See this Recipe in English
ரோஸ் பர்ஃபி தேங்காய், சர்க்கரை, ரோஸ் சிரப், ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான இனிப்பு வகை, இது தேங்காய் பர்பி போன்ற சுவையில் ஏலக்காய் மற்றும் ரோஸ் வாசனையுடன் சுவையாக இருக்கும். வழக்கமான தீபாவளி பலகாரங்கள் உடன் இதுபோன்ற வித்தியாசமான அதே சமயத்தில் விரைவாக செய்யகூடிய இனிப்பு வகைகளை அனைவரும் விரும்பி உண்பார்கள் செய்வதும் மிகவும் சுலபம். சுவையான ரோஸ் பர்பி இந்த தீபாவளிக்கு நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான ரோஸ் பர்பி செய்ய சில குறிப்புகள்
- சர்க்கரை பாகு லேசான கம்பி பதம் வந்ததும் தேங்காயை சேர்க்கவும்.
- Desiccated coconut வீட்டிலேயே செய்வதற்கு தேங்காயை கருப்புத் தோல் இல்லாமல் வெட்டி எடுத்து மிக்ஸியில் பொடித்து அதனை ஈரப்பதம் போக வறுத்துக் கொள்ளவும்.
- ரோஸ் சிரப் சேர்க்காமல் வெறும் தேங்காய் பர்ஃபி ஆகவும் இதனை செய்யலாம், அல்லது முழு தேங்காயும் ரோஸ் சிரப் சேர்த்து செய்யலாம்.
- பட்டர் பேப்பர் போட்டு அதன்மீது தேங்காயை வைத்து செட் செய்யவும் அல்லது பாத்திரத்துடன் ஒட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.
- சர்க்கரை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
இதர தீபாவளி பலகாரங்கள் – பொட்டுக்கடலை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, மெது பக்கோடா, ரிப்பன் பக்கோடா, தட்டை முறுக்கு, பூந்திலட்டு, முறுக்கு, சாக்லேட் பர்ஃபி, குலாப் ஜாமுன், இனிப்பு காஜா, ரவா லட்டு, கோதுமை குலாப் ஜாமுன், பால்கோவா
See this Recipe in English
தேவையான பொருட்கள்
- Desiccated Coconut – 400g
- சர்க்கரை – 1.5 கப் – 300g
- ஏலக்காய் பொடி – ¼ தேக்கரண்டி
- ரோஸ் சிரப் (rose syrup) – ¼ கப்
செய்முறை
1. ஒரு பானில் 1.5 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
2. அதனுடன் 1.5 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
3. சர்க்கரை கரைந்து தண்ணீர் கொதிக்கும் பொழுது அதில் 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.
4. சர்க்கரைப்பாகு ஓரளவு கொதித்து ஒரு கம்பிப் பதம் வந்ததும் 400g desiccated coconut சேர்த்துக் கொள்ளவும்.
5. மிதமான தீயில் வைத்து கிளறவும்.
6. ஓரளவு கெட்டியானதும் அல்லது 10 நிமிடங்களுக்கு பிறகு பாதித் தேங்காயை தனியே எடுத்து வைக்கவும்.
7. பின்னர் 1/4 கப் ரோஸ் சிரப் சேர்த்துக் கொள்ளவும்.
8. அதனை 2 – 3 நிமிடங்களுக்கு கிளறவும், பின்னர் அடுப்பை அணைத்து தனியே வைக்கவும்.
9. ஒரு பாத்திரத்தில் லேசாக எண்ணை தடவி பட்டர் பேப்பர் போட்டுக்கொள்ளவும்.
10. அதில் முதலில் எடுத்து வைத்த தேங்காய் கலவையை வைத்து கரண்டியால் அழுத்தி விடவும்.
11. பின்னர் ரோஸ் சிரப் சேர்த்து செய்த தேங்காய் கலவையை வைத்து கரண்டியால் அழுத்தி விடவும்.
12. இதனை 3 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
13. பின்னர் விருப்பப்பட்ட வடிவில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
14. சுவையான ரோஸ் பர்ஃபி தயார்.