Aval Payasam in Tamil | அவல் பாயசம் | Poha milk kheer | Payasam recipe

See this Recipe in English

அவல் பாயசம் மிகவும் விரைவாக செய்யகூடிய அதேசமயத்தில் சுலபமான பாயசம்,  இதனை 10 – 15 நிமிடங்களில் செய்து விடலாம்.  சர்க்கரை சேர்க்காமல் வெல்லம் சேர்த்து இந்த பாயசத்தை செய்யும்போது சுவையுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.  அவல் பாயசம் கிருஷ்ண ஜெயந்தி, கிருத்திகை போன்ற விசேஷ நாட்களில் செய்து கடவுளுக்கு படைக்கலாம் அல்லது  வீட்டில் சுப நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தினர்களுக்கு செய்வதற்கும் ஏற்றதாகும்.  சுவையான அவல் பாயசம் சுலபமான முறையில் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

சுவையான அவல் பாயசம் செய்ய சில குறிப்புகள்

  • நைஸ் அவல், கெட்டி  அவல்,  சிகப்பு அவல் போன்ற விதவிதமான அவல் வகைகள் கடைகளில் கிடைக்கும், பாயசம் செய்வதற்கு கெட்டி அவல் அல்லது சிகப்பு அவல் பயன்படுத்தலாம்.
  • தண்ணீர் சேர்க்காத திக்கான பால் சேர்த்துக் கொள்ளவும்.
  • அவலை நெய்யில் வாசம் வரும் வரை நன்றாக வறுத்து பின்னர் பாயசம் செய்யவும். 
  • முந்திரி பருப்புடன்  திராட்சையையும் நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.
  • வெல்லம்சேர்ப்பதற்கு பதிலாக சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம், சர்க்கரை சேர்ப்பதாக இருந்தால் ½  கப் முதல் ¾  கப் வரை உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.

இதர வகைகள் – பழ சர்பத்ரோஸ் மில்க், கேரட் மில்க் ஷேக்,பாதாம் பால், கேரமல் பாயாசம், கோதுமை ரவை பாயசம்ரவா பாயசம், ஜவ்வரிசி பாயசம், சிறுதானிய பாயசம், பருப்பு பாயசம், பாதாம் பால், தர்பூசணி ஜூஸ், மதுரை ஸ்பேஷல் ஜிகர்தண்டா

இதர இனிப்பு வகைகள் –பிரட் குலாப் ஜாமுன், கோதுமை ரவை கேசரி, காசி அல்வா, மால்புவா, கோதுமை அல்வா, குலாப் ஜாமுன், ரவா லட்டு, இனிப்பு காஜா, கடலை பர்ஃபி, ரவா  இனிப்பு அப்பம், கோவில் சக்கரை பொங்கல், ரசமலாய், நெய்யப்பம்.

 

 

See this Recipe in English

 

அவல் பாயசம் செய்ய தேவையான பொருட்கள்

  • பால் – ¾  லிட்டர் (3 கப்)
  • அவல் –  ½  கப் (100g)
  • வெல்லம் – ½  கப் (120g)
  • நெய் – 1  மேஜைக்கரண்டி
  • முந்திரி பருப்பு – 10
  • ஏலக்காய் பொடி – ¼  தேக்கரண்டி

செய்முறை

1. அவல் பாயசம் செய்ய  ஒரு பாத்திரத்தில் ¾  லிட்டர் பால் சேர்த்து காய்ச்சவும்.

2. பால் பொங்கி வந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.

3. ஒரு பேனில் 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.

4. நெய் சூடானதும் 10 – 15 முந்திரி பருப்புகளை லேசாக உடைத்து சேர்த்துக் கொள்ளவும்.

 5. மிதமான தீயில் வைத்து பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.

6.பின்னர் அதனை தனியே எடுத்து வைக்கவும்.

7. அதே பாத்திரத்தில் ½ கப் கெட்டி அவல் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

8. அவல் லேசாக பொரிந்து வாசனை வரும் வரை வறுக்கவும்.

9. பின்னர் அதனுடன் காய்ச்சி வைத்துள்ள பால் சேர்த்துக் கொள்ளவும்.

10. அவள் நன்றாக வேகும் வரை மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.

11. ஒரு பாத்திரத்தில் ½ கப் வெல்லம் சேர்த்துக் கொள்ளவும்.

12. அதில்  சிறிதளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும்.

13. 5 – 6 நிமிடங்களில் பால்  கெட்டியாகி அவல் வெந்துருப்பதை பார்க்கலாம்,  அல்லது அவலை கைகளில் எடுத்து நசுக்கி பார்த்தால் மசியும்.

14. இப்பொழுது வெல்லக் கரைசலை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.

15. பின்னர் 2 – 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

 16. இப்பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்புகளை சேர்த்துக் கொள்ளவும்.

17. அதனுடன் ¼ தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்து  கலந்த பின்னர் இறக்கி வைக்கவும். 

18. சுவையான அவல் பாயசம் தயார்.

Leave a Reply