ஹாட் சாக்லேட் மழைக்காலம் மற்றும் குளிர்காலத்திற்கு ஏற்ற சுவையான பானம், இது பால், சாக்லேட், காபி தூள், ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இனிப்பு, கசப்பு, மற்றும் காபி சுவை என அனைத்தும் கலந்து சுவை அபாரமாக இருக்கும். ஹாட் சாக்லேட் மேலைநாடுகளில் இருந்து பெறப்பட்டதாக இருந்தாலும் அவ்வப்போது சாக்லேட் சேர்த்துக்கொள்வது உடலுக்கு நல்லது அதே சமயத்தில் சுவையும் அற்புதமாக இருக்கும். நீங்களும் சுவையான ஹாட் சாக்லேட் செய்து சுவைத்து மகிழுங்கள்.
இதர குளிர்கால உணவுகள் – சாக்லேட் காபி, பில்டர் காபி, மசாலா டீ, பாதாம் பால் பவுடர், பாதாம் பால்
இதர சிற்றுண்டி வகைகள் – காராபூந்தி, சில்லி மசாலா இட்லி, மெது பக்கோடா, செட்டிநாடு ஸ்பெஷல் கார சீயம், மசாலா பிரட் டோஸ்ட், ராகி புட்டு, சோயா கட்லட், மசாலா பாஸ்தா, பிரட் சில்லி, பாசிப்பருப்பு ஃப்ரை, போண்டா சூப், பிரெட் பீட்சா, உடனடி மெதுவடை, உருளைக்கிழங்கு ரிங்ஸ், சேமியா போண்டா, சாம்பார் வடை,காலிஃப்ளவர் ஸ்னாக்ஸ்.
ஹாட் சாக்லேட் செய்ய தேவையான பொருட்கள்
- பால் – 500ml
- காபித்தூள் – ½ தேக்கரண்டி
- கொக்கோ பவுடர் – 3 தேக்கரண்டி
- சர்க்கரை – 3 தேக்கரண்டி
- சாக்லேட் சிப்ஸ் – ¼ கப் / 50g
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் பால் சேர்த்து சூடாக்கவும்.
- ஓரளவு சூடானதும் 1/2 தேக்கரண்டி காப்பி தூள் சேர்த்து கலக்கவும்.
- பின்னர் 3 தேக்கரண்டி கொக்கோ பவுடர் சேர்த்து கரையும் வரை கலக்கவும்.
- பின்னர் 3 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் சாக்லெட் சிப்ஸ் சேர்த்து கலக்கவும்.
- சாக்லேட் நன்கு கரைந்த பின்னர் அடுப்பை அணைத்து பரிமாறவும்.
- சுவையான ஹாட் சாக்லேட் தயார்.
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் பால் சேர்த்து சூடாக்கவும்.
2. ஓரளவு சூடானதும் 1/2 தேக்கரண்டி காப்பி தூள் சேர்த்து கலக்கவும்.
3. பின்னர் 3 தேக்கரண்டி கொக்கோ பவுடர் சேர்த்து கரையும் வரை கலக்கவும்.
4. பின்னர் 3 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் சாக்லெட் சிப்ஸ் சேர்த்து கலக்கவும்.
5. சாக்லேட் நன்கு கரைந்த பின்னர் அடுப்பை அணைத்து பரிமாறவும்.
6. சுவையான ஹாட் சாக்லேட் தயார்.