See this Recipe in English
கத்தரிக்காய் சட்னி கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது இட்லி, தோசை, சப்பாத்தி, மற்றும் தயிர் சாதத்துடன் சுவையாக இருக்கும். எப்போதும் தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னி என்ற செய்வதை தவிர்த்து இதுபோன்ற வித்தியாசமான சட்னி வகைகளை செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி உண்பார்கள்.
சுவையான கத்தரிக்காய் சட்னி செய்ய சில குறிப்புகள்
- சட்னி செய்வதற்கு செய்வதற்கு பிஞ்சு கத்தரிக்காய்களை பயன்படுத்தவும்.
- சாதத்திற்கு சாப்பிடுவதாக இருந்தால் சிறிதளவு புளியை சேர்த்து கொதிக்கவிட்டு பின்னர் பயன்படுத்தவும்.
- உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.
- சின்ன வெங்காயம் சேர்ப்பதற்கு பதிலாக பெரிய வெங்காயம் சேர்த்தும் சட்னி செய்யலாம்.
- பச்சைமிளகாய் சேர்த்திருப்பதால், மிளகாய்தூள் விருப்பபட்டால் சேர்க்கலாம் அல்லது சேர்க்காமலும் செய்யலாம்.
- கத்தரிக்காய்களை நறுக்கி விட்டு சிறிது நேரம் தண்ணீரில் ஊற விட்டு பின்னர் சேர்த்துக் கொண்டால் கத்தரிக்காயின் கசப்பு தன்மை நீங்கி சட்னி சுவையாக இருக்கும்.
இதர வகைகள் – வேர்க்கடலை சட்னி, பூண்டு இட்லி பொடி, இட்லி மிளகாய் பொடி, வெங்காய சட்னி, கமகமக்கும் புதினா சட்னி, பீர்க்கங்காய் துவையல், ஹோட்டல் சுவையில் தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி, புதினா சட்னி, பூண்டு தக்காளி தொக்கு , தக்காளி சட்னி , பருப்பு துவையல்.
See this Recipe in English
தேவையான பொருட்கள்
- கத்தரிக்காய் – 6
- உருளைக்கிழங்கு – 1
- சமையல் எண்ணெய் – 2 தேக்கரண்டி
- கடுகு – ½ தேக்கரண்டி
- சீரகம் – ½ தேக்கரண்டி
- கருவேப்பிலை – சிறிதளவு
- பச்சை மிளகாய் – 3
- சின்ன வெங்காயம் – 15
- பூண்டு பற்கள் – 20
- தக்காளி – 1
- உப்பு – தேவையான அளவு
- மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை
1. ஒரு பிரஷர் குக்கரில் 2 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
2. எண்ணெய் சூடானதும் ½ தேக்கரண்டி கடுகு, ½ தேக்கரண்டி சீரகம், சிறிதளவு கறிவேப்பிலை, 3 பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
3. அதனுடன் 15 சின்ன வெங்காயம், 20 பல் பூண்டு ஆகியவற்றை சேர்த்து மென்மையாக வதக்க வும்.
4. அதனுடன் 1 தக்காளியை நறுக்கி சேர்த்து கொள்ளவும், தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.
5. பின்னர் ½ தேக்கரண்டி மஞ்சள்தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
6. மிளகாய் தூள் பச்சை வாசனை போக வதக்கி பின்னர், 1 உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
7. 6 கத்தரிக்காய்களை நீளவாக்கில் நறுக்கி சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் சேர்த்துக் கொள்ளவும்.
8. ஓரளவு வதங்கிய பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரை மூடி 2 விசில் வேக வைக்கவும்.
9. பிரஷர் ரிலீஸ் ஆனதும், குக்கரை திறந்து கரண்டி அல்லது மத்து வைத்து மசித்து விடவும்.
10. கடைசியாக சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கவும்.
11. சுவையான கத்தரிக்காய் சட்னி தயார்.