See this Recipe in English
மிளகாய் பஜ்ஜி தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மிகவும் புகழ்பெற்றது. இது தெருவோரக் கடைகளில் மிக மிக பிரபலம். அதுதவிர ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளிலும் மாலை நேரங்களில் மிளகாய் பஜ்ஜி கிடைக்கும். மிளகாய் பஜ்ஜி என்பது காரம் மிகக்குறைவான பஜ்ஜி மிளகாய், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு, ஆகியவை சேர்த்த கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் பொரிப்பது. மிளகாய் தவிர, உருளைக்கிழங்கு, வாழைக்காய், கத்திரிக்காய் ஆகியவற்றைக் கொண்டும் பஜ்ஜி செய்யலாம்.
சுவையான மிளகாய் பஜ்ஜி செய்ய சில குறிப்புகள்
- மிளகாயை நடுவில் கீறி அதனுள் உருளைக்கிழங்கு மசாலா வைத்து பஜ்ஜி செய்யலாம்.
- மிளகாயை நடுவில் கீறி சிறிதளவு வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கலாம்.
- புளி, உப்பு, மிளகாய் தூள், கலவையை தடவி அதன் பின்னர் பஜ்ஜி செய்யலாம். இவற்றில் எந்த முறையை வேண்டுமானாலும் பின்பற்றி மிளகாய் பஜ்ஜி செய்யலாம்.
- மேலே குறிப்பிட்ட எவற்றையும் சேர்க்காமல் வெறுமனே மிளகாயை பஜ்ஜி மாவில் தோய்த்து மிளகாய் பஜ்ஜி செய்யலாம் .
- பஜ்ஜிக்கு மாவு கரைக்கும் பொழுது மிகவும் கெட்டியாக அல்லது தண்ணியாக இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- சுவைக்கேற்ப மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
- விருப்பப்பட்டால் பேக்கிங் சோடா சேர்க்கலாம் அல்லது சேர்க்காமலும் செய்யலாம்.
இதர சிற்றுண்டி வகைகள் – காராபூந்தி, சில்லி மசாலா இட்லி, மெது பக்கோடா, செட்டிநாடு ஸ்பெஷல் கார சீயம், மசாலா பிரட் டோஸ்ட், ராகி புட்டு, சோயா கட்லட், மசாலா பாஸ்தா, பிரட் சில்லி, பாசிப்பருப்பு ஃப்ரை, போண்டா சூப், பிரெட் பீட்சா, உடனடி மெதுவடை, உருளைக்கிழங்கு ரிங்ஸ், சேமியா போண்டா, சாம்பார் வடை,காலிஃப்ளவர் ஸ்னாக்ஸ்.
See this Recipe in English
தேவையான பொருட்கள்
- 6 பஜ்ஜி மிளகாய்
- 1 கப் கடலை மாவு
- 1/4 கப் அரிசி மாவு
- 1/2 தேக்கரண்டி மிளகாய்தூள்
- 1/4 தேக்கரண்டி ஆப்பசோடா அல்லது சமையல் சோடா
- 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
- 2 தேக்கரண்டி புளி சாறு
- 1/2 தேக்கரண்டிசிவப்பு மிளகாய்த்தூள்
- தேவையான அளவு உப்பு
- பொரிக்க தேவையான எண்ணெய்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் 1 கப் கடலை மாவு, 1/4 கப் அரிசி மாவு, 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/4 தேக்கரண்டி சமையல் சோடா, 1/4 தேக்கரண்டி பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு, ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
2. அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கவும்.
3. பெரிய பஜ்ஜி மிளகாயை நடுவில் கீறி விதைகளை நீக்கி கொள்ளவும்.
4. ஒரு சிறிய பாத்திரத்தில் 2 தேக்கரண்டி புளிச்சாறு, 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், சிறிதளவு உப்பு, ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
5. புளிச்சாறு கலவையை சிறிதளவாக பஜ்ஜி மிளகாய்ல் தடவவும்.
6. மிளகாய் களில் புளிச்சாறு கலவை தடவிய பின்னர் தயாராக வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் பொரிக்கவும்.
7. பொன்னிறமாகும் வரை திருப்பி போட்டு பொரிக்கவும். பஜ்ஜி பொன்னிறமானதும் எடுத்து விடவும். சுவையான மிளகாய் பஜ்ஜி தயார்.