Instant Halwa recipe | Wheat flour Halwa in Tamil | கோதுமை அல்வா | Wheat halwa recipe | Halwa recipe in Tamil

See this Recipe in English

கோதுமை அல்வா கோதுமை மாவு, சர்க்கரை, நெய், ஆகியவற்றைக் கொண்டு செய்யக்கூடிய  அல்வா. இதனை மிகவும் சுலபமாக உடனடியாக செய்யலாம். பதினைந்து முதல் இருபது நிமிடங்களுக்கு உள்ளாக அசத்தலான அல்வா செய்யலாம்,  பொதுவாக கோதுமை அல்வா கோதுமை மாவை ஊற வைத்து, அரைத்து பால் எடுத்து, அந்தப் பாலை புளிக்க வைத்து அதன் பின்னால் செய்யப்படும், ஆனால் இது கோதுமை மாவைப் பயன்படுத்தி செய்வதால் நமக்கு வேலை மிகவும் குறைவு அதே சமயத்தில் நேரமும் மிச்சம் திடீர் விருந்தினர்களுக்கு ஏற்றது.

சுவையான கோதுமை அல்வா செய்ய சில குறிப்புகள்

  • தரமான கோதுமை மாவு மற்றும் நெய் பயன்படுத்தவும் சுவை அபாரமாக இருக்கும்.
  • கோதுமை மாவை பச்சை வாசனை போகும் வரை  நெய்யில் நன்கு வறுக்க வேண்டும்.
  • ஒரு பங்கு கோதுமை மாவுக்கு நான்கு பங்கு தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும்,  தண்ணீர்  சூடு குறைவாக இருந்தால் அல்வா முற்றிலும் பாழாகிவிடும்.
  • ஒரு பங்கு கோதுமை மாவு இரண்டு பங்கு சர்க்கரை சரியாக இருக்கும்/விருப்பத்திற்கு ஏற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
  • கடைசியில் நெய் பிரிந்து பாத்திரத்தில் ஒட்டாமல்  வரும்பொழுது அல்வா பதம் மிகச்சரியாக இருக்கும்.

Other Halwa Recipes – Wheat flour Halwa, Instant Halwa, Sooji ka Halwa, Ashoka Halwa, Badam Halwa, Thirunelveli halwa, How to make carrot halwa

Other Sweet Varieties – Suzhiyam, Motichur Laddu, Milk Powder Gulab Jamun, Chocolate Burfi,  Kozhukattai Recipe, Kezhvaragu Puttu, Carrot Milkshake, Wheat Biscuit

 

கோதுமை அல்வா செய்ய தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு –  1/2 கப்
  • சர்க்கரை –  1 கப் +  2 தேக்கரண்டி
  • நெய் –  1/2 கப் +  2 தேக்கரண்டி
  • முந்திரிப் பருப்பு –  1/4 கப்

செய்முறை

1. ஒரு கடாயில் அரை கப் நெய் சேர்த்து சூடாக்கவும்.

2. நெய் சூடானதும் கால் கப் முந்திரிப்பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

3. முந்திரிப்பருப்பு பொன்னிறமானதும் தனியே எடுத்து வைக்கவும்.

4. அதே வாணலியில் அரை கப் கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளவும்.

5. பச்சை வாசனை போகும் வரை நன்கு வறுத்துக் கொள்ளவும்.

6. கோதுமை மாவை வறுத்து கொண்டிருக்கும் பொழுது ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

7. தண்ணீர் நன்கு கொதித்த பிறகு வறுத்து வைத்துள்ள கோதுமை மாவில் பாதி அளவு கொதிக்கும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். 

8. மாவு நன்றாக வெந்து வருவதை இப்பொழுது பார்க்கலாம்.

9. மீதமுள்ள பாதி அளவு கொதிக்கும் தண்ணீரை சேர்த்துக் கொள்ளவும்.

10.  கைவிடாமல் நன்கு கிளறவும்.

11. ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

12. சர்க்கரை பொன்னிறமாக  caramelise ஆனதும் அதனை தயார் செய்து வைத்துள்ள அல்வாவில் சேர்க்கவும்.

13. நன்கு கலந்த பின்னர்,

14. ஒரு கப் அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

15. கைவிடாமல் நன்கு கிளறவும்.


16. கோதுமை மாவும் சர்க்கரையும் நன்கு சேர்ந்து வந்தபின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.

17. 2 தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.

18. இரண்டு மூன்று நிமிடங்களுக்கு கைவிடாமல் கிளறவும்.

 19. ஓரங்களில் நெய் பிரிந்து வந்த  பின்னர் அல்லது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது ஒரு தட்டில் மாற்றி விடவும். சுவையான கோதுமை அல்வா தயார். 

Leave a Reply