Masala Peanut | மசாலா கடலை | Masala Peanut recipe in Tamil | Masala kadalai

See this Recipe in English

மசாலா கடலை மாலை நேரங்களில் காபி அல்லது டீ உடன் சுவையாக இருக்கும்,  இது ஒரு  மொறுமொறுப்பான மற்றும் காரசாரமான  மாலை நேர சிற்றுண்டி,  இதனை விரைவாகவும் மிகவும் சுலபமாகவும் செய்யலாம்.  வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி செய்யலாம். சுவையான மசாலா கடலை வீட்டிலேயே நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

சுவையான மசாலா கடலை செய்ய சில குறிப்புகள்

  • மசாலா கடலை செய்வதற்கு பச்சையாக அல்லது வறுத்த வேர்க்கடலை பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • பச்சை வேர்கடலை பயன்படுத்தி உள்ளேன்,  வறுத்த வேர்கடலை சிலசமயங்களில் சிக்கு வாடை வர வாய்ப்புள்ளது.
  • விருப்பப்பட்டால் பச்சை வேர்க்கடலையை வறுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • மேலும் மொறு மொறுப்பாக்க விருப்பப்பட்டால் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம் அல்லது அரை தேக்கரண்டி சோள மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
  • மிளகாய்த்தூள் சேர்க்கும்போது உங்கள் காரத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • மசாலா கலக்கும்போது சிறிதளவு பூண்டு இடித்து சேர்த்துக்கொள்ளலாம் அப்பொழுது மசாலா கடலை சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும்.
  • பேக்கரி ஸ்டைலில் செய்வதற்காக சிறிதளவு ஆரஞ்சு நிறம் பயன்படுத்தி உள்ளேன். விருப்பப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது ஆரஞ்சு நிறம்  சேர்க்காமலும் மசாலா கடலை செய்யலாம்.

இதர வகைகள் –  பாசிப்பருப்பு ஃப்ரை, பிரட் சில்லி, போண்டா சூப்,  பிரெட் பீட்சா, சாக்லேட் காபி, உடனடி மெதுவடை, உருளைக்கிழங்கு ரிங்ஸ், உடனடி தோசை, சேமியா போண்டா, மொரு மொரு வடை, பட்டாணி மசாலா சுண்டல், மசாலா கடலை, சாம்பார் வடை, காலிஃப்ளவர்  ஸ்னாக்ஸ், இட்லி மாவு போண்டா, ஓவென் இல்லாமல் பீஸ்ஸா, மிளகாய் பஜ்ஜி,வெஜிடபிள் பர்கர் , வெஜிடபிள் கட்லெட்.

 

See this Recipe in English

மசாலா கடலை செய்ய தேவையான பொருட்கள்

  • 2 கப்  வேர்க்கடலை (400 grams)
  • 8 தேக்கரண்டி கடலை மாவு (80 grams)
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 சிட்டிகை ஆரஞ்சு ஃபுட் கலர் ( இரண்டு தேக்கரண்டி தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும்)
  • 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள்
  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
  • 1/2 தேக்கரண்டி சீரகம் 
  • தேவையான அளவு உப்பு 
  • கருவேப்பிலை சிறிதளவு
  • எண்ணெய்  பொறிக்க தேவையான அளவு 

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் 8 தேக்கரண்டி கடலை மாவு சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, அரை தேக்கரண்டி சீரகம், அரை தேக்கரண்டி  மிளகு தூள், ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

2. அரை தேக்கரண்டி கரம் மசாலா,  ஒரு தேக்கரண்டி மிளகாய்த்தூள், ஆரஞ்சு ஃபுட் கலர்  ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். 

3. இப்பொழுது சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

4. அதனுடன் வேர்க்கடலை சேர்த்து கொள்ளவும். 

5. எல்லா இடங்களிலும் மசாலா படும்படி நன்றாக கலந்து கொள்ளவும்.

6. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்,  எண்ணெய் சூடானதும் தயாராக வைத்துள்ள மசாலா வேர்க்கடலை உதிர்த்து சேர்த்துக்கொள்ளவும்.

7.  மிதமான சூட்டில் 3 – 4 நிமிடங்களுக்கு பொரித்தெடுக்கவும்.

8. அவ்வப்போது ஒரு கரண்டி வைத்து கிளறவும்,  அப்பொழுதுதான்  வேர்கடலை  சமமாக  வேகும். 

9.   நுரை அடங்கிய பின்னர், எண்ணெய் வடித்து தனியே வைக்கவும்.

10. சிறிதளவு கருவேப்பிலையை அதே எண்ணெயில் சேர்த்து பொரித்து மசாலா வேர்க்கடலையுடன் கலந்து கொள்ளவும்.

11. சுவையான மசாலா கடலை தயார்.

Leave a Reply