Rava Payasam in Tamil | ரவா பாயசம் | ரவை பாயசம் | Sooji Kheer

See this Recipe in English

ரவை பாயசம் ரவை, சர்க்கரை, பால், குங்குமப்பூ ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான பாயாசம் வகை.   இந்தியாவில் ஏராளமான பாயசம் செய்யப்படுகிறது, பால் பாயாசம், சேமியா பாயசம், ஜவ்வரிசி பாயசம், மற்றும் பருப்பு பாயசம் ஆகியவை பாரம்பரியமிக்க பாயச வகைகள்.  ரவா பாயசம் மிகவும் சுலபமாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய ஒரு சுவையான பாயசம், பாரம்பரிய சுவைகளில் இருந்து வேறுபட்டு வித்தியாசமான பாயசம் செய்ய விருப்பப்பட்டால் ரவா பாயசம் செய்யலாம் அலாதியான சுவையுடன் இருக்கும்.

சுவையான ரவா பாயசம் செய்ய சில குறிப்புகள்

  1. ரவா பாயசம் செய்யும் போது திக்கான ரவை பயன்படுத்தவும். நைஸ் ரவை உபயோகிக்க வேண்டாம்.
  2. ரவையை வறுக்கும் பொழுது நன்கு வாசனை வரும்வரை அதேசமயத்தில் நிறம் மாறாமல் வறுக்கவும்.
  3. சர்க்கரை உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
  4. முழு கொழுப்பு சத்துள்ள பால், காய்ச்சிய பிறகு பயன்படுத்திக் கொள்ளவும். 
  5. சாரப்பருப்பிற்கு பதிலாக பாதாம்/பிஸ்தா போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.
  6. குங்குமப் பூ சேர்ப்பது உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டது, சேர்க்காமலும் பாயசம் செய்யலாம். 
  7. சாரப் பருப்பை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து பின்னர் பயன்படுத்தவும்
  8. சர்க்கரைக்கு பதிலாக அதே அளவு பொடித்த வெல்லம் அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

இதர பாயசம் வகைகள் – கோதுமை ரவை பாயசம்ரவா பாயசம், ஜவ்வரிசி பாயசம், சிறுதானிய பாயசம், பருப்பு பாயசம், பாதாம் பால்.

இதர இனிப்பு வகைகள் – பிரட் குலாப் ஜாமுன், கோதுமை ரவை கேசரி, காசி அல்வா, மால்புவா, கோதுமை அல்வா, குலாப் ஜாமுன், ரவா லட்டு, இனிப்பு காஜா, கடலை பர்ஃபி, ரவா  இனிப்பு அப்பம், கோவில் சக்கரை பொங்கல், ரசமலாய், நெய்யப்பம்.

 

See this Recipe in English

 ரவா பாயசம் செய்ய தேவையான பொருட்கள்

  • நெய் – 3  மேஜைக்கரண்டி
  • முந்திரி பருப்பு –  1/4 கப்
  • ரவை –  1/4 கப்
  • பால் – 500 ml
  • சர்க்கரை –  1/2 கப்/100 gram
  • சாரப்பருப்பு – 3  தேக்கரண்டி (ஊற வைத்தது)
  • குங்குமப்பூ –  1 சிட்டிகை
  • ஏலக்காய் பொடி – 1/4  தேக்கரண்டி

செய்முறை

  1. ஒரு  கடாயில்  3 மேஜைக்கரண்டி  நெய் சேர்த்துக் கொள்ளவும்.
  2. நெய் சூடானதும் 1/4 கப் முந்திரி பருப்பு சேர்த்துக் கொள்ளவும். 
  3. அதனை பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  4. பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.
  5. அதே  கடாயில்  1/4 கப் ரவை சேர்த்து குறைவான தீயில்  வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  6. வறுத்த பின்னர் 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் ( 1 பங்கு ரவைக்கு 2 பங்கு தண்ணீர்).
  7. ரவை வேகும் வரை நன்கு கிளறவும்.
  8. ஓரங்களில் நெய் பிரிந்து வருவதை காணலாம்.
  9. இப்பொழுது 500ml காய்ச்சிய பால் சேர்த்துக் கொள்ளவும். 
  10. குறைவான தீயில் கட்டிகளில்லாமல் நன்கு கலக்கவும். 
  11. சாரப்பருப்பை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் தண்ணீரை வடித்து விட்டு சேர்த்துக் கொள்ளவும்.
  12. பின்னர் 8 முதல் 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.
  13. இப்பொழுது 1/2 கப் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
  14. சர்க்கரை கரைந்த பின்னர் ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து குங்கும பூவின் நிறம் பாலில் இறங்கும் வரை கலக்கவும்.
  15. பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.
  16. சுவையான ரவை பாயசம் தயார். 

செய்முறை

1. ஒரு  கடாயில்  3 மேஜைக்கரண்டி  நெய் சேர்த்துக் கொள்ளவும்.

2. நெய் சூடானதும் 1/4 கப் முந்திரி பருப்பு சேர்த்துக் கொள்ளவும். அதனை பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும். பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

3. அதே  கடாயில்  1/4 கப் ரவை சேர்த்து குறைவான தீயில் வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

4. வறுத்த பின்னர் 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும் ( 1 பங்கு ரவைக்கு 2 பங்கு தண்ணீர்).

5. ரவை வேகும் வரை நன்கு கிளறவும்.

6. ஓரங்களில் நெய் பிரிந்து வருவதை காணலாம்.

7. இப்பொழுது 500ml காய்ச்சிய பால் சேர்த்துக் கொள்ளவும். 

8. குறைவான தீயில் கட்டிகளில்லாமல் நன்கு கலக்கவும். 

9. சாரப்பருப்பை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து பின்னர் தண்ணீரை வடித்து விட்டு சேர்த்துக் கொள்ளவும்.

10. பின்னர் 8 முதல் 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

11. இப்பொழுது 1/2 கப் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

12. சர்க்கரை கரைந்த பின்னர் 1 சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து குங்கும பூவின் நிறம் பாலில் இறங்கும் வரை கலக்கவும்.

13. பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்.

14. சுவையான ரவை பாயசம் தயார். 

Leave a Reply