See this Recipe in English
மெது பக்கோடா மெது போண்டா, பட்டணம் பக்கோடா, என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. மேலே மொறு மொறுப்பாகவும், உள்ளே மென்மையாக அதே சமயத்தில் கரகரவென்று இருக்கும். மாலை நேரத்தில் காப்பி அல்லது டீ யுடன் மெது பக்கோடா அருமையாக இருக்கும். இதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி செய்யலாம். சுவையான மெது பக்கோடா நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான மெது பக்கோடா செய்ய சில குறிப்புகள்
- வெண்ணையில் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்றாக கரையும் வரை கைகளால் கலக்க வேண்டும்.
- பேக்கிங் சோடா சரியாக கலக்கவில்லை என்றால் ஆங்காங்கே கட்டி கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது.
- வெண்ணை சேர்ப்பதற்கு பதிலாக டால்டா சேர்த்தும் செய்யலாம்.
- பக்கோடா மாவு கெட்டியாக இருக்க வேண்டும், தண்ணியாக இருந்தால் சிறிதளவு மாவு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
- மாவை உருட்டும் பொழுது மிகவும் அழுத்தாமல் லேசாக உருட்டிக் கொள்ளவும்.
- மிதமான தீயில் இருக்கும் எண்ணெயில் பொரிக்கவும், தீ அதிகமாக இருந்தால் கரிந்து விடும் வாய்ப்புள்ளது.
- குறைவான தீயில் வறுத்தால் எண்ணெய் குடிக்க வாய்ப்புள்ளது.
- தீயை அவ்வப்பொழுது கூட்டாமல்/குறைக்காமல் ஒரே தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
இதர வகைகள் – பாசிப்பருப்பு ஃப்ரை, பிரட் சில்லி, போண்டா சூப், பிரெட் பீட்சா, சாக்லேட் காபி, உடனடி மெதுவடை, உருளைக்கிழங்கு ரிங்ஸ், உடனடி தோசை, சேமியா போண்டா, மொரு மொரு வடை, பட்டாணி மசாலா சுண்டல், மசாலா கடலை, சாம்பார் வடை, காலிஃப்ளவர் ஸ்னாக்ஸ், இட்லி மாவு போண்டா, ஓவென் இல்லாமல் பீஸ்ஸா, மிளகாய் பஜ்ஜி,வெஜிடபிள் பர்கர், வெஜிடபிள் கட்லெட்.
See this Recipe in English
தேவையான பொருட்கள்
- வெண்ணை – 3 தேக்கரண்டி
- சமையல் சோடா – ½ தேக்கரண்டி
- கடலை மாவு – 1 கப் (100g)
- அரிசி மாவு – ½ கப் (80g)
- பொட்டுக்கடலை மாவு – ⅓ கப் (40g)
- பெரிய வெங்காயம் – 1
- இஞ்சி – 1 துண்டு
- கருவேப்பிலை – சிறிதளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
- பச்சை மிளகாய் – 3
- சோம்பு – ½ தேக்கரண்டி
- சீரகம் – ½ தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- பெருங்காயத் தூள் – ½ தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- சமையல் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி உருக்கிய வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
2. அதனுடன் ½ தேக்கரண்டி சமையல் சோடா சேர்க்கவும்.
3. இரண்டையும் சேர்த்து சமையல்சோடா நன்றாகக் கரையும் வரை கை களால் கலக்கவும்.
4. கட்டிகளில்லாமல் கலந்த பின்னர், 1 கப் கடலைமாவு சேர்த்துக் கொள்ளவும்.
5. அதனுடன் ½ கப் அரிசி மாவு சேர்க்கவும்.
6. அதனுடன் ⅓ கப் பொட்டுக்கடலை மாவு சேர்த்துக் கொள்ளவும்.
7. மாவு வகைகளை வெண்ணையுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
8. பின்னர் 1 பெரிய வெங்காயம், 1 துண்டு இஞ்சி, சிறிதளவு கறிவேப்பிலை, சிறிது கொத்தமல்லி, 3 பச்சை மிளகாய், ஆகியவற்றை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
9. அதனுடன் ½ தேக்கரண்டி சோம்பு, ½ தேக்கரண்டி சீரகம், ½ தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு, ½ தேக்கரண்டி பெருங்காயத் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
10. கைகளால் மீண்டும் ஒருமுறை நன்றாக கலந்து கொள்ளவும்.
11. பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியான மாவாக கலந்த பின்னர் சிறுசிறு உருண்டைகளாக லேசாக உருட்டிக் கொள்ளவும்.
12. மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் சேர்த்து பொரிக்கவும்.
13. அவ்வப்போது கிளறி விடவும் அல்லது கரிந்துவிடும் வாய்ப்புள்ளது. பக்கோடா பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து தனியே எடுக்கவும்.
14. சுவையான பக்கோடா தயார்.