Glazed Donut in Tamil | டோனட் | Eggless Donut in Tamil | How to make Donut in Tamil | Donut recipe

See this Recipe in English

டோனட் மிகவும் மென்மையான, சுவையான, மேற்கத்திய நாடுகளில் இருந்து பெறப்பட்ட சிற்றுண்டி வகை. இது மேலை நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக இருந்தாலும் தற்போதைய காலகட்டத்தில் இந்தியாவின் மெதுவாக பிரபலமாகி கொண்டு வருகிறது. பொதுவாக குழந்தைகள் இதனை விரும்பி உண்பார்கள். டோனட், மைதா மாவு, ஈஸ்ட் போன்றவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இதனை முட்டை சேர்த்தும் செய்யலாம் அல்லது முட்டை சேர்க்காமலும் செய்யலாம். டோனட்களில் பலவகைகள் உண்டு glazed டோனட்,  சாக்லெட் டோனட் போன்றவை பலராலும் விரும்பி உண்ணப்படுகிறது.  முட்டை சேர்க்காத glazed டோனட் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம் சுவையான டோனட் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

சுவையான டவுன்லோட் செய்ய சில குறிப்புகள்

  • வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் சூடாக அல்லது ஆறி இருந்தால் ஈஸ்ட் பொங்கி வராது.
  • விருப்பப்பட்டால் மாவு பிசையும் போது அதில் ஒரு முட்டையை சேர்த்து பிசையலாம்.
  • 6 முதல் 8 நிமிடங்களுக்கு மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும் அப்பொழுதுதான் டோனட் மென்மையாக இருக்கும்.

ஓவன் இல்லாமல் பீட்சா/கேக்ஓவென் இல்லாமல் பீஸ்ஸா, ஓவன் இல்லாமல் பீட்சா, பீஸ்ஸா செய்வது எப்படி?, முட்டை சேர்க்காத டூட்டி ஃப்ரூட்டி கேக், முட்டை சேர்க்காத சாக்லெட் ரவா கேக்,ஹனி  கேக், ரவா கேக், ஓவன் இல்லாமல் கப் கேக் செய்வது எப்படி?, ஓவன் இல்லாமல் வெண்ணிலா கேக், முட்டை சேர்க்காத சாக்லேட் கேக், ஓரியோ கேக், பர்கர் பன்.

இதர மேற்கத்திய உணவுகள் – பிரெட் பீட்சா, மசாலா பாஸ்தா, பன்னீர் பர்கர், சிக்கன் பர்கர்,  முட்டை சேர்க்காத வெண்ணிலா கேக் , முட்டை சேர்க்காத சாக்லேட் கப் கேக், தவா பர்கர், வெஜிடபிள் பர்கர் .

See this Recipe in English

தேவையான பொருட்கள்

  • தண்ணீர் – 300ml
  • ஈஸ்ட் – 1 மேஜைக்கரண்டி
  • சர்க்கரை – 1  தேக்கரண்டி
  • மைதா மாவு – 2  கப்/300g
  • வெண்ணை  – 1/4 கப்
  • உப்பு –  தேவையான அளவு
  • சமையல் எண்ணெய் –  பொரிக்க தேவையான அளவு 

Glaze 

  • வெண்ணெய் – 100g
  • பொடித்த சக்கரை – 50g
  • வெண்ணிலா எசன்ஸ் – 1  மேஜைக்கரண்டி 
  • பால் – ¼ cup 

செய்முறை

  1. ஒரு பவுலில் 300ml  வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அதில் 1 மேஜைக்கரண்டி ஈஸ்ட் மற்றும் 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
  2. அதனை 10 நிமிடங்களுக்கு தனியே வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் 300 கிராம் மைதா மாவு எடுத்துக்கொள்ளவும் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து சலித்துக் கொள்ளவும்
  4. அதனுடன்  கால் கப் உருக்கிய வெண்ணெய் மற்றும் பொங்கி வந்துள்ள ஈஸ்ட் சேர்த்து பிசையவும்.
  5. தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்து 6 முதல் 8 நிமிடங்களுக்கு நன்றாக பிசைந்து கொள்ளவும்
  6. பிசைந்த பின்னர் பவுலில் எண்ணெய் தடவி அதில் மாவை வைத்து ஒரு ஈரத்துணி கொண்டு மூடவும்.
  7. இரண்டு மணி நேரங்களுக்கு மூடி வைக்கவும்.
  8. இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு மாவை எடுத்து ஒரு சப்பாத்தி கட்டையால் தேய்க்கவும்.
  9. அரை இன்ச் தடிமனுக்கு தேய்த்துக் கொள்ளவும்.
  10. அடியில் ஒட்டாமல் இருப்பதற்காக ஒரு பார்சிமெண்ட் பேப்பர் அல்லது எண்ணெய் தடவிய இடத்தில் வைத்து மீண்டும் ஈரத்துணி கொண்டு மூடி 20 நிமிடங்களுக்கு வைக்கவும்.
  11. 20 நிமிடங்களுக்கு பின்னர் ரவுண்டான மூடிக் கொண்டு அதனை வெட்டிக் கொள்ளவும்.
  12. பின்னர் ஒரு சிறிய மூடிக்கொண்டு நடுவில் வெட்டி துளை இடவும்.
  13. இப்பொழுது டோனட்களை தனியாக எடுத்து ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் வைக்கவும்.
  14. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.
  15. குறைவான தீயில் வைத்து  ஒவ்வொன்றாக சேர்த்து பொரிக்கவும்.
  16. ஓரளவு உப்பி வந்ததும் திரும்பி போடவும்.
  17. பொன்னிறமானதும் எண்ணெய் வடித்து தனியே எடுக்கவும்.
  18. Glaze  செய்வதற்கு ஒரு பவுலில் 100 கிராம் உருக்கிய வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  19. அதனுடன் 50 கிராம் பொடித்த சர்க்கரை மற்றும் 1 மேஜைக்கரண்டி வெண்ணிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும்.
  20. நன்றாக கலந்த பின்னர் 1/4 கப் பால் சேர்த்துக் கொள்ளவும்.
  21. நன்றாக கலந்து கொள்ளவும்.
  22. இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள டோனட் ஒவ்வொன்றாக சேர்த்து ஒரு ஸ்பூன் கொண்டு திருப்பி போடவும்.
  23. அதனை ஒரு கூலிங் ரேக்கில் வைத்து ஆற வைக்கவும்.
  24. சுவையான  glazed donut தயார்.

செய்முறை

1. ஒரு பவுலில் 300ml  வெதுவெதுப்பான தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அதில் 1 மேஜைக்கரண்டி ஈஸ்ட் மற்றும் 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

2. அதனை 10 நிமிடங்களுக்கு தனியே வைக்கவும்.

3. ஒரு பாத்திரத்தில் 300 கிராம் மைதா மாவு எடுத்துக்கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து சலித்துக் கொள்ளவும்.

4. அதனுடன்  கால் கப் உருக்கிய வெண்ணெய் மற்றும் பொங்கி வந்துள்ள ஈஸ்ட் சேர்த்து பிசையவும்.

5. தேவைப்பட்டால் மேலும் தண்ணீர் சேர்த்து 6 முதல் 8 நிமிடங்களுக்கு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

6. பிசைந்த பின்னர் பவுலில் எண்ணெய் தடவி அதில் மாவை வைத்து ஒரு ஈரத்துணி கொண்டு மூடவும்.

7. இரண்டு மணி நேரங்களுக்கு மூடி வைக்கவும்.

8. இரண்டு மணி நேரங்களுக்கு பிறகு மாவை எடுத்து ஒரு சப்பாத்தி கட்டையால் தேய்க்கவும்.

9. அரை இன்ச் தடிமனுக்கு தேய்த்துக் கொள்ளவும்.

10. அடியில் ஒட்டாமல் இருப்பதற்காக ஒரு பார்சிமெண்ட் பேப்பர் அல்லது எண்ணெய் தடவிய இடத்தில் வைத்து மீண்டும் ஈரத்துணி கொண்டு மூடி 20 நிமிடங்களுக்கு வைக்கவும்.

11. 20 நிமிடங்களுக்கு பின்னர் ரவுண்டான மூடிக் கொண்டு அதனை வெட்டிக் கொள்ளவும்.

12. பின்னர் ஒரு சிறிய மூடிக்கொண்டு நடுவில் வெட்டி துளை இடவும்.

13. இப்பொழுது டோனட்களை தனியாக எடுத்து ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் வைக்கவும்.

14. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, குறைவான தீயில் வைத்து  ஒவ்வொன்றாக சேர்த்து பொரிக்கவும்.

15. ஓரளவு உப்பி வந்ததும் திரும்பி போடவும்.

16. பொன்னிறமானதும் எண்ணெய் வடித்து தனியே எடுக்கவும்.

17. Glaze  செய்வதற்கு ஒரு பவுலில் 100 கிராம் உருக்கிய வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.

18. அதனுடன் 50 கிராம் பொடித்த சர்க்கரை, 1 மேசைக்கரண்டி வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.

19. நன்றாக கலந்த பின்னர் 1/4 கப் பால் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக கலந்து கொள்ளவும்.

20. இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள டோனட் ஒவ்வொன்றாக சேர்த்து ஒரு ஸ்பூன் கொண்டு திருப்பி போடவும்.

21. அதனை ஒரு கூலிங் ரேக்கில் வைத்து ஆற வைக்கவும். சுவையான  glazed donut தயார்.

Leave a Reply