Motichoor Laddu in Tamil | மோத்திசூர் லட்டு | Laddu recipe | Laddu in Tamil

See this Recipe in English

மோத்திசூர் லட்டு சாதாரண லட்டு போல இல்லாமல் மிகவும் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். பெரிய பூந்தி இல்லாமல் சிறுசிறு பூந்திகளை இட்டு அதில் செய்யப்படுவதே மோத்தி சூர் லட்டு. இதனை குட்டி முத்து லட்டு என்றும் கூறுவார்கள். இந்த வகை லட்டு தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் மிகவும் பிரபலம், இந்த லட்டு செய்வதற்கு என்றே தனியாக பூந்தி கரண்டி கிடைக்கும், ஆனால் மோத்தி சூர் லட்டு செய்யும் கரண்டி இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சுலபமான முறையில் மோட்டிச்சூர் லட்டு செய்முறையை கீழே குறிப்பிட்டுள்ளேன் நீங்களும் இந்த தீபாவளிக்கு செய்து சுவைத்து மகிழுங்கள்.

சுவையான மோத்தி சூர் லட்டு செய்ய சில குறிப்புகள்

  • பூந்தி மாவு கலக்கும் பொழுது தோசை மாவு பக்குவத்திற்கு கலக்கவும், அதிக கெட்டியாகவும் அல்லது மாவு நீர்த்து இருக்கக் கூடாது.
  • அவசியம் பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளவும், பேக்கிங் சோடா சேர்க்காமல் பூந்தி முத்து முத்தாக வராது.
  • 100 கிராம் கடலை மாவிற்கு 200 கிராம் சர்க்கரை சேர்த்து உள்ளேன், இது மிகச் சரியான அளவு, ஆனால் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
  • சர்க்கரை பாகு காய்ச்சும் பொழுது ஒரு பிசுபிசுப்பு தன்மை வரும் வரை காய்ச்சவும், இந்த லட்டுக்கு கம்பிப் பதம் வரும்வரை காய்ச்ச கூடாது.
  • சிறிதளவு பொடித்த முந்திரி பருப்பு சேர்த்து உள்ளேன் அதற்கு பதிலாக, காயவைத்த முலாம் பழ விதைகள், பிஸ்தா, பாதாம் போன்ற வற்றையும் லேசாக இடித்து சேர்த்துக் கொள்ளலாம்.

தீபாவளி பலகாரங்கள் – பொட்டுக்கடலை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, மெது பக்கோடா, ரிப்பன் பக்கோடா,  தட்டை முறுக்கு, முறுக்கு.

தீபாவளி இனிப்பு வகைகள் – ரவா லட்டு , மோட்டிச்சூர் லட்டுபாசிப்பருப்பு உருண்டை, பூந்திலட்டு, ரோஸ் பர்பி , குலாப் ஜாமுன், கோதுமை குலாப் ஜாமுன், கோதுமை அல்வா,  பாதாம் அல்வா, அசோகா அல்வா, திருநெல்வேலி அல்வா,   பால்கோவா, இனிப்பு காஜா, சாக்லேட் பர்ஃபி.

 

தேவையான பொருட்கள்

  • கடலை மாவு – 1 கப் – 100g
  • சர்க்கரை – 1 கப் – 200g
  • உப்பு – 1 சிட்டிகை
  • பேக்கிங் சோடா – 1 சிட்டிகை
  • ஆரஞ்சு நிறம் – 1 சிட்டிகை
  • ஏலக்காய் பொடி – ¼ தேக்கரண்டி
  • முந்திரி பருப்பு – 10
  • சமையல் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

 

செய்முறை

1. பூந்தி செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 1 கப் கடலை மாவு சேர்த்துக் கொள்ளவும்.

2. அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளவும்.


3. பின்னர் 1 சிட்டிகை பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளவும்.


4. ஒரு சிட்டிகை ஆரஞ்சு நிறம் சேர்த்துக் கொள்ளவும்.

5. ஒருமுறை கலந்த பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் பேஸ்ட் போல கலக்கவும்.

6. பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

7. ஒரு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், பூந்தி கரண்டி அல்லது மோத்தி சூர் லட்டு கரண்டி இருந்தால் பயன்படுத்தலாம் அல்லது ஒரு வடிகட்டியில் சிறிது சிறிதாக மாவை ஊற்றி கையால் தட்டவும்.

8. நுரை அடங்கி பூந்தி வெந்தபிறகு ஒரு வடிகட்டியால் எடுக்கவும், பூந்தி 20 – 30 வினாடிகளில் வெந்துவிடும்.

9. ஒரு பாத்திரத்தில் 1 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

10. அதனுடன் 1/4  தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து கொள்ளவும்.

11. அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.

12. சர்க்கரை கரைந்த பின்னர், பிசுபிசுப்பு தன்மை வரும் வரை கொதிக்க வைக்கவும்.

13. இப்பொழுது தயார் செய்துள்ள பூந்திகளை அதில் சேர்க்கவும்.

14. மிதமான தீயில் வைத்து 2 நிமிடங்கள் கிளறவும்.

15. பின்னர் அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்.

16. 20 நிமிடங்களுக்கு பின்னர் கிளறவும், பூந்தி சர்க்கரை பாகை உறிஞ்சி மென்மையாக இருப்பதை பார்க்கலாம்.

17. இப்பொழுது பொடித்து வைத்துள்ள முந்திரிப் பருப்புகளை சேர்க்கவும்.


18. ஒருமுறை கிளறிய பின்னர், கையில் நெய் தடவி சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். சுவையான மோத்தி சூர் லட்டு தயார்.

Leave a Reply