See this Recipe in English
சாக்லேட் காபி டார்க் சாக்லேட், இன்ஸ்டன்ட் காபி ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான காபி வகை. இது குளிர் காலம் மற்றும் மழை காலங்களில் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். இது இனிப்பு, கசப்பு, காபி சுவை, என அனைத்தும் கலந்து சுவையாக இருக்கும். இதனை மிகவும் எளிதான முறையில் செய்யலாம். சுவையான சாக்லேட் காப்பியை நீங்களும் ஒருமுறை செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான சாக்லேட் காபி செய்ய சில குறிப்புகள்
- இந்த காபி செய்வதற்கு நீங்கள் திக்கான பால் பயன்படுத்திக் கொள்ளவும்.
- டார்க் சாக்லேட் 60 கிராம் முதல் 80 கிராம் வரை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
- சாக்லெட்டில் ஓரளவு இனிப்பு இருப்பதால் சர்க்கரை சேர்க்கும் பொழுது கவனமாக சேர்த்துக் கொள்ளவும்.
இதர குளிர்கால உணவுகள் – ஹாட் சாக்லேட்,பில்டர் காபி, மசாலா டீ, பாதாம் பால் பவுடர், பாதாம் பால்
இதர சிற்றுண்டி வகைகள் – காராபூந்தி, சில்லி மசாலா இட்லி, மெது பக்கோடா, செட்டிநாடு ஸ்பெஷல் கார சீயம், மசாலா பிரட் டோஸ்ட், ராகி புட்டு, சோயா கட்லட், மசாலா பாஸ்தா, பிரட் சில்லி, பாசிப்பருப்பு ஃப்ரை, போண்டா சூப், பிரெட் பீட்சா, உடனடி மெதுவடை, உருளைக்கிழங்கு ரிங்ஸ், சேமியா போண்டா, சாம்பார் வடை,காலிஃப்ளவர் ஸ்னாக்ஸ்.
See this Recipe in English
சாக்லேட் காபி செய்ய தேவையான பொருட்கள்
- பால் – 500ml
- டார்க் சாக்லெட் – 60 g
- சர்க்கரை – 3 தேக்கரண்டி
- இன்ஸ்டன்ட் காபி பவுடர் – 1.5 தேக்கரண்டி
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் 500 ml பால் சேர்த்துக் கொள்ளவும்.
- அதனை நன்றாக கொதிக்க விடவும்.
- கொதித்த பின்னர் 60 gram டார்க் சாக்லெட் சேர்த்துக் கொள்ளவும்.
- சாக்லேட் கரையும் வரை ஒரு கரண்டி அல்லது விஸ்க் வைத்து கலக்கவும்.
- சாக்லேட் கரைந்த பின்னர் 3 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
- அதனுடன் 1.5 தேக்கரண்டி காபி பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.
- காபி பவுடர் மற்றும் சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்.
- சூடான சுவையான சாக்லேட் காபி தயார்.
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் 500 ml பால் சேர்த்துக் கொள்ளவும்.
2. அதனை நன்றாக கொதிக்க விடவும். கொதித்த பின்னர் 60 gram டார்க் சாக்லெட் சேர்த்துக் கொள்ளவும்.
3. சாக்லேட் கரையும் வரை ஒரு கரண்டி அல்லது விஸ்க் வைத்து கலக்கவும்.
4. சாக்லேட் கரைந்த பின்னர் 3 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
5. அதனுடன் 1.5 தேக்கரண்டி காபி பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.
6. காபி பவுடர் மற்றும் சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்.
7. சூடான சுவையான சாக்லேட் காபி தயார்.