See this Recipe in English
புதினா சட்னி சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த சட்னி, இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் தயிர் சாதம் ஆகியவற்றோடு சுவையாக இருக்கும். புதினா சட்னி பலவிதமாக தயாரிக்கலாம், இந்த செய்முறையில் புதினா, வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைக் கொண்டு செய்தேன். தேங்காய், சிவப்பு / பச்சை மிளகாய் கொண்டும் புதினா சட்னி தயாரிக்கலாம்.
புதினா, உளுத்தம் பருப்பு, மற்றும் வரமிளகாயை வறுத்து. புளி மற்றும் உப்பு சேர்த்து அரைப்பது மற்றொரு முறையாகும். இட்லி மற்றும் தோசை தவிர்த்து தவிர்த்து பணியாரம், பஜ்ஜி, மற்றும் வடையுடனும் புதினா சட்னி சுவையாக இருக்கும். மேலும் வெள்ளை சாதத்துடன் புதினா சட்னி கலந்து அப்பளம் அல்லது வடகத்துடன் சாப்பிடலாம்.
மேலும் பலவிதமான உணவுகளை காண கீழே கிளிக் செய்யவும்
சட்னி வகைகள் – தக்காளி சட்னி, வெங்காய சட்னி, தேங்காய் சட்னி, புதினா சட்னி, பருப்பு துவையல், பீர்க்கங்காய் துவையல், இஞ்சி சட்னி, கருவேப்பிலை துவையல்.
குருமா வகைகள் – தக்காளி குருமா, காய்கறி குருமா,கத்திரிக்காய் கிரேவி, பன்னீர் கிரேவி, கும்பகோணம் கடப்பா, கத்திரிக்காய் மசாலா, பூரி மசாலா, சென்னா மசாலா, பன்னீர் பட்டர் மசாலா, காளிஃபிளவர் பட்டாணி குருமா.
புதினா சட்னி சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த சட்னி, இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் தயிர் சாதம் ஆகியவற்றோடு சுவையாக இருக்கும்.
- 1 கப் புதினா இலைகள்
- 1 கப் சின்ன வெங்காயம்
- 1 தக்காளி
- 1 தேக்கரண்டி எண்ணெய்
- 3-5 காய்ந்த மிளகாய் (காரத்திற்கேற்ப)
- உப்பு தேவையான அளவு
- 1 தேக்கரண்டி நல்லெண்ணெய்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- கறிவேப்பிலை தேவையான அளவு
-
ஒரு கட்டு புதினாவில் காம்பை நீக்கிவிட்டு இலைகளை தனியே எடுத்து அலசி வைக்கவும்.
-
சின்ன வெங்காயத்தை தோலுரித்து கழுவி வைக்கவும் தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
-
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் காய்ந்த மிளகாய்களை 1 முதல் 2 நிமிடங்களுக்கு வறுத்து எடுக்கவும்.
-
பின்னர் உரித்த சின்ன வெங்காயத்தை சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும்.
-
நறுக்கி வைத்த தக்காளியையும் சேர்த்து மசியும் வரை வதக்கவும்.
-
புதினா இலைகளை சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும், அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
-
இப்பொழுது அடுப்பை அணைத்துவிட்டு கலவையை ஆறவைக்கவும்.
-
அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
-
இன்னொரு சிறிய கடாயில் நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியுடன் கலக்கவும்.
-
சுவையான புதினா சட்னி தயார்.
See this Recipe in English
செய்முறை
முன் தயாரிப்பு
1. ஒரு கட்டு புதினாவில் காம்பை நீக்கிவிட்டு இலைகளை தனியே எடுத்து அலசி வைக்கவும்.
2. சின்ன வெங்காயத்தை தோலுரித்து கழுவி வைக்கவும் தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
செய்முறை
1. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் காய்ந்த மிளகாய்களை 1 முதல் 2 நிமிடங்களுக்கு வறுத்து எடுக்கவும்.
2. பின்னர் உரித்த சின்ன வெங்காயத்தை சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும்.
3. நறுக்கி வைத்த தக்காளியையும் சேர்த்து மசியும் வரை வதக்கவும்.
4.புதினா இலைகளை சேர்த்து சில நிமிடங்களுக்கு வதக்கவும்.
5. அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இப்பொழுது அடுப்பை அணைத்துவிட்டு கலவையை ஆறவைக்கவும்.
6. அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
7. இன்னொரு சிறிய கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியுடன் கலக்கவும்.
8. சுவையான புதினா சட்னி தயார்.