ரவா இட்லி

ரவா இட்லி தென்னிந்தியாவின் புகழ்பெற்ற காலை மற்றும் மாலை நேர உணவு வகை. ரவா இட்லி சாதாரணஇட்லி  போன்று ஊறவைத்து அரைத்து புளிக்க வைக்க தேவையில்லை. இதனை உடனடியாக செய்யலாம். ரவா, தயிர், கருவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு பேக்கிங் சோடா ஆகியவை சேர்க்கப்பட்டு ரவா இட்லி தயாரிக்கப்படுகிறது.

Rava_Idli

இது சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை வழக்கமான இட்லி போல் எல்லா வகை சட்னி மற்றும் சாம்பாருடன் சுவையாக இருக்கும். நீங்கள் விருப்பப்பட்டால் பேக்கிங் சோடாவை தவிர்த்துவிடலாம். ரவா இட்லி செய்முறை விளக்க புகைப்படங்களுடன் கண்டு செய்து சுவைத்து மகிழுங்கள்.

Rava_Idli

 

ரவா இட்லி
Prep Time
40 mins
Cook Time
10 mins
Total Time
50 mins
 
Ingredients
  • 1 கப் ரவா
  • 1 தேக்கரண்டி நெய்
  • கொத்தமல்லி இலைகள் சில
  • 1/4 கப் தயிர்
  • 1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா
தாளிக்க
  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • சில கறிவேப்பிலை இலைகள்
  • 10 முந்திரிப் பருப்பு
  • 3 பச்சை மிளகாய்
  • 1 சிறிய துண்டு இஞ்சி
Instructions
செய்முறை
  1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

  2. அதனுடன் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்துவிட்டு கலவையை தனியே வைக்கவும்.

  3. ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து சூடானதும் ரவை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.

  4. வறுத்த ரவையுடன் தாளித்த கலவை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலக்கவும் அதனுடன் தயிர் மற்றும் பெருங்காயத்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும் கலவையுடன் 1 முதல் 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.

  5. 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

  6. தற்போது கலவை கெட்டியாக இருப்பதை காணலாம்.

  7. தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து, இட்லித் தட்டில் ஊற்றி 10 முதல் 12 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைக்கவும்.

  8. சுவையான ரவா இட்லி தயார்.

 

செய்முறை

1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

Rava_Idli

2. அதனுடன் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

3. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்துவிட்டு கலவையை தனியே வைக்கவும்.

4. ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து சூடானதும் ரவை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.

5. வறுத்த ரவையுடன் தாளித்த கலவை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலக்கவும்.

6. அதனுடன் தயிர் மற்றும் பெருங்காயத்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும் கலவையுடன் 1 முதல் 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.

5. 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

6. தற்போது கலவை கெட்டியாக இருப்பதை காணலாம்.

7. தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து, இட்லித் தட்டில் ஊற்றி 10 முதல் 12 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைக்கவும்.

8. சுவையான ரவா இட்லி தயார்.

Rava_Idli

Leave a Reply