Paruppu Podi for Idli | ஆந்திரா ஸ்டைல் பருப்பு இட்லி பொடி | Paruppu idli podi

பருப்பு இட்லி பொடி சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த இட்லி பொடி வகை,  இதனை இட்லி மட்டுமல்லாமல் சுடு சாதத்துடன் சேர்த்து நெய் சேர்த்து பிசைந்து சாப்பிடலாம்.  பொதுவாக  குழந்தைகள் காரமான இட்லிபொடி சாப்பிடமாட்டார்கள்,  ஆனால் பருப்பு இட்லி பொடி அவ்வளவாக காரம் இருக்காது, அதே சமயத்தில் சுவையும் மணமும் நன்றாக இருக்கும் சிறு குழந்தைகள்  விரும்பி உண்பார்கள்.

 சுவையான பருப்பு இட்லி பொடி செய்ய சில குறிப்புகள்

  • கடலைப்பருப்பு, துவரம் பருப்பு,  பாசிப்பருப்பு,  போன்றவற்றை மிதமான தீயில் வைத்து நிறம் மாறும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  • மிளகாய் வறுக்கும் பொழுது தீ குறைவாக வைத்துக் கொள்ளவும் அல்லது மிளகாய் கருப்பாகி விடும் வாய்ப்பு உள்ளது.
  • உங்கள் சுவைக்கேற்ப உப்பு மற்றும் காரம் சேர்த்துக் கொள்ளலாம்.
  • பருப்பு பொடி  அரைக்கும் பொழுது சற்று நைசாக அரைத்துக் கொள்ளவும்,  இட்லி பொடி கொரகொரப்பாக இருக்கும் ஆனால்  பருப்பு பொடி சற்று நைசாக இருந்தால் சுவையாக இருக்கும்.
  •  ஈரமில்லாத மிக்ஸியில் அரைத்து, சுத்தமான டப்பாவில் வைத்தால் 3 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.

இதர வகைகள் – பூண்டு இட்லி பொடி,  இட்லி மிளகாய் பொடி, வெங்காய சட்னி, கமகமக்கும் புதினா சட்னி, பீர்க்கங்காய் துவையல், ஹோட்டல் சுவையில் தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி, புதினா சட்னி, பூண்டு தக்காளி தொக்கு , தக்காளி சட்னி , பருப்பு துவையல்.

 

 

பருப்பு இட்லி பொடி செய்ய தேவையான பொருட்கள்

  • கடலைப்பருப்பு – ¼  கப்
  • துவரம் பருப்பு – ¼ கப்
  • பாசிப்பருப்பு – ¼ கப்
  • சீரகம் – 2  தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் – 15
  • கல்லுப்பு – ½  தேக்கரண்டி

செய்முறை

1. ஒரு பானில் கடாயில் ¼  கப் கடலைப் பருப்பு சேர்த்துக் கொள்ளவும்  மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வறுத்துக் கொள்ளவும்,  பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

2. அதே பேனில் ¼  கப் துவரம் பருப்பு சேர்த்துக் கொள்ளவும்,  மிதமான  தீயில் வைத்து லேசான பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்,  பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

3. இப்பொழுது ¼  கப் பாசிப்பருப்பு சேர்த்துக் கொள்ளவும்,  குறைவான தீயில் வைத்து லேசான பொன்னிறம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும், 

4. பின்னர் 2 தேக்கரண்டி சீரகம் சேர்த்துக் கொள்ளவும், 15  காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

5. நன்றாக ஆறவிடவும்.

6. ஆறிய பின்னர் சுத்தமான மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் அரை தேக்கரண்டி கல் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

7. அதனை ஓரளவு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

8. சுத்தமான டப்பாவில் வைத்தால் 3 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். 

Leave a Reply