See this Recipe in English
காளான் மசாலா தெருவோர கடைகளில் மிகவும் சுவையாக கிடைக்கும். பல்லாயிரக் கணக்கான மக்கள் அதனை மாலை நேர சிற்றுண்டியாக விரும்பி உண்பார்கள். இது காளான், முட்டைகோஸ் போன்றவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. சுவையான காளான் மசாலாவை ரோட்டுகடை சுவையில் சுலபமான முறையில் வீட்டில் செய்து சுவைக்கலாம்.
இதர சைவ குருமா வகைகள் – சால்னா, சோயா குருமா, வடைகறி, ரோட்டுக்கடை காளான் மசாலா, கத்திரிக்காய் கிரேவி, பன்னீர் கிரேவி, கும்பகோணம் கடப்பா, தக்காளி குருமா, ஆந்திரா கத்திரிக்காய் மசாலா, பூரி மசாலா, வெஜிடபிள் குருமா, சென்னா மசாலா, பன்னீர் பட்டர் மசாலா, காளிஃபிளவர் பட்டாணி குருமா.
அசைவ குருமா வகைகள் – இறால் தொக்கு, செட்டிநாடு சிக்கன் குழம்பு, முட்டை மசாலா, ஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவி, முட்டை குழம்பு.
See this Recipe in English
தேவையான பொருட்கள்
காளான் பொரிக்க தேவையான பொருட்கள்
- காளான் – 100g
- முட்டைக்கோஸ் – 50g
- வெங்காயம் – ¼ கப்
- அரிசி மாவு – 3 தேக்கரண்டி
- மைதா மாவு – 3 தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் – 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
- உப்பு – தேவையான அளவு
- சமையல் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
மசாலா செய்ய தேவையான பொருட்கள்
- சமையல் எண்ணெய் – 2 தேக்கரண்டி
- பூண்டு பற்கள் – 5
- பச்சை மிளகாய் – 2
- நறுக்கிய வெங்காயம் – ¼ கப்
- இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- தக்காளி – 1
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் – ½ தேக்கரண்டி
- கரம் மசாலா – ¼ தேக்கரண்டி
- டொமேட்டோ சாஸ் – 2 தேக்கரண்டி
- சோயா சாஸ் – ½ தேக்கரண்டி
- கான்பிளவர் – ½ தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் 100 கிராம் காளான் மற்றும் 50 கிராம் முட்டைக்கோஸை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.
- அதனுடன் கால் கப் அளவு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.
- 3 தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் 3 தேக்கரண்டி மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும்.
- அதனுடன் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மல்லித் தூள், 1/4 தேக்கரண்டி கரம் மசாலா, 1 சிட்டிகை மஞ்சள்தூள், ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
- பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
- சிறிதளவு தண்ணீர் தெளித்து மசால் வடைக்கு பிசைவதுபோல் பிசைந்து கொள்ளவும்.
- அதனை சிறிது சிறிதாக உருட்டி கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சற்றுக் கூடுதலாக வைத்து தயார் செய்து வைத்துள்ள காளான் உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
- பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- பின்னர் எண்ணெய் வடித்து தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
- அதனுடன் 5 பல் பூண்டு மற்றும் 2 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
- சுருண்டு வரும் வரை வதக்கி கொள்ளவும்.
- அதனுடன் கால் கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.
- ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- ஒரு தக்காளி பழத்தை மிக்ஸியில் அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
- தக்காளி வதங்கிய பின்னர் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மல்லித்தூள், 1/4 தேக்கரண்டி கரம் மசாலா, ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும்.
- அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் இந்த மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு, 2 தேக்கரண்டி தக்காளி சாஸ், 1/2 தேக்கரண்டி சோயா சாஸ் எடுத்துக் கொள்ளவும்.
- 1/2 தேக்கரண்டிசோள மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கி அதனை மசாலாவுடன் சேர்த்து கலக்கவும்.
- மசாலா கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்து வைத்துள்ள காளானை சேர்த்து கலக்கவும்.
- நன்கு கலந்த பின்னர் அதனை லேசாக நசுக்கி விடவும்.
- சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.
- சுவையான ரோட்டு கடை காளான் மசாலா தயார்.
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் 100 கிராம் காளான் மற்றும் 50 கிராம் முட்டைக்கோஸை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.
2. அதனுடன் 1/4 கப் அளவு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.
3. 3 தேக்கரண்டி அரிசி மாவு , 3 தேக்கரண்டி மைதா மாவு மற்றும் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, சேர்த்துக் கொள்ளவும்.
4. அதனுடன் 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மல்லித் தூள், 1/4 தேக்கரண்டி கரம் மசாலா, 1 சிட்டிகை மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
5. சிறிதளவு தண்ணீர் தெளித்து மசால் வடைக்கு பிசைவதுபோல் பிசைந்து கொள்ளவும்.
6. அதனை சிறிது சிறிதாக உருட்டி கொள்ளவும்.
7. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சற்றுக் கூடுதலாக வைத்து தயார் செய்து வைத்துள்ள காளான் உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும்.
8. பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
9. பின்னர் எண்ணெய் வடித்து தனியே எடுத்து வைக்கவும்.
10. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
11. அதனுடன் 5 பல் பூண்டு மற்றும் 2 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
12. சுருண்டு வரும் வரை வதக்கி கொள்ளவும்.
13. அதனுடன் கால் கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.
14. ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
15. ஒரு தக்காளி பழத்தை மிக்ஸியில் அரைத்து சேர்த்துக் கொள்ளவும்.
16. தக்காளி வதங்கிய பின்னர் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி மல்லித்தூள், 1/4 தேக்கரண்டி கரம் மசாலா, ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும்.
17. அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
18. பின்னர் இந்த மசாலாவிற்கு தேவையான அளவு உப்பு, 2 தேக்கரண்டி தக்காளி சாஸ், 1/2 தேக்கரண்டி சோயா சாஸ் சேர்த்து கொள்ளவும்.
19. 1/2 தேக்கரண்டி சோள மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கி அதனை மசாலாவுடன் சேர்த்து கலக்கவும்.
20. மசாலா கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்து வைத்துள்ள காளானை சேர்த்து கலக்கவும்.
21. நன்கு கலந்த பின்னர் அதனை லேசாக நசுக்கி விடவும்.
22. சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.
23. சுவையான ரோட்டு கடை காளான் மசாலா தயார்.