Murukku Recipe in Tamil | முறுக்கு | How to make Murukku | Diwali Snack in Tamil

See this Recipe in English

முறுக்கு மொறு மொறுபான சிற்றுண்டி வகை, குறிப்பாக தீபாவளி நேரங்களில் முறுக்கு செய்யப்படும். இதில் பலவிதங்கள் உண்டு, உளுந்து முறுக்கு, பொட்டு கடலை முறுக்கு, தேங்காய்பால் முறுக்கு, பச்சரிசி முறுக்கு. இப்பொழுது உளுந்து மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, ஆகியவற்றை கொண்டு சுவையான உளுந்து முறுக்கு செய்வதை காணலாம். 

சுவையான முறுக்கு செய்ய சில குறிப்புகள்

  • உளுத்தம்பருப்பை வறுக்கும் பொழுது மிதமான தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுக்கவும். அதேசமயத்தில் உளுந்து நிறம் மாறாமல் லேசான பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும்.
  • முறுக்கு செய்து ஓரளவு ஆறிய பின்னர் ஏர் டைட் கன்டெய்னரில் மாற்றி மூடிவைக்கவும், இதனால் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும். 
  • விருப்பப்பட்டால் ½  தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்.
  • சிறிதளவு மிளகாய்த்தூள் சேர்த்துக் கொண்டால் முறுக்கு காரமாகவும், சுவையாகவும் இருக்கும்.
  • வெள்ளை எள் சேர்ப்பதற்கு பதிலாக சிறிதளவு கருப்பு எள் சேர்த்துக் கொள்ளலாம்.

இதர தீபாவளி பலகாரங்கள் –  தேங்காய் பால் முறுக்கு, மெது பக்கோடா, ரிப்பன் பக்கோடா,  தட்டை முறுக்கு.

இதர தீபாவளி இனிப்பு வகைகள் – ரவா லட்டு , மோட்டிச்சூர் லட்டுபாசிப்பருப்பு உருண்டை, பூந்திலட்டு, ரோஸ் பர்பி , குலாப் ஜாமுன், கோதுமை குலாப் ஜாமுன், கோதுமை அல்வா,  பாதாம் அல்வா, அசோகா அல்வா, திருநெல்வேலி அல்வா,   பால்கோவா, இனிப்பு காஜா, சாக்லேட் பர்ஃபி.

See this Recipe in English

முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்

  •  அரிசி மாவு  – 2 கப்
  •  வெள்ளை உளுந்து  – 1/2 கப்
  •  பொட்டுக்கடலை – 1/4 கப்
  •  பெருங்காயத்தூள்  – 1/4 தேக்கரண்டி
  •  வெள்ளை எள்  – 1 தேக்கரண்டி
  •  வெண்ணை  – 2 தேக்கரண்டி
  •  உப்பு தேவையான அளவு
  •  எண்ணெய் பொரிக்க தேவையான அளவு 

செய்முறை

1. ஒரு வாணலியில் 1/2 கப் வெள்ளை உளுந்து சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வறுக்கவும்.

2. அதனை ஓரளவுக்கு ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.

3. அதனை  சலித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

4. மிக்ஸி ஜாரில் 1/4 கப் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

5. ஒரு பாத்திரத்தில் 2 கப் அரிசி மாவு, 1/2 கப் உளுந்து மாவு,  1/4 கப் பொட்டுக்கடலை மாவு, 1 தேக்கரண்டி வெள்ளை எள் , 2 தேக்கரண்டி வெண்ணெய்,  1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

6. சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ளவும்.

7. முறுக்கு உரலில் ஸ்டார் அச்சு வைத்து  எண்ணெய் தடவிக் கொள்ளவும்.

8. முறுக்கு மாவை சேர்த்து உரலை டைட்டாக மூடி விடவும்.

9. ஒரு கரண்டி அல்லது பிளாஸ்டிக் கவரில் மெதுவாக பிழிந்து கொள்ளவும்.

10. சூடான எண்ணெயில் முறுக்கை பொரிக்கவும்.

11. 2-3 நிமிடங்களுக்குப் பிறகு திருப்பி போடவும்.

12.நுரை அடங்கிய பிறகு எடுத்து விடவும்.

13. ஆறவைத்து ஏர் டைட் கன்டெய்னரில் போட்டு மூடி வைக்கவும் 1 வாரம் வரை மொறுமொறுப்பாக இருக்கும்.

Leave a Reply