Pudina Sadam in Tamil | புதினா சாதம் | Mint Pulao Recipe | Mint Rice in Tamil | Pudina Pulao

புதினா சாதம் ஒரு விரைவாக செய்யக்கூடிய சுவையான சாதம். இது புதினா இலைகள், பிரிஞ்சி இலை, ஏலக்காய், முந்திரி பருப்பு, வேர் கடலை, மற்றும் வடித்த சாதம், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு வருவல், தயிர் பச்சடி, மற்றும் சிப்ஸ் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். புதினா இலைகள் மிகவும் புத்துணர்ச்சி தரக்கூடியது. இதனை நாம் பல விதங்களில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பொதுவாக எலுமிச்சை பழச்சாறுடன் புதினா இலை சேர்த்து குடிக்கலாம், வாய் துர்நாற்றத்திற்கு புதினா இலைகள் சிறந்த மருந்து. மேலும் புதினா சட்னி, புதினா புலாவ் மற்றும் பிரியாணி போன்றவற்றில் புதினா சேர்க்கலாம்.

புதினா சாதம்  பல விதங்களில் செய்யப்படுகிறது. உதாரணமாக புதினா பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மற்றும் தேங்காய் ஆகியவற்றை அரைத்து வதக்கிய வெங்காயம், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றுடன் சேர்த்து ஊற வைத்த பாசுமதி அரிசி சேர்த்து 3 விசில் வைத்து வேக வைக்கலாம், அல்லது  வடித்த சாதத்தை பயன்படுத்தி கீழே குறிப்பிட்டவாறு செய்யலாம். ஏற்கனவே வடித்து வைத்த சாதம் இருந்தால் புதினா சாதம் 10 நிமிடத்தில் செய்யலாம்.

சுவையான புதினா சாதம் செய்ய சில குறிப்புகள்

  • புதினா சாதம் செய்யும் பொழுது புதினாவுடன்  1/2 கட்டு கொத்தமல்லியும் அரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.
  • புதினாவுடன் சிறிதளவு இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றையும் அரைக்கலாம் அல்லது இஞ்சி பூண்டு விழுது தனியாக சேர்த்துக் கொள்ளலாம். 
  • புதினா சாதம் செய்யும் பொழுது  காரம் கூடுதலாக தேவைப்பட்டால் கரம் மசாலா  உடன் அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
  • நீங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு செய்யும் பொழுது பச்சை மிளகாயை அப்படியே சேர்ப்பதற்கு பதிலாக அரைத்து சேர்த்தால் நல்லது.
  • அரைத்த புதினா  விழுதுடன்1 /2 எலுமிச்சம்பழத்தை  பிழிந்தால் புதினா சாதம் மேலும் சுவையாக இருக்கும்.

 

இதர வகைகள் – காலிஃப்ளவர் சாதம், முட்டை ஃப்ரைட் ரைஸ், தக்காளி சாதம், தேங்காய் சாதம், சீரக சாதம், அரிசி பருப்பு சாதம், கத்திரிக்காய் சாதம், தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி, ஐதராபாத் முட்டை பிரியாணி, சிக்கன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, கல்யாண வீட்டு வத்த குழம்பு, சிறுதானிய பிரியாணி.

 புதினா சாதம் செய்ய தேவையான பொருட்கள்

  • 1/2 கட்டு புதினா
  • 2 கப் வடித்த சாதம்
  • 2 தேக்கரண்டி நெய்
  • 1 பிரிஞ்சி இலை
  • 3  ஏலக்காய்
  • 5 லவங்கம்
  • 10 முந்திரி பருப்பு
  • 1/4 கப் வேர்க்கடலை
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1  தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  • தேவையான அளவு உப்பு

 செய்முறை

1. அரை கட்டு புதினாவை சுத்தம் செய்து  இலைகளை தனியே எடுத்து கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.

 2. அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

3. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்.

4. நெய் சூடானதும்  1 பிரிஞ்சி இலை, 3 ஏலக்காய், 5 லவங்கம், 10 முந்திரி பருப்பு, 1/4 கப் வேர்க்கடலை ஆகியவற்றைச் சேர்த்து வறுக்கவும்.

5.  முந்திரி பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

6. அதனுடன் 1/2 தேக்கரண்டி சீரகம் மற்றும் 3 பச்சை மிளகாய் சேர்க்கவும்.

7. ஓரளவு வதங்கிய பின்னர் 1 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

8. வெங்காயம் வதங்கிய பின்பு 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

9. இப்பொழுது 1/2 தேக்கரண்டி கரம் மசாலா மற்றும் புதினா சாதத்திற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

 10. இப்பொழுது அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

 11. 2 கப் வடித்த சாதம் சேர்த்து கிளறவும்.

12. உருளைக்கிழங்கு வருவல் அல்லது தயிர் பச்சடியுடன் பரிமாறவும் சுவையான புதினா சாதம் தயார்.

Leave a Reply