Cauliflower Bites in Tamil | காலிஃப்ளவர்  ஸ்னாக்ஸ் | Easy snack | Quick snack

See this Recipe in English

காலிஃப்ளவர் ஸ்னாக்ஸ் ஒரு சுவையான மொறுமொறுப்பான மாலை நேர உணவு வகை. இது காலிபிளவர், உருளைக்கிழங்கு, அரிசி மாவு, ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது மாலை நேரங்களில் காபி அல்லது டீ உடன் சுவையாக இருக்கும். அது தவிர குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவு. இதனை நாம் மதிய உணவு அல்லது மாலை நேர ஸ்நாக்ஸ் செய்து அனுப்பலாம். இது வழக்கமான போண்டா அல்லது கட்லெட் ஆகியவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. காலிஃப்ளவர் ஸ்னாக்ஸ் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி,  டொமேடோ கெட்சப் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.

சுவையான காலிஃப்ளவர் ஸ்நாக்ஸ் செய்ய சில குறிப்புகள்

  1. காலிஃப்ளவர் மற்றும் உருளைக்கிழங்கு தவிர நீங்கள் விருப்பப்பட்ட காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து சேர்த்துக் கொள்ளலாம்.
  2. காலிஃப்ளவர் சேர்க்காமல் உருளைக்கிழங்கு மற்றும் மற்ற பொருட்களை அதே அளவில் சேர்த்து செய்தால் அது உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ்.
  3. இதனுடன் நீங்கள் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை அல்லது பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம்.
  4. நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி சோம்பு ஆகியவை சேர்ப்பதற்கு பதிலாக சிறிதளவு பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ், ஆகியவற்றை சேர்த்து செய்யும்பொழுது சுவை வித்தியாசமாக இருக்கும்.
  5. எண்ணையில் பொரிக்கும் போது  மிகவும் சூடாக இருக்கக்கூடாது அப்பொழுது ஸ்னாக்ஸ் போட்டவுடன் கரிந்து விடும்,  குறைவான தீயில் இருந்தால் உள்ளே வேகாமல் இருக்கும்.   சரியான சூட்டில் எண்ணெய் இருக்கும்பொழுது பொரித்தால் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும். 

இதர சிற்றுண்டி வகைகள் – காராபூந்தி,  சில்லி மசாலா இட்லி, மெது பக்கோடா, செட்டிநாடு ஸ்பெஷல் கார சீயம், மசாலா பிரட் டோஸ்ட், ராகி புட்டு, சோயா கட்லட், மசாலா பாஸ்தா,  பிரட் சில்லி, பாசிப்பருப்பு ஃப்ரை, போண்டா சூப், பிரெட் பீட்சா, உடனடி மெதுவடை,  உருளைக்கிழங்கு ரிங்ஸ், சேமியா போண்டா, சாம்பார் வடை,காலிஃப்ளவர்  ஸ்னாக்ஸ்.

 

See this Recipe in English

காலிஃப்ளவர் ஸ்நாக்ஸ் செய்ய தேவையான பொருட்கள்

  • 150 கிராம் காலிஃப்ளவர் சிறிதாக நறுக்கியது
  • 1/2 கப் அரிசி மாவு
  • 2 உருளைக்கிழங்குகள் 
  • 1/2 வெங்காயம்
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
  • 1/2 தேக்கரண்டி சோம்பு
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி  கார்ன் ஃப்ளோர்
  • தேவையான அளவு உப்பு
  • எண்ணை பொரிக்க தேவையான அளவு 

செய்முறை

1. ஒரு அகலமான பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் சூடாக்கவும்.

2. அதனுடன் 150 கிராம் அளவு காலிஃப்ளவர் சேர்த்து,  அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கொள்ளவும்.

3. 5 முதல் 7 நிமிடங்கள் மிதமான தீயில் வெந்த பின்னர்,  தண்ணீரை வடித்து தனியே வைக்கவும்.

4. இரண்டு உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும்,  அதனை கேரட் துருவும் கட்டையில் துருவி எடுத்துக் கொள்ளவும்.

5. ஒரு அகலமான பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் சேர்த்து சூடாக்கவும், தண்ணீர் சூடானதும் அரை கப் அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்.

6. மிதமான தீயில் ஒன்று முதல் இரண்டு நிமிடங்களுக்கு கைவிடாமல் கிளறவும்.

7. மாவு திரண்டு வந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.

8. வேகவைத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அரிசி மாவுடன் சேர்க்கவும்.

9. அதனுடன் வேகவைத்த காலிஃப்ளவர் சேர்த்துக் கொள்ளவும்.

10. அதனுடன் தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, அரை தேக்கரண்டி சோம்பு, சேர்த்துக் கொள்ளவும்.

11. பின்னர் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், அரை தேக்கரண்டி மிளகாய் தூள், ஒரு தேக்கரண்டி கான்பிளவர், ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

12. நன்கு கலந்து மென்மையான மாவு பிசைந்து கொள்ளவும்.

13. இப்பொழுது சிறிது சிறிதாக உருட்டி நறுக்கிக்கொள்ளவும்.

14. மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு பொரித்துக் கொள்ளவும் அல்லது பொன்னிறமாகும் வரை பொரித்து கொள்ளவும்.

15. சுவையான காலிஃப்ளவர் ஸ்னாக்ஸ் தயார். 

Leave a Reply