Hotel Style Coconut Chutney in Tamil | ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி | Chutney recipe | Chutney in Tamil

See this Recipe in English

தேங்காய் சட்னி சரவணபவன் ஹோட்டல்களில் மிகவும் சுவையாக இருக்கும். நாம் வழக்கமாக அரைக்கும் தேங்காய் சட்னி போன்று இல்லாமல் ஓரிரண்டு பொருட்களை சேர்ப்பதால் அதன் சுவை வித்தியாசமாக, அபாரமாக இருக்கும்.  தமிழ்நாட்டில் பல விதமான சட்னிகள் கிடைக்கின்றது,  குறிப்பாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவை  அடிக்கடி வீடுகளில் செய்யப்படுவார்கள். ஒரே மாதிரி தேங்காய் சட்னி செய்வதை காட்டிலும் இதுபோன்று சற்று வித்தியாசமான சுவையுடன் அளித்தால் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி உண்பார்கள்.

 சுவையான தேங்காய் சட்னி செய்ய சில குறிப்புகள்

  • சட்னி செய்ய தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது திருவி பயன்படுத்தலாம்.
  • புதிதாக  உடைத்த தேங்காய்  வைத்து தேங்காய் சட்னி செய்தால் சுவை அபாரமாக இருக்கும்.
  • பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளலாம்.
  • சிறு துண்டு இஞ்சி பயன்படுத்தி சட்னி செய்யவும், விருப்பப்பட்டால் இஞ்சியுடன் 1 பூண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
  • ஒரே ஒரு சின்ன வெங்காயம் சேர்த்து சட்னி அரைக்கும் பொழுது சுவை கூடுதலாக இருக்கும்.
  • மிக்ஸி ஜாரில் சட்னி தேவையான பொருட்களை சேர்த்து ஒரு முறை அரைத்துவிட்டு அதன் பின்னர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
  • தேங்காயை மிகவும் நைசாக இல்லாமல்  கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • சட்னியை கெட்டியாகவும்  அரைக்கலாம்  அல்லது தண்ணீர் சேர்த்து தண்ணீராகவும் அரைத்துக் கொள்ளலாம்.

இதர வகைகள் –வேர்க்கடலை சட்னி, பூண்டு இட்லி பொடி,  இட்லி மிளகாய் பொடி, வெங்காய சட்னி, கமகமக்கும் புதினா சட்னி, பீர்க்கங்காய் துவையல், ஹோட்டல் சுவையில் தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி, புதினா சட்னி, பூண்டு தக்காளி தொக்கு , தக்காளி சட்னி , பருப்பு துவையல்.

 

 

See this Recipe in English

 

தேவையான பொருட்கள்

  • தேங்காய் (துருவியது) – 1 கப்
  • பச்சை மிளகாய் – 5/தேவையான அளவு
  • பொட்டுக்கடலை –   1/4 கப்
  • இஞ்சி – 1  சிறிய துண்டு
  • சின்ன வெங்காயம் – 1
  • புளி – சிறிய துண்டு
  • உப்பு –   தேவையான அளவு
  • சமையல் எண்ணெய் – 1  தேக்கரண்டி

தாளிக்க தேவையான பொருட்கள்

  • நல்லெண்ணெய் – 3  தேக்கரண்டி
  • கடுகு – ½  தேக்கரண்டி
  • உளுத்தம் பருப்பு – ¼  தேக்கரண்டி
  • கருவேப்பிலை –  தேவையான அளவு

 செய்முறை

1. ஒரு கடாயில் 1 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.

2. எண்ணெய் சூடானதும் 5 பச்சைமிளகாய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

3. பின்னர் அதனை தனியே எடுத்து வைக்கவும்.

4. ஒரு மிக்ஸி ஜாரில் 1 கப் துருவிய தேங்காய் சேர்த்து கொள்ளவும்.

5. அதனுடன் 1/4 கப் பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளவும்.

6. ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்க்கவும்.

7. ஒரு சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்.

8. ஒரு சிறிய துண்டு புளி சேர்த்துக் கொள்ளவும்.

9. பின்னர்  தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

10. தண்ணீர் சேர்க்காமல் ஒருமுறை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

11.  இப்பொழுது சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

12. அதனை ஒரு பௌலில் மாற்றி  தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும். 

13. தாளிப்பதற்கு ஒரு வாணலியில் 3 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் 1/2 தேக்கரண்டி கடுகு சேர்த்து கொள்ளவும்.

14. கடுகு வெடித்ததும் 1/4 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு மற்றும் சிறிதளவு கருவேப்பிலை சேர்க்கவும்.

15. தாளித்த கலவையை சட்னியுடன் சேர்த்து கலக்கவும்.

16. சுவையான ஹோட்டல் தேங்காய் சட்னி தயார் .

Leave a Reply