவும்.

7. வறுத்தவற்றை ஆற விட்டு மிக்ஸியில் சேர்த்து அதனுடன் மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

8. தேவையான அளவு தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

9. கத்தரிக்காய்களை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக துடைத்துவிட்டு தயார் செய்துள்ள மசாலாவை அதில் நிரப்பவும். 

10. ஊறவைத்துள்ள புளியில் கொட்டை,  நார், போன்றவற்றை நீக்கிவிட்டு  கரைத்துக்கொள்ளவும்.  அதனுடன் மீதமுள்ள அரைத்த மசாலா விழுது சேர்க்கவும்.

11. , ¼ தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, 2 தேக்கரண்டி சாம்பார் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

12. ஒரு பானில் 4 – 5  தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும், கத்தரிக்காய்களை சேர்த்து வதக்கவும்.

13. ஓரளவு மென்மையாக வதங்கியதும் தனியே எடுத்து வைக்கவும்.

14. ஒரு வானலியில் 4 – 5  தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்,  எண்ணெய் சூடானதும் ½  தேக்கரண்டி கடுகு, ¼  தேக்கரண்டி சீரகம்,  சிறிதளவு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

15. அதனுடன் 10  சின்ன வெங்காயம், 10 – 20  பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.

16. அதனுடன் ஒரு  தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.

17. பின்னர் வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து கிளறவும்.

18. புளிக்கரைசலை சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து கொதிக்க வைக்கவும்.

19. ஒரு சிறிய கடாயில் ¼  தேக்கரண்டி வெந்தயம், 2  காய்ந்த மிளகாய்,  ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

11. அதனை மிக்ஸி ஜாருக்குமாற்றி அதனுடன் 1 சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

12. குழம்பு கொதித்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வந்ததும்,  வெந்தயப் பொடி சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

13. சுவையான எண்ணை கத்திரிக்காய் குழம்பு தயார். 

Leave a Reply