Garlic Idli Podi in Tamil | பூண்டு இட்லி பொடி | Garlic Podi for Idli | Poondu podi for Idli

பூண்டு இட்லிப்பொடி மிகவும் சுலபமான முறையில் செய்யக்கூடிய, அதே சமயத்தில் சுவையான காரசாரமான இட்லி பொடி.  இதனை செய்வதற்கு மிகவும் குறைந்த அளவிலான பொருட்களை தேவை, காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு ஆகிய 2 பொருட்களை வைத்து சுவையான பூண்டு பொடி செய்யலாம்,   இதனை 10 நிமிடங்களில் செய்து கொடுக்கலாம்,  ஒரே மாதிரி இட்லி பொடியை சாப்பிடுவதை விட அவ்வப்போது இதுபோன்ற வித்தியாசமான பொடி வகைகள் செய்து சாப்பிட சுவையாக இருக்கும்.

சுவையான பூண்டு பொடி செய்ய சில குறிப்புகள்

  • பூண்டு பொடி செய்வதற்கு மிளகாயை மிதமான தீயில் வைத்து மொறுமொறுப்பாக  ஆகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  • பூண்டை தோல் நீக்கி சேர்த்து கொள்ளவும்.
  • விட்டு விட்டு அரைத்துக்கொள்ளவும்,  அவ்வப்போது கிளறி அரைத்துக்கொள்ளவும்.
  • தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

இதர வகைகள் –  வடைகறிபாசிப்பருப்பு இட்லி, மசாலா பாஸ்தா, மசாலா பாஸ்தா,  உடனடி மெதுவடை, உடனடி தோசைசேமியா போண்டா, மொரு மொரு வடை, கார போளி, சாம்பார் வடை, இட்லி மாவு போண்டா, இடியாப்பம், ரவா இட்ல, மசாலா இட்லி , பஞ்சாபி பட்டூரா, சத்தான வரகரிசி இட்லி, பொடி இட்லி, பூரி.

 

 

 பூண்டு இட்லி பொடி செய்ய தேவையான பொருட்கள் 

  • காய்ந்த மிளகாய் – 20
  • பூண்டு – 20  பல்
  • உப்பு – ¼  தேக்கரண்டி

 செய்முறை

1. பூண்டு பொடி செய்வதற்கு அடி கனமான கடாயில்  20 காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.

2. குறைவான தீயில் வைத்து மொறுமொறுப்பாக வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

3. பின்னர் ஈரமில்லாத ஒரு சுத்தமான மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

 4. அதனுடன் 20  பூண்டு பற்களை சேர்த்துக் கொள்ளவும்.

 5. அதனுடன் ¼  தேக்கரண்டி உப்பு சேர்த்து  கொள்ளவும். 

6. விட்டு விட்டு அரைத்துக்கொள்ளவும்,  ஓரங்களில் ஒட்டி இருந்தால் ஸ்பூனால் எடுத்து விட்டு அரைத்துக்கொள்ளவும்.

7. சுத்தமான டப்பாவில் மூடி  வைத்தால் 3 மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

Leave a Reply