Rava appam in Tamil | ரவா  இனிப்பு அப்பம் | Sweet Appam in Tamil | Appam Recipe

ரவா அப்பம் மைதா மாவு, ரவை, சர்க்கரை ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இதனை மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு செய்து தரலாம் அல்லது தீபாவளி போன்ற விசேஷ நாட்களிலும் செய்யலாம்.  பதினைந்து இருபது நிமிடங்களுக்குள்ளாகவே வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி செய்யலாம் மிகவும் சுலபமான அதே சமயத்தில் சுவை மிகுந்த  இனிப்பு அப்பத்தை  நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

ரவா அப்பம் செய்ய சில குறிப்புகள்

  • மைதா மாவுக்கு பதிலாக அதே அளவு கோதுமை மாவு பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • இனிப்பு சுவைக்கேற்ப கூடவோ அல்லது குறைத்தோ சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
  • மைதா, ரவை போன்றவற்றை சரியான அளவுகளில் எடுத்துக் கொள்ளவும் அப்பொழுது அப்பம்  சரியான பக்குவத்தில் இருக்கும்.
  • தண்ணீர்  சேர்க்கும் பொழுது சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும் மொத்தமாக சேர்த்தால்  மாவு கட்டி கட்டியாக வாய்ப்புள்ளது
  • ஃபுட் கலர் நீங்கள் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது சேர்க்காமலும் செய்யலாம்.

இதர சிற்றுண்டி வகைகள் – முட்டை சேர்க்காத டூட்டி ஃப்ரூட்டி கேக்ரவா கேக்,  முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக், ஓரியோ கேக்,  கேழ்வரகு  புட்டு,  முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக், ஏலக்காய் பர்ஃபி, ரவா லட்டு,  கடலை பர்ஃபிகாராபூந்தி, பர்கர் பன், சில்லி மசாலா இட்லி, மெது பக்கோடா, செட்டிநாடு ஸ்பெஷல் கார சீயம்,  கேழ்வரகு  புட்டு,சோயா கட்லட், மசாலா பாஸ்தா, பாசிப்பருப்பு ஃப்ரை, பிரட் சில்லி, பிரெட் பீட்சா

 

ரவா இனிப்பு அப்பம் செய்ய தேவையான பொருட்கள்

  • மைதா மாவு – 1 கப்
  • ரவை –  1/2 கப்
  • சர்க்கரை –  1/2 கப்
  • உப்பு –  1 சிட்டிகை
  • ஏலக்காய் பொடி –  1/4 தேக்கரண்டி
  • பேக்கிங் சோடா –  1/4 தேக்கரண்டி
  • மஞ்சள் ஃபுட் கலர் –  1 சிட்டிகை
  • எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

 செய்முறை

1. ஒரு பவுலில் ஒரு கப் மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும்.

2.  அதனுடன் அரை கப்  ரவை சேர்த்து கொள்ளவும்.

3.  அரை கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

4. நன்கு கலந்த பின்னர் ஒன்றரை கப் முதல் 2 கப் அளவு தண்ணீரை சிறிது சிறிதாக கலந்து கொள்ளவும்.

5. அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு,  கால் தேக்கரண்டி ஏலக்காய் பொடி,  கால் தேக்கரண்டி பேக்கிங் சோடா,  ஒரு சிட்டிகை  மஞ்சள் நிறம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

6.  கட்டி இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும்.  மாவு கெட்டியாக இல்லாமல் மிதமாக இருக்க வேண்டும்.

7. இப்பொழுது மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு வைக்கவும்.

8. பத்து நிமிடங்களுக்குப் பிறகு மாவு ஓரளவு கெட்டியாக இருப்பதை பார்க்கலாம்.

9. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் ஒரு குழிக்கரண்டி மாவை ஊற்றிக் கொள்ளவும்.

10. மேலே எண்ணெய் தெளித்து விடவும்.

11. ஓரளவு சிவந்த பின்னர் திருப்பி போடவும்.  அவ்வப்போது திருப்பி போட்டு பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும்.

12. பொன்னிறமானதும்  எண்ணையை வடித்து தனியே எடுக்கவும். சுவையான ரவா  இனிப்பு  அப்பம் தயார்.

 

Leave a Reply