Paneer Fried Rice in Tamil | பன்னீர் ப்ரைடு ரைஸ் | Fried Rice Recipe in Tamil | How to make paneer fried rice

See this Recipe in English

பிரைட் ரைஸ் என்பது சீனாவில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இரவு உணவு வகை.  சீனாவில் காய்கறிகள் மற்றும் சிக்கன் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகை.  இது ஜாஸ்மின் ரைஸ் எனப்படும் ஒருவிதமான ஒன்றுடன் ஒன்று ஓட்டக்கூடிய அரிசி, மசாலா பொருட்கள் எதுவும் சேர்க்காமல் உப்பு, சோயா சாஸ், காய்கறிகள் மற்றும்  மாமிசம் ஆகியவற்றை கொண்டு செய்யப்படும்.

இது இந்தியாவிற்கு வந்ததும் இந்திய மக்களின் சுவைக்கேற்ப பல வேறுபாடுகளை சந்தித்துள்ளது.   ஜாஸ்மின் அரிசிக்கு பதிலாக பாஸ்மதி அரிசி அல்லது சாதாரண அரிசி பயன்படுத்துவது மற்றும் மிளகாய்த்தூள், சீரகத்தூள், போன்ற மசாலாக்கள் சேர்ப்பது என பல்வேறு வகையான மாற்றங்களை கண்டுள்ளது. அவ்வாறான ஒரு மாற்றம் செய்யக் கூடியதே பன்னீர் ஃப்ரைட் ரைஸ்.  இந்தியர்களின் விருப்ப உணவான பன்னீருடன் சேர்த்து ஃப்ரைட் ரைஸ் செய்யப்படுகிறது.  சுவையான மற்றும் சுலபமான பன்னீர் ரைஸ் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

 சுவையான பன்னீர் ஃப்ரைட் ரைஸ் செய்ய சில குறிப்புகள்

  • பிரைட் ரைஸ் செய்வதற்கு மற்ற அரிசி வகைகளை காட்டிலும் பாஸ்மதி அரிசி சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
  • சாதம் வேக வைக்கும் பொழுது முழுவதுமாக வேகவைக்காமல் 90% வேகவைக்கவும்.
  • சாதம் வெந்த பின்னர் தண்ணீரை வடிகட்டி தட்டில் கொட்டி நன்றாக ஆறவிடவும்.  பிரைட் ரைஸ் செய்வதற்கு ஆறிய சாதம் பயன்படுத்துவதே மிகச்சிறந்தது. சூடான சாதம் சேர்க்கும் பொழுது சாதம் உடைந்து விடும் வாய்ப்புள்ளது.
  • காய்கறிகளை அதிக நேரம் வதக்க வேண்டாம் அதனுடைய முறுமுறுப்பு சுவை மாறாமல் சமைக்க வேண்டும்.
  • பன்னீர் சேர்க்காமல் இதே முறையில் காய்கறி ப்ரைட் ரைஸ் செய்யலாம்.
  • பன்னீரை ஊறவைக்கும் பொழுது குறைந்தது பத்து நிமிடமும்  அதிகபட்சம் இரண்டு மணி நேரம்  வரை ஊற வைக்கலாம்.
  • பன்னீரை பொறிக்கும் பொழுது குறைவான தீயில் வைத்து பொரிக்கவும்.
  • புதிதாக இடித்த மிளகுத்தூளை பயன்படுத்துவது சிறந்தது, அதுவே சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.

இதர சாத வகைகள்

முட்டை ஃப்ரைட் ரைஸ்

காலிஃப்ளவர் சாதம்

தக்காளி சாதம்

புதினா சாதம்

தேங்காய் சாதம்

சீரக சாதம்

கத்திரிக்காய் சாதம்

 

 

தேவையான பொருட்கள்

பனீர் ஃப்ரை செய்ய தேவையான பொருட்கள்

  • பன்னீர் – 300g
  • தயிர் – ½ கப்
  • மஞ்சள் தூள் – ¼  தேக்கரண்டி
  • மல்லித் தூள் – 1  மல்லித்தூள் 
  •  கரம் மசாலா – ½  தேக்கரண்டி 
  • சிவப்பு மிளகாய் தூள் – 1  தேக்கரண்டி
  •  சீரகத் தூள் – ½  தேக்கரண்டி
  •  உப்பு –  தேவையான அளவு
  • சமையல் எண்ணெய் –  பொரிக்க  தேவையான அளவு

ஃப்ரைட் ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்

  • பாஸ்மதி அரிசி – 1.5 கப் – 300g
  • சமையல் எண்ணெய் – 3  தேக்கரண்டி
  • வெங்காயத்தாள் –  சிறிதளவு
  • கேரட் – 2 – 120g
  • பட்டாணி – 30g
  • குடைமிளகாய் – 120g
  • முட்டைகோஸ் – 150g
  • உப்பு –   தேவையான அளவு
  • சோயா சாஸ் – 2   தேக்கரண்டி
  • சில்லி சாஸ் – 1.5  தேக்கரண்டி
  • மிளகு தூள் – 1  தேக்கரண்டி

 

செய்முறை

பன்னீர் ஃப்ரை

1.  300 கிராம் பன்னீரை 1/4 இன்ச் தடிமன் உள்ள துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

2.  ஒரு பாத்திரத்தில்  ½  கப் கெட்டித் தயிர் சேர்த்துக் கொள்ளவும்.  அதனுடன் ¼  தேக்கரண்டி மஞ்சள் தூள்,  1 தேக்கரண்டி மல்லித்தூள்,  1 தேக்கரண்டி மிளகாய் தூள்,  ½  தேக்கரண்டி கரம் மசாலா,   1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள்,   ½  தேக்கரண்டி சீரகத்தூள்,  தேவையான அளவு உப்பு,  ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

3. இவற்றுடன் நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்க்கவும். 10 நிமிடங்கள்  ஊறவைக்கவும்

4. பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி,  சூடானதும் ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளை ஒவ்வொன்றாகப் போடவும்.

 5. குறைவான தீயில் பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும். திருப்பி போட்டு இரண்டு பக்கங்களும் பொன்னிறமாகும் வரை வேக வைத்து பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

பிரைட் ரைஸ்

1. 300g  பாஸ்மதி அரிசியை ஒருமுறை கழுவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். 15 நிமிடங்களுக்கு பின்னர் தண்ணீரை வடிகட்டவும்.

 2.  ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.  அதில் 1 தேக்கரண்டி உப்பு மற்றும் 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்க்கவும்.

 3. பின்னர் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கலக்கவும்.

 4. அதனை மூடி வைத்து வேக வைக்கவும்.

 5. 90 சதவிகிதம் வெந்த பின்னர்,  தண்ணீரை வடித்துவிட்டு ஒரு தட்டில் கொட்டி ஆற வைக்கவும்.

6. பின்னர் ஒரு அகலமான கடாயில் 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும்,  வெங்காயத்தாள் வெள்ளைப் பகுதியை நறுக்கி சேர்த்து கொள்ளவும். அதனுடன் 2 கேரட் மற்றும் சிறிதளவு பட்டாணியை சேர்த்து வதக்கவும்.

7.  பின்னர் குடைமிளகாய் மற்றும் முட்டைகோஸ், தேவையான அளவு உப்பு, சேர்த்து அதன் முறுமுறுப்பு தன்மை மாறாமல் வதக்கவும்.

8. பின்னர் வெங்காயத்தாளில் பச்சை பகுதியை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்,  அதனுடன் 2  தேக்கரண்டி சோயா சாஸ், 1.5  தேக்கரண்டி சில்லி சாஸ் சேர்த்துக்கொள்ளவும்.

9. பின்னர் ஆற வைத்துள்ள சாதம் சேர்த்து கலக்கவும்.

10. பின்னர் தயாராக உள்ள பன்னீருடன் சிறிதளவு வெங்காயத்தாள் சேர்த்து கலக்கவும்.

11. கடைசியாக 1 தேக்கரண்டி மிளகு தூள் சேர்த்து சாதம் உடையாமல் கிளறி அடுப்பை அணைக்கவும்.

12. சுவையான பன்னீர் ஃப்ரைட் ரைஸ் தயார்.

Leave a Reply