See this Recipe in English
பிரட் சில்லி பிரட், மசாலா வகைகள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான சிற்றுண்டி. இது காலை, மதியம், மற்றும் மாலை நேரங்களில் உணவாக பயன்படுத்திக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுத்து அனுப்பலாம். இதனை 10 – 15 நிமிடங்களில் மிகவும் சுலபமான முறையில் செய்யலாம். சுவையான பிரட் சில்லி நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான பிரட் சில்லி செய்ய சில குறிப்புகள்
- பிரட் சில்லி செய்வதற்கு கோதுமை பிரட், வெள்ளை பிரட், மல்டி கிரெய்ன் பிரட், என எந்த வகையான பிரட்டையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து பிரெட்டை டோஸ்ட் செய்து கொள்ளலாம்.
- குழந்தைகளுக்கு செய்து கொடுப்பதாக இருந்தால் பச்சை மிளகாயை தவிர்த்து விடவும்.
- நீங்கள் விருப்பப்பட்டால் டொமேட்டோ சாஸ் அல்லது டொமேட்டோ கெட்சப் சேர்த்துக்கொள்ளலாம்.
இதர வகைகள் – பாசிப்பருப்பு ஃப்ரை, பிரட் சில்லி, போண்டா சூப், பிரெட் பீட்சா, சாக்லேட் காபி, உடனடி மெதுவடை, உருளைக்கிழங்கு ரிங்ஸ், உடனடி தோசை, சேமியா போண்டா, மொரு மொரு வடை, பட்டாணி மசாலா சுண்டல், மசாலா கடலை, சாம்பார் வடை, காலிஃப்ளவர் ஸ்னாக்ஸ், இட்லி மாவு போண்டா, ஓவென் இல்லாமல் பீஸ்ஸா, மிளகாய் பஜ்ஜி,வெஜிடபிள் பர்கர், வெஜிடபிள் கட்லெட்.
See this Recipe in English
தேவையான பொருட்கள்
- பிரெட் துண்டுகள் – 8
- வெண்ணை – 3 மேஜைக்கரண்டி
- சமையல் எண்ணெய் – 2 தேக்கரண்டி
- சீரகம் – ¼ தேக்கரண்டி
- பெரிய வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 3
- இஞ்சி பூண்டு விழுது – ½ தேக்கரண்டி
- தக்காளி – 2
- கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
- குடைமிளகாய் – 1/4 கப்
- மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
- கரம் மசாலா – ½ தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- சிகப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
- பிரட் சில்லி செய்வதற்கு 8 பிரட் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்.
- அதனை 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- கடாயில் 3 மேஜைக்கரண்டி வெண்ணை சேர்த்துக் கொள்ளவும்.
- வெண்ணை சூடானதும் நறுக்கி வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து டோஸ்ட் செய்து கொள்ளவும்.
- அதனை தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு கடாயில் 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
- எண்ணெய் சூடானதும் 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ளவும்.
- சீரகம் பொரித்து பிறகு 2 பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
- வெங்காயம் ஓரளவு வதங்கியதும், 2 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
- அதனுடன் 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- பின்னர் இரண்டு தக்காளி பழங்களை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
- தக்காளி மென்மையாக வதங்கிய பிறகு, கொத்தமல்லி தழை மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, தலா 1 கரண்டி மிளகாய் தூள் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
- ஓரளவு வதங்கிய பின்னர் 1/4 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- இப்பொழுது பிரெட் துண்டுகளை சேர்த்து கலக்கவும்.
- மசாலா நன்கு கலக்கும் வரை கிளறவும்.
- சிறிதளவு கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.
- சுவையான சில்லி பிரட் தயார்.
செய்முறை
1. பிரட் சில்லி செய்வதற்கு 8 பிரட் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்.
2. அதனை 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
3. கடாயில் 3 மேஜைக்கரண்டி வெண்ணை சேர்த்துக் கொள்ளவும்.
4. வெண்ணை சூடானதும் நறுக்கி வைத்துள்ள பிரட் துண்டுகளை சேர்த்து டோஸ்ட் செய்து கொள்ளவும்.
5. அதனை தனியே எடுத்து வைக்கவும்.
6. ஒரு கடாயில் 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து சூடானதும் 1/4 தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ளவும். சீரகம் பொரித்து பிறகு 2 பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
7. வெங்காயம் ஓரளவு வதங்கியதும், 2 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
8. அதனுடன் 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
9. பின்னர் இரண்டு தக்காளி பழங்களை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
10. தக்காளி மென்மையாக வதங்கிய பிறகு, கொத்தமல்லி தழை மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
11. அதனுடன் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி கரம் மசாலா, தலா 1 கரண்டி மிளகாய் தூள் மற்றும் சிவப்பு மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
12. தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
13. ஓரளவு வதங்கிய பின்னர் 1/4 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
14. ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
15. இப்பொழுது பிரெட் துண்டுகளை சேர்த்து கலக்கவும்.
16. மசாலா நன்கு கலக்கும் வரை கிளறவும்.
17. சிறிதளவு கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.
18. சுவையான சில்லி பிரட் தயார்.