Stuffed Brinjal Curry in Tamil | ஆந்திரா கத்திரிக்காய் மசாலா | Andhra style Brinjal Curry

See this Recipe in English

கத்திரிக்காய் மசாலா ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகவும் புகழ் பெற்ற உணவு வகை. இது இந்தியா தவிர பாகிஸ்தானிலும் மிகவும் பிரபலம். சாதம், சப்பாத்தி, பரோட்டா, முக்கியமாக பிரியாணியுடன், கத்திரிக்காய் மசாலா சுவையாக இருக்கும். இது வேர்க்கடலை, வெள்ளை எள், புளி, தேங்காய், ஆகியவற்றை கொண்டு stuffing செய்யப்பட்டு,  பின்னர் வேக வைத்து மசாலா செய்யப்படும். இது குட்டி வெங்காய மசாலா என்று கூறப்படும்.

ஆந்திரா கத்திரிக்காய் மசாலாவில் பல வகைகள் உண்டு. மசாலா அரைத்து அதனுள் stuffing செய்து பயன்படுத்துவது அல்லது முழு கத்தரிக்காயை நடுவில் கீறி எண்ணெயில் பொரித்து செய்யலாம் அல்லது பச்சை கத்தரிக்காய் கொண்டு செய்யப்படும். 

 சுவையான கத்திரிக்காய் மசாலா செய்ய சில குறிப்புகள்

  • ஆந்திரா கத்திரிக்காய் மசாலா செய்வதற்கு ஊதா அல்லது பச்சை நிற கத்தரிக்காய்களை பயன்படுத்தலாம். 
  • கத்திரிக்காய் மசாலா செய்வதற்கு பிஞ்சு கத்தரிக்காய் பயன்படுத்தவும் முற்றிய  கத்திரிக்காயில் சுவை இருக்காது.
  • அரைக்க கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்களை தனித்தனியே  வறுத்துக்கொள்ளவும் அனைத்தையும் சேர்த்து வறுக்க கூடாது. 
  • கத்திரிக்காய் மசாலா செய்வதற்கு பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், மற்றும் மிளகாய்தூள் ஆகியவற்றை பயன்படுத்துவதால் உங்கள் காரத்திற்கு தகுந்தார்போல் சேர்த்துக் கொள்ளவும்.
  • தயிர் சேர்க்கும் பொழுது கெட்டியான புளிப்பான தயிர் சேர்த்துக் கொள்ளவும்.
  • தயிரில் புளிப்பு இல்லை என்றால் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழ சாறு சேர்த்துக்கொள்ளலாம்.

இதர சைவ குருமா வகைகள் – வெஜிடபிள் சால்னாசோயா குருமாவடைகறிரோட்டுக்கடை காளான் மசாலாகத்திரிக்காய் கிரேவிபன்னீர் கிரேவிகும்பகோணம் கடப்பாதக்காளி குருமாஆந்திரா கத்திரிக்காய் மசாலாபூரி மசாலாவெஜிடபிள் குருமாசென்னா மசாலாபன்னீர் பட்டர் மசாலாகாளிஃபிளவர் பட்டாணி குருமா.

அசைவ குருமா வகைகள் –  இறால் தொக்குசெட்டிநாடு சிக்கன் குழம்புமுட்டை மசாலாஹோட்டல் சுவையில் சிக்கன் கிரேவிமுட்டை குழம்பு.

 

See this Recipe in English

 கத்திரிக்காய் மசாலா செய்ய தேவையான பொருட்கள் 

  • 500 கிராம் கத்தரிக்காய்
  • 1/4 கப் வேர்க்கடலை
  • 4 தேக்கரண்டி  வெள்ளை எள்
  • 4 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள்
  • 1 துண்டு பட்டை
  • 5 ஏலக்காய்
  • 5 லவங்கம்
  • 1/2 தேக்கரண்டி வெந்தயம்
  • 10 காய்ந்த மிளகாய்
  • 4 தேக்கரண்டி துருவிய தேங்காய்
  • தேவையான அளவு உப்பு 
  • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் 
  • 4 தேக்கரண்டி எண்ணெய்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • சிறிதளவு கறிவேப்பிலை
  • 3 பச்சை மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/4 கப் தயிர்
  • 1/4 கப் புளி சாறு
  • சிறிதளவு கொத்தமல்லி பொடியாக நறுக்கியது

செய்முறை

1. ஒரு வாணலியில் கால் கப் வேர்க்கடலை சேர்த்து மிதமான சூட்டில் 1 முதல் 2 நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

 2. 4 தேக்கரண்டி வெள்ளை எள் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

3. 4 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள் சேர்த்து ஒன்று முதல் இரண்டு நிமிடங்களுக்கு வறுத்துக்கொள்ளவும். பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

4. ஒரு துண்டு பட்டை, 5 ஏலக்காய், 5 லவங்கம், அரை தேக்கரண்டி வெந்தயம், 10 காய்ந்த மிளகாய்,  ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். ஒரு நிமிடத்திற்குப் பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

 5. 4 தேக்கரண்டி தேங்காய் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு வறுத்துக்கொள்ளவும் பின்னர் அடுப்பை அணைத்து விட்டு தனியே வைக்கவும் .

6. இப்பொழுது வறுத்து வைத்த வற்றை ஆறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு,  அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், மற்றும் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.


7. 500 கத்திரிக்காயை கழுவி துடைத்த பின்னர் நடுவில் கீறிக் கொள்ளவும். இப்பொழுது ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி அரைத்த மசாலா விழுது நிரப்பிக் கொள்ளவும் பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

8. ஒரு அகலமான வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி சீரகம், கருவேப்பிலை சிறிதளவு, ஆகியவற்றை சேர்க்கவும்.

 9. கடுகு வெடித்த பின்னர் 3 பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி விட்டு சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் ஒரு பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

10. வெங்காயம் ஓரளவு வதங்கிய பின்னர் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

11. அதனுடன் தேவையான அளவு உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள், ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

 12. இப்போது கால் கப் அளவு கெட்டியான தயிர் சேர்த்து கலக்கவும்.

13. தயாராக வைத்துள்ள  stuffing  செய்யப்பட்ட கத்தரிக்காய்களை சேர்த்துக் கொள்ளவும்.

14.  மூடி வைத்து 15 முதல் 20 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

15. பின்னர்  மீதமுள்ள அரைத்த மசாலா விழுது மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து கத்திரிக்காய் உடையாமல் மெதுவாக கலக்கவும்.

 16. அதனுடன் கால் கப் அளவு  புளி சாறு சேர்த்துக் கொள்ளவும்.

 17. இப்பொழுது மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்,  அல்லது எண்ணெய் பிரிந்து வரும் வரை வேகவைக்கவும்.

 18. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும் சுவையான ஆந்திரா கத்திரிக்காய் மசாலா தயார்.

Leave a Reply