Cabbage Manchurian in Tamil | முட்டைகோஸ் மஞ்சூரியன் | Muttaikose manchurian

முட்டைகோஸ் மஞ்சூரியன் ஒரு இந்திய சீன வகை உணவு. முட்டைகோஸை திருவி மசாலாவுடன் சேர்த்து பொரித்து அதற்குப் பின்னர் சாஸ் சேர்த்து கலக்க வேண்டும். முட்டைகோஸ் மஞ்சூரியன் பிரைடு ரைஸ், நூடுல்ஸ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். அது தவிர விசேஷ நாட்களில் விருந்தினருக்கு பரிமாறுவதற்கு இது ஒரு சுவையான உணவு வகை. பாரம்பரிய உணவு வகைகளில் இருந்து மாறுபட்டு வித்தியாசமான சுவையுடன்  சாப்பிட விருப்பப் படுபவர்கள்  முட்டைகோஸ் மஞ்சூரியன் தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம். 

சுவையான முட்டைகோஸ் மஞ்சூரியன் செய்ய சில குறிப்புகள்

  1. முட்டைகோஸ் மஞ்சூரியன் செய்வதற்கு முட்டைக்கோசை துருவிக்கொள்ளவும், பொடியாக நறுக்கி  செய்வது கடினம்.
  2. முட்டைக் கோசுடன் துருவிய கேரட் சேர்த்துக் கொள்ளலாம் சுவை கூடுதலாக இருக்கும்.
  3. முட்டைகோஸ் உருண்டைகளை பொரிக்கும் பொழுது மிதமான தீயில் பொறுமையாக பொரிக்கவும் அல்லது உள்ளே வேகாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது.
  4. மஞ்சூரியன் செய்யும்பொழுது வெங்காயம் குடை மிளகாய் வெங்காயத்தாள் போன்றவை நன்கு சுருண்டு வரும் வரை மென்மையாக வதக்கிக் கொள்ளவும்.
  5. கான்பிளவர் மாவு தண்ணீரில் கரைத்து சேர்த்து பிறகு அதனுடன் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம், அதன்பின் உருண்டைகளை சேர்த்து வெங்காயத்தாள் தூவி அடுப்பை அனைத்து விடவும் இப்பொழுது  முட்டைகோஸ் மஞ்சூரியன் செமி கிரேவி கிடைக்கும். 

இதர வகைகள் – சில்லி இட்லிகாலிபிளவர் மஞ்சூரியன், சில்லி மசாலா இட்லி, மசாலா பாஸ்தா, ஓவன் இல்லாமல் பீட்சா, பிரெட் பீட்சா, பீஸ்ஸா செய்வது எப்படி?, பர்கர் பன், சிக்கன் பர்கர், பர்கர் வடை

 

முட்டைக்கோஸ் பொரிக்க தேவையான பொருட்கள்

  • முட்டைக்கோஸ் –  300 கிராம்
  • பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1
  • இஞ்சி பூண்டு விழுது – 1  தேக்கரண்டி
  • மிளகுத்தூள் – 1/2  தேக்கரண்டி 
  • உப்பு –  தேவையான அளவு 
  • சிவப்பு மிளகாய் தூள் –  1/2 தேக்கரண்டி 
  • மைதா –  2 தேக்கரண்டி
  • கார்ன் ஃப்ளோர் –  2 தேக்கரண்டி
  • எண்ணெய் –  பொரிக்க தேவையான அளவு 

மஞ்சூரியன் செய்ய தேவையான பொருட்கள்

  • சமையல் எண்ணெய் –  2 தேக்கரண்டி
  • பொடியாக நறுக்கிய பூண்டு பற்கள் – 5
  • பொடியாக நறுக்கிய இஞ்சி – 1  துண்டு 
  • பச்சை மிளகாய் –  3 
  • பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1
  • வெங்காயத்தாளில் வெள்ளைப்பகுதி நறுக்கியது
  • பொடியாக நறுக்கிய குடை மிளகாய் – 1  சிறியது 
  • சோயா சாஸ் –  2 தேக்கரண்டி
  • சில்லி சாஸ் –  2 தேக்கரண்டி
  • உப்பு –  தேவையான அளவு 
  • கார்ன் ஃப்ளோர் –  2 தேக்கரண்டி 
  • வெங்காயத் தாளின் பச்சை பகுதி நறுக்கியது 

செய்முறை

1. முட்டைகோஸ் கேரட் திருவும் கட்டையில் வைத்து நைசாக துருவிக் கொள்ளவும்.

2. துருவிய பின்னர் முட்டைக்கோசை  பிழிந்து தண்ணீரை தனியே எடுக்கவும்.

3. அதனுடன் ஒரு  பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, அரை தேக்கரண்டி மிளகுத்தூள் ஆகியவற்றை சேர்க்கவும் .

4. தேவையான அளவு உப்பு, அரை தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 2 தேக்கரண்டி மைதா மற்றும் 2 தேக்கரண்டி கான்பிளவர் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். 

5. அதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

6. மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் உருண்டைகளை சேர்த்து பொரித்துக் கொள்ளவும்.

7. பொன்னிறமானதும் தனியே எடுத்து வைக்கவும்.

8. மஞ்சூரியன் செய்வதற்கு ஒரு பானில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் ஐந்து பூண்டுப் பற்களை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஒரு சிறிய துண்டு இஞ்சி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

9. அதனுடன் 3 பச்சை மிளகாயை நடுவில் கீறி சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

10. பின்னர் பெரிய வெங்காயம் ஒன்று,வெங்காயத்தாள் வெள்ளைப் பகுதி மற்றும் ஒரு சிறிய குடை மிளகாய் ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

11. வெங்காயம் நன்கு சுருண்டு வரும் வரை வதக்கிக் கொள்ளவும். 

12.அதனுடன் இரண்டு தேக்கரண்டி சோயா சாஸ் மற்றும் 2 தேக்கரண்டி சில்லி சாஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

 13. அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும், பின்னர் 2 தேக்கரண்டி வரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து அதனை சேர்த்துக் கொள்ளவும்.

 14. அதனுடன் பொரித்து வைத்துள்ள முட்டைகோஸை சேர்த்துக் கொள்ளவும் .

15. அதனை சாஸுடன் நன்கு கலந்து கொள்ளவும்.

16. கடைசியாக  வெங்காயத்தாளில் பச்சை பகுதிகளை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

17. சுவையான முட்டைகோஸ் மஞ்சூரியன் தயார்.

Leave a Reply