Semiya Bonda in Tamil | சேமியா போண்டா | Bonda recipe in Tamil | Semiya Bonda recipe

சேமியா போண்டா சேமியாவை வைத்து உப்புமா, கேசரி, பாயசம் போன்றவற்றை செய்யலாம், ஆனால் சேமியா போண்டா ஒரு புதுவிதமான உணவு வகை. இதனை மிகவும் எளிமையான முறையில் செய்யலாம்.  சேமியா போண்டாவை மாலை நேரங்களில் காபி அல்லது டீ யுடன்  சுவையாக இருக்கும். அது தவிர பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு ஒரு ஆரோக்கியம் நிறைந்த ஸ்னாக்ஸ். மதிய நேரங்களில் சாத வகைகளுடன் பரிமாறலாம். சுவையான சேமியா போண்டாவை மிக சுலபமான முறையில் செய்து நீங்களும் சுவைத்து மகிழுங்கள்.

சுவையான சேமியா போண்டா செய்ய சில குறிப்புகள்

  • போண்டா செய்வதற்கு வறுக்காத சேமியா பயன்படுத்துங்கள் வறுத்த சேமியா சேர்க்க வேண்டாம்.
  • சேமியாவை மென்மையாக வேக வைத்துக் கொள்ளவும்.
  • மைதா மாவுக்கு பதிலாக அதே அளவு கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
  • விருப்பப்பட்டால் ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்துக் கொள்ளலாம்.
  • ஆப்ப சோடா அல்லது பேக்கிங் சோடா சேர்க்கும்போது போண்டா மொறுமொறுப்பாக இருக்கும்.
  • குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் பச்சை மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக அரை தேக்கரண்டி மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
  • போண்டாவை மிதமான சூட்டில் இரண்டு நிமிடங்கள் முதல் மூன்று நிமிடங்கள் வரை பொரிக்கவும் அல்லது உள்ளே வேகாமல் இருக்க வாய்ப்புள்ளது.

இதர வகைகள் – மெது பக்கோடா, போண்டா சூப், சேமியா போண்டா , இட்லி மாவு போண்டா, மைசூர் போண்டா, சாம்பார் வடை, மெதுவடை, தயிர் வடை, உடனடி மெதுவடை, மொரு மொரு வடை,  பர்கர் வடை

 

 

சேமியா போண்டா செய்ய தேவையான பொருட்கள்

  • சேமியா –  1/2 கப்
  • மைதா மாவு –  4 மேஜைக்கரண்டி
  • தயிர் –  3 மேஜைக்கரண்டி 
  • பொடியாக நறுக்கிய கருவேப்பிலை –  சிறிதளவு
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி –  சிறிதளவு
  • பெரிய வெங்காயம் –  1 பொடியாக நறுக்கியது 
  • சீரகம் –  1 தேக்கரண்டி
  • பச்சை  மிளகாய் –  3 பொடியாக நறுக்கியது
  • இஞ்சி –  துண்டு பொடிதாக நறுக்கியது 
  • உப்பு  – தேவையான அளவு 
  • ஆப்ப சோடா –  1/4 தேக்கரண்டி 
  • எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

 செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

2. தண்ணீர் கொதிக்கும் போது அதில் அரை கப் சேமியா சேர்த்துக் கொள்ளவும்.

3. சேமியா மென்மையாக வெந்த பிறகு தனியே எடுத்து ஆற வைக்கவும்.

4. ஆறவைத்த சேமியா உடன்  4 மேஜைக்கரண்டி மைதா மாவு,  3 மேசைக்கரண்டி தயிர் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.

5. அதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

6. அதனுடன் ஒரு தேக்கரண்டி சீரகம்,  பொடியாக நறுக்கிய இஞ்சி  சிறிதளவு, போண்டா விற்கு  தேவையான அளவு உப்பு  ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

7. பின்னர் கால் தேக்கரண்டி அளவு பேக்கிங் சோடா சேர்த்துக் கலக்கவும்,  தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு பிசையவும்.

 8. இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் சூடு படுத்திக் கொள்ளவும். சிறு எலுமிச்சம் பழ அளவு  மாவை உருட்டி சேர்த்துக் கொள்ளவும்.

9. மிதமான சூட்டில் 2 முதல் 3 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

10. பொன்னிறமானதும் எண்ணெய் வடித்து தனியே எடுக்கவும்.

11. சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும் சுவையான சேமியா போண்டா தயார்.

Leave a Reply