See this Recipe in English
பால் பன் இது மிகவும் மென்மையான இது மைதா மாவு ஈஸ்ட் சர்க்கரை ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது, நாம் பொதுவாக பலவகையான செய்யலாம். பர்கர் பன், இனிப்பு பன், கார பன், டூட்டி ப்ரூட்டி பன், சாக்லெட் பன், போன்றவை பேக்கரிகளில் மிகவும் பிரபலம்.
இந்தியாவில் pav bun பிரபலம் குறிப்பாக வட இந்தியாவில் மிக மிகப் பிரபலம் வட இந்தியர்கள் pav bhaji எனும் மாலை நேர சிற்றுண்டி உடன் இந்த பன் வைத்து உண்பார்கள். பால் பன் கிட்டத்தட்ட pav bun போன்றே செய்யப்படும். ஆனால் பால்பன் சூடான பால், காபி/ டீ ஆகியவற்றுடன் சாப்பிடலாம் அல்லது ஜாம் தடவி குழந்தைகளுக்கு தரலாம், சாஸ் அல்லது க்ரீம் வைத்தும் தரலாம் வெறும் பால் பன் கூட சுவையாக இருக்கும்.
சுவையான பால்பன் செய்ய சில குறிப்புகள்
- பால்பன் செய்யும்பொழுது நீங்கள் மைதா அல்லது கோதுமை மாவு பயன்படுத்தலாம்.
- மாவு பிசையும் பொழுது நீங்கள் விருப்பப்பட்டால் 1 முட்டை சேர்த்துக் கொள்ளலாம்.
- இளம் சூடான பாலில் ஈஸ்ட் சேர்த்து கலக்கவும், கொதிக்கும் பால் அல்லது ஆறிய பால் பயன்படுத்தக்கூடாது.
- விருப்பப்பட்டால் மேலும் சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம் அப்பொழுது பன் இனிப்பு சுவையுடன் இருக்கும்.
- மாவு பிசையும் பொழுது நீங்கள் இரண்டு தேக்கரண்டி பால் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம்.
இதர வகைகள் – வெஜிடபிள் பர்கர், தவா பர்கர், சிக்கன் பர்கர், பர்கர் வடை, முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக், ஹனி கேக், ரவா கேக், முட்டை சேர்க்காத சாக்லேட் கேக், ஓரியோ கேக், ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி? ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக், பாவ் பன், பால் பன், முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக்.
See this Recipe in English
பால்பன் செய்ய தேவையான பொருட்கள்
- 300 ml சூடான பால்
- 1 தேக்கரண்டி ஈஸ்ட்
- 2 தேக்கரண்டி சர்க்கரை
- 3 கப் மைதா
- 1 தேக்கரண்டி உப்பு
- 4 தேக்கரண்டி வெண்ணெய்
- 2 தேக்கரண்டி பால்
செய்முறை
1. ஒரு கப்பில் 300 ml இளம் சூடான பால் சேர்க்கவும் அதனுடன் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை, மற்றும் ஒரு தேக்கரண்டி ஈஸ்ட் சேர்த்து கலக்கவும்.
2. ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.
3. ஒரு அகலமான பாத்திரத்தில் 3 கப் மைதா மாவு, 1 தேக்கரண்டி உப்பு, ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
4. அதனுடன் தயாராக வைத்துள்ள பால் ஈஸ்ட் கலவையை சேர்த்து பிசையவும்.
5. இப்பொழுது மூன்று தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து பிசையவும்.
6. மென்மையாக மாவு செய்ததும், பாத்திரத்தில் சிறிதளவு வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவி அதன் மேல் மாவை வைத்து மூடவும்.
7. கதகதப்பான இடத்தில் ஒரு மணி நேரம் வைக்கவும்.
8. இப்பொழுது மாவு உப்பி வரும், அதனை மீண்டும் ஒரு நிமிடத்திற்கு பிசையவும்.
9. அதனை ஒரே அளவிலான ஒன்பது உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும்.
10. வெடிப்புகள் இல்லாமல் உருட்டிக் கொள்ளவும்.
11. ஒரு பேக்கிங் பானில் வெண்ணை தடவி அதன் மேல் தயாராக வைத்துள்ள மாவு உருண்டைகளை 1 இன்ச் இடைவெளியில் வைக்கவும்.
12. மீண்டும் மூடி வைத்து அரை மணி நேரம் வைக்கவும்.
13. இப்போது மாவு உப்பி வரும், அதன்மேல் ஒரு சிறிய பிரஷ் வைத்து பால் தடவவும்.
14. ஓவனை 180 டிகிரி செல்சியஸ் அல்லது 360 டிகிரி பாரன்ஹீட்டுக்கு ப்ரீ ஹீட் செய்யவும். மாவை உள்ளே வைக்கவும் 35 முதல் 40 நிமிடங்களுக்கு வேக வைக்கவும் அல்லது மேலே பொன்னிறமாகும் வரை வைக்கவும்.
15. 40 நிமிடங்களுக்கு பின்னர் வெளியே எடுத்து உருக்கிய வெண்ணெய் தடவி பின்னர் ஆற வைக்கவும்.
16. இப்பொழுது பஞ்சு போன்ற பால்பன் தயார்.