See this Recipe in English
ஜவ்வரிசி கேசரி மிகவும் சுலபமான கேசரி வகை. பொதுவாக தென்னிந்தியாவில் பலவிதமான கேசரிகள் பிரபலம். உதாரணமாக மாம்பழ கேசரி, அன்னாசிப்பழ கேசரி, சேமியா கேசரி, ரவா கேசரி, மற்றும் ஜவ்வரிசி கேசரி.
மாம்பழ கேசரி செய்ய மாம்பழத்தின் சாறு பயன்படுத்தப்படுகிறது. அதேபோல அன்னாசிப்பழ கேசரி அன்னாசிப்பழ சாறு கொண்டு செய்யப்படுகிறது. மேலும் ரவா கேசரி மற்றும் சேமியா கேசரி போன்றவை வறுத்து செய்யப்படுகிறது. ஜவ்வரிசி கேசரி எட்டு மணி நேரம் ஊறவைத்து செய்யப்படுகிறது.
சுவையான ஜவ்வரிசி கேசரி செய்ய சில குறிப்புகள்
- ஜவ்வரிசி கேசரி செய்ய சாதாரண வெள்ளை ஜவ்வரிசி பயன்படுத்த வேண்டும். நைலான் ஜவ்வரிசி பயன்படுத்தக்கூடாது.
- ஜவ்வரிசி கண்ணாடி போல் ஆகும் வரை வேக வைக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கலாம்.
- மேலும் ஜவ்வரிசி கேசரி செய்யும் பொழுது முந்திரி, திராட்சை உடன் பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
- மேலும் சிறிதளவு குங்குமப்பூவை 2 தேக்கரண்டி பாலில் ஊறவைத்து அதனை சேர்த்துக்கொள்ளலாம், கேசரி சுவை கூடும்.
இதர இனிப்பு வகைகள் – பிரட் குலாப் ஜாமுன், கோதுமை ரவை கேசரி, காசி அல்வா, மால்புவா, கோதுமை அல்வா, குலாப் ஜாமுன், ரவா லட்டு, இனிப்பு காஜா, கடலை பர்ஃபி, ரவா இனிப்பு அப்பம், கோவில் சக்கரை பொங்கல், ரசமலாய், நெய்யப்பம்.
பாயசம் வகைகள் – கேரமல் பாயாசம், கோதுமை ரவை பாயசம், ரவா பாயசம், ஜவ்வரிசி பாயசம், சிறுதானிய பாயசம், பருப்பு பாயசம், பாதாம் பால்.
See this Recipe in English
ஜவ்வரிசி கேசரி செய்ய தேவையான பொருட்கள்
- 1.5 கப் ஜவ்வரிசி
- 1 கப் சர்க்கரை
- 10 முந்திரி பருப்புகள்
- 1 தேக்கரண்டி காய்ந்த திராட்சை
- சிறிதளவு கேசரி கலர்
- 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் 1.5 கப் ஜவ்வரிசி சேர்த்து ஜவ்வரிசி முழுகும் வரை தண்ணீர் சேர்க்கவும்.
2. இதனை 6 முதல் 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
3. ஜவ்வரிசி ஊறிய பின்னர் தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும்.
4. இப்பொழுது ஒரு கடாயில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடாக்கவும்.
5. அதில் 10 முந்திரி பருப்புகளை பொடித்து சேர்த்துக் கொள்ளவும். மேலும் 1 தேக்கரண்டி காய்ந்த திராட்சை சேர்த்து வறுக்கவும்.
6. முந்திரி, திராட்சை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
7. அதே கடாயில் ஊற வைத்து தண்ணீர் வடித்து வைக்கப்பட்டுள்ள ஜவ்வரிசி சேர்த்து கிளறவும்.
8. 10 முதல் 15 நிமிடங்களுக்கு வேக வைக்கவும் அல்லது கண்ணாடி போல் ஆகும் வரை வேக வைக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
9. ஜவ்வரிசி நன்கு வெந்தபிறகு 1 கப் சர்க்கரை சேர்க்கவும்.
10. சர்க்கரை கலந்து பின்னர் சிறிதளவு கேசரி கலர் மற்றும் 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
11. கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கலக்கவும்.
12. இப்போது வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
13. நன்கு கலந்த பின்னர் அடுப்பை அணைத்து சூடாக பரிமாறவும்.
14. சுவையான ஜவ்வரிசி கேசரி தயார்.