Bread Pizza in Tamil |  பிரெட் பீட்சா | Bread pizza recipe | Disc pizza

See this Recipe in English

பிரெட் பீட்சா விரைவாக செய்யக்கூடிய ஒரு சுலபமான சிற்றுண்டி வகை. இது அனைவருக்கும் பிடித்தாலும் குழந்தைகள் விரும்பி உண்பார்கள். இதனை மிக மிக சுலபமான முறையில் வீட்டில் செய்யலாம். உங்களிடம் ஓவன் இருந்தால் அதனை பயன்படுத்தலாம் அல்லது தோசை தவா பயன்படுத்தியும் செய்யலாம்.  காய்கறிகள், சீஸ் போன்றவை நிறைந்த சுவையான அதேசமயத்தில் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. 

சுவையான பிரெட் பீட்சா செய்ய சில குறிப்புகள்

  • பீசா செய்வதற்கு குடைமிளகாய், வெங்காயம் தவிர  காளான், அன்னாசிப்பழம்  போன்ற வற்றையும் சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம்.
  • மொஸரெல்லா சீஸ், சடார் சீஸ் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • டொமேட்டோ சாஸ் சேர்ப்பதற்கு பதிலாக பீசா சாஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
  • பீட்சா செய்வதற்கு வெள்ளை பிரட் அல்லது கோதுமை பிரட் எது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஓவன் இல்லாமல் பீட்சா/கேக் – ஓவென் இல்லாமல் பீஸ்ஸாஓவன் இல்லாமல் பீட்சா, பீஸ்ஸா செய்வது எப்படி?, முட்டை சேர்க்காத டூட்டி ஃப்ரூட்டி கேக், முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக்,ஹனி  கேக், ரவா கேக், ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி?, ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக், முட்டை சேர்க்காத சாக்லேட் கேக், ஓரியோ கேக், பர்கர் பன்.

இதர மேற்கத்திய உணவுகள் – பிரெட் பீட்சா, மசாலா பாஸ்தா, பன்னீர் பர்கர், சிக்கன் பர்கர்,  முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக் , முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக், தவா பர்கர், வெஜிடபிள் பர்கர் .

See this Recipe in English

தேவையான பொருட்கள்

டாப்பிங் செய்ய தேவையான பொருட்கள்

  • நறுக்கிய வெங்காயம் –  1/4 கப்
  • நறுக்கிய தக்காளி –  1/4 கப்
  • நறுக்கிய குடைமிளகாய் –  1/4 கப்
  • ஆலிவ் – 3  தேக்கரண்டி
  • துருவிய mozzarella சீஸ்  – 1/4 கப்
  • உப்பு தேவையான அளவு
  • மிளகாய் வற்றல் பொடி  – 1/2 தேக்கரண்டி
  • மிளகுத்தூள் –  1/2 தேக்கரண்டி 
  • Italian seasoning –  1/2 தேக்கரண்டி
  • டொமேட்டோ சாஸ் –  1 தேக்கரண்டி 

இதர பொருட்கள்

  • பிரட் –  1 பாக்கெட்
  • டொமேட்டோ சாஸ்/ கெட்சப் –  தேவையான அளவு
  • உருக்கிய வெண்ணை –  தேவையான அளவு

செய்முறை

  1. ஒரு பவுலில் டாப்பிங் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கொள்ளவும்.
  2. நன்றாக கலந்த பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.
  3. இரண்டு பிரட் துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்,   அதனை ஒரு குக்கீ கட்டர் அல்லது பாட்டில் மூடி கொண்டு வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.
  4. வெளியே உள்ள பாகத்தை நீக்கி விடவும்.
  5. இரண்டில் ஒரு பிரட் துண்டை மட்டும் மற்றொரு சிறிய குகி கட்டர் அல்லது சிறிய பாட்டில் மூடி கொண்டு மீண்டும் ஒரு முறை வெட்டி நடுவில் உள்ள பாகத்தை நீக்கி விடவும்.
  6. மற்றொரு பிரெட் துண்டில்  டொமெட்டோ சாஸ் தடவி கொள்ளவும்.
  7. வெட்டி வைத்துள்ள பிரட் துண்டை அதன் மீது வைக்கவும்.
  8. தயார் செய்து வைத்துள்ள டாப்பிங்கை மேலே வைத்து லேசாக அழுத்தி விடவும்.
  9. அதன் மீது சிறிதளவு உருகிய வெண்ணெய் தடவி கொள்ளவும்.
  10. நீங்கள் ஓவன் பயன்படுத்தினால் 180C/360F வெப்பத்தில் 10 முதல் 12 நிமிடங்களுக்கு வேக வைக்கலாம்.
  11. தோசை தவாவில் செய்வதாக இருந்தால் தவாவை சூடு படுத்திக் கொள்ளவும்.
  12. தயார் செய்து வைத்துள்ள பிரட் பீசாவை வைக்கவும்.
  13. குறைவான தீயில் சீஸ் உருகும் வரை மூடி வைக்கவும்.
  14.  சுவையான  பிரெட் பீட்சா தயார் 

 12. தயார் செய்து வைத்துள்ள பிரட் பீட்சாவை வைக்கவும்.

13. குறைவான தீயில் சீஸ் உருகும் வரை மூடி வைக்கவும்.

14. சுவையான  பிரெட் பீட்சா தயார்.

Leave a Reply