Carrot Payasam in Tamil | கேரட் பாயசம் | Carrot Kheer recipe in Tamil | How to make carrot payasam in Tamil

See this Recipe in English

கேரட் பாயசம் கேரட், ஜவ்வரிசி, பால், சர்க்கரை, ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான பாயசம், வழக்கமான பால்பாயசம் போன்று இல்லாமல் கேரட்டின் சுவை மணமும் சேர்ந்து இந்த பாயசம் அலாதியாக இருக்கும்.  சுவையான கேரட் பாயசத்தை நீங்களும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்து சுவைத்து மகிழுங்கள்.

சுவையான கேரட் பாயசம் சில குறிப்புகள்

  • பாயசம் செய்வதற்கு பிரஷ்ஷான கேரட் பயன்படுத்தவும்.
  • முந்திரிப்பருப்பு மற்றும் பாதாம்  இரண்டையும் விருப்பப்பட்டால் சேர்க்கலாம் அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி செய்யலாம்.
  • நைலான் ஜவ்வரிசி பயன்படுத்தி பாயசம் செய்துள்ளேன்,   நைலான் ஜவ்வரிசிக்கு பதிலாக  மாவு ஜவ்வரிசி பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • மாவு ஜவ்வரிசி பயன்படுத்துவதாக இருந்தால் அதனை நெய்யில் வறுக்க தேவையில்லை,  ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து பின்னர் வேக வைத்துக் கொள்ளவும்.
  • விருப்பத்திற்கு ஏற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
  • பாயசம் செய்வதற்கு தண்ணீர் சேர்க்காத திக்கான பால் பயன்படுத்திக் கொள்ளவும்.
  • சர்க்கரைக்கு பதிலாக அதே அளவு கண்டன்ஸ்டு மில்க் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
  • ஜவ்வரிசிக்கு பதிலாக சேமியா சேர்த்தும் இதே முறையில் பாயசம் செய்யலாம். 
  • குங்குமப்பூவும் விருப்பபட்டால் சேர்க்கலாம் அல்லது சேர்க்காமலும் செய்யலாம்.

இதர பாயசம் வகைகள் – கோதுமை ரவை பாயசம், ரவா பாயசம், ஜவ்வரிசி பாயசம், சிறுதானிய பாயசம், பருப்பு பாயசம், பாதாம் பால்.

அல்வா வகைகள் –  திருநெல்வேலி அல்வா, கேரட் அல்வா, அசோகா அல்வா, பாதாம் அல்வா, கோதுமை அல்வா, காசி அல்வா, உடனடி அல்வா.

 

See this Recipe in English

 

கேரட் பாயசம் செய்ய தேவையான பொருட்கள்

  • கேரட் – 200g
  • பால் – 750ml + 125ml
  • பாதாம் பருப்பு – 20
  • முந்திரிப் பருப்பு – 5
  • நெய் – 2  தேக்கரண்டி 
  • ஜவ்வரிசி – ¼  கப்
  • சர்க்கரை – ½ cup – 100g
  • குங்குமப்பூ – 1  சிட்டிகை
  • ஏலக்காய் – 3
  • வறுத்த முந்திரி &  திராட்சை –  தேவையான அளவு

செய்முறை

1. ஒரு சிறிய கப்பில் ½  கப் (125ml) பால் சேர்த்துக் கொள்ளவும்,  அதனுடன் 20 பாதாம் மற்றும் 5 முந்திரிப் பருப்புகளை சேர்த்து பத்து பதினைந்து நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் 750ml  பால் சேர்த்துக் கொள்ளவும்,  பால் பொங்கி வந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.

3. ஒரு பானில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும்,  200g  கேரட்டை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

4. அதனை 2 – 3 நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும்.

5. பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.

6. ஒரு பானில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து  சூடானதும் கால் கப் நைலான் ஜவ்வரிசி சேர்த்துக் கொள்ளவும்,  அதனை மிதமான தீயை விட குறைவாக வைத்து  2 – 3 நிமிடங்களுக்கு நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

7. பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 – 6 நிமிடங்களுக்கு  வேக வைத்துக் கொள்ளவும்.

8. கேரட்  வெந்த பின்னர் ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து கொள்ளவும்,  அதன் பாலில் ஊற வைத்துள்ள முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து கொள்ளவும்.

9. அதனை நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

10. பின்னர் வேக வைத்துள்ள ஜவ்வரிசியுடன் கேரட் விழுதை சேர்த்து கலக்கவும்.

11. நன்றாக கலந்து  காய்ச்சி வைத்துள்ள பால் சேர்த்துக் கலக்கவும்.

12. பின்னர் ½  கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

13. அதனுடன் 1  சிட்டிகை குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளவும்.

14. 3 ஏலக்காய்களை உரலில் இடித்து சேர்த்துக் கொள்ளவும்.

15. கடைசியாக சிறிதளவு முந்திரி மற்றும் திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் நன்கு கலந்து ஒரு நிமிடத்திற்குப் பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

16. சுவையான கேரட் பாயசம் தயார். 

Leave a Reply