Tomato Chutney in Tamil | தக்காளி சட்னி | Thakkali Chutney in Tamil | How to make chutney

See this Recipe in English

தக்காளி சட்னி மிகவும் சுவையான அதே சமயத்தில் சுலபமாக செய்யக்கூடிய சட்னி வகை.  இதனை செய்வதற்கு பெரிய வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய் ஆகியவை தேவை. இட்லி, தோசை, உப்புமா, பொங்கல், பணியாரம், அடை, ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்,  தக்காளி சட்னியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

சுவையான சட்னி செய்ய சில குறிப்புகள்

  • சட்னி செய்வதற்கு புளிப்புள்ள நாட்டுத்தக்காளி பயன்படுத்திக் கொள்ளவும்.
  • தக்காளியில் புளிப்பு குறைவாக இருந்தால் சிறிதளவு புளி சேர்த்துக் கொள்ளலாம்.
  • வெங்காயம் மற்றும் தக்காளி இரண்டையும் சம அளவு எடுத்துக்கொள்ளவும்.
  • காய்ந்தமிளகாய் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
  • சட்னியை தாளிப்பதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்தவும்.

இதர வகைகள் – பூண்டு இட்லி பொடி,  இட்லி மிளகாய் பொடி, வெங்காய சட்னி, கமகமக்கும் புதினா சட்னி, பீர்க்கங்காய் துவையல், ஹோட்டல் சுவையில் தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி, புதினா சட்னி, பூண்டு தக்காளி தொக்கு பருப்பு துவையல்.

See this Recipe in English

 தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்

  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பெரிய தக்காளி
  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • 10 காய்ந்த மிளகாய்( அல்லது தேவைக்கேற்ப) 
  • தேவையான அளவு உப்பு

 தாளிக்க தேவையான பொருட்கள்

  • 2 தேக்கரண்டி எண்ணெய்/நல்லெண்ணெய்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • சிறிதளவு கறிவேப்பிலை

 தக்காளி சட்னி செய்முறை

1. ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

2. பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

3. அதனுடன் 10 காய்ந்த மிளகாய் சேர்த்து 1 நிமிடத்திற்கு பின் அடுப்பை அணைத்து விடவும். வதக்கிய கலவையை நன்கு ஆறவைக்கவும்.

4. ஒரு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி வைத்துள்ளவற்றை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

5. ஒரு சிறிய வாணலியில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து சூடானதும் 1/2 தேக்கரண்டி கடுகு மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

6. தாளித்த கலவையை சட்னியுடன் சேர்த்து கலக்கவும்,  சூடான இட்லி தோசையுடன் பரிமாறவும். 

Leave a Reply