See this Recipe in English
பெங்காலி ஸ்வீட் புடிங் (பாப்பா டோய்) இது மேற்கு வங்காளத்தில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இனிப்பு வகை. இது செய்வது மிகவும் சுலபம், இதற்கு நெய், முட்டை, போன்றவையும் தேவையில்லை. மூன்றே மூன்று பொருட்கள் முக்கியமாக தேவை. கெட்டியான தயிர், கண்டன்ஸ்டு மில்க், மற்றும் பால் இவை மூன்றும் வைத்து மிகவும் சுவையாக புடிங் செய்யலாம். இது வட இந்தியாவில் மிகவும் பிரபலமான இனிப்பு வகை.
சுவையான புட்டிங் செய்ய சில குறிப்புகள்
- கெட்டியான தயிர் பயன்படுத்திக் கொள்ளவும், வீட்டில் உறையவைத்த அல்லது கடையில் வாங்கிய என எது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
- புளிக்காத தயிர் பயன்படுத்தவும், இந்த புட்டிங் செய்வதற்கு புளித்த தயிர் பயன்படுத்தக் கூடாது.
- பொடித்த பாதாம் மற்றும் குங்குமப்பூ சிறிதளவு ஆகியவற்றை மேலே அலங்கரிக்க பயன்படுத்தியுள்ளேன் இதனை, விருப்பபட்டால் சேர்க்கலாம் அல்லது இவற்றை சேர்க்காமலும் செய்யலாம்
- தயிர் மற்றும் கண்டன்ஸ்டு மில்க் ஆகியவற்றை சம அளவில் பயன்படுத்தியுள்ளேன் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கொள்ளலாம்.
இதர பாரம்பரிய உணவுகள் – கோவில் சக்கரை பொங்கல், சக்கரை பொங்கல், இனிப்பு பிடி கொழுக்கட்டை, ராகி புட்டு, அவல் பாயசம், பருப்பு போளி, பால் கொழுக்கட்டை, புளி சாதம், சுவையான எலுமிச்சை சாதம், சுசியம், பருப்பு பாயசம் , சிறுதானிய பாயசம் , கோதுமை ரவை பாயசம், எள்ளு பூரண கொழுக்கட்டை, தேங்காய் பூரண கொழுக்கட்டை | உளுந்து பூரண கொழுக்கட்டை, கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை
See this Recipe in English
தேவையான பொருட்கள்
- 1 கப் கெட்டியான தயிர்
- 1 கப் கண்டன்ஸ்டு மில்க்
- 1/4 கப் பால்
மேலே தூவி அலங்கரிக்க
- பொடித்த பாதாம் சிறிதளவு
- குங்குமப்பூ சிறிதளவு
செய்முறை
1. ஒரு வடிகட்டி அல்லது துணியின் மீது ஒரு கப் கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ளவும்.
2. இரண்டு மணி நேரம் அப்படியே வைத்து அதில் உள்ள தண்ணீரை வடித்து எடுக்கவும்.
3. இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு கெட்டியான தயிரை ஒரு பவுலில் சேர்த்துக் கொள்ளவும்.
4. ஒரு கரண்டி அல்லது விஸ்க் வைத்து கட்டியில்லாமல் கலக்கி விடவும்.
5. இப்போது ஒரு கப் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்துக் கொள்ளவும். தயிர் மற்றும் கண்டென்ஸ்ட் மில்க் நன்கு கலக்கும் வரை/க்ரீமி ஆகும் வரை கலந்து கொள்ளவும்.
6. இப்போது கால் கப் அளவு பால் சேர்த்து கலக்கவும்.
7. சிறிய கப்புகளில் நெய் தடவிக் கொள்ளவும்.
9. அதனுள் தயாராக வைத்துள்ள தயிர் கலவையை சேர்க்கவும்.
10. அதன்மீது பொடித்த பாதாம் சிறிதளவு தூவிக் கொள்ளவும்.
11. பின்னர் சிறிதளவு குங்குமப்பூ தூவி கொள்ளவும்.
12. ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சூடானதும் அதன்மீது இட்லி தட்டு அல்லது இடியாப்ப தட்டு வைக்கவும்.
13. தயார் செய்துள்ள கப்புகளை ஒரு அலுமினியம் பாயில் அல்லது தட்டு கொண்டு மூடி இட்லி தட்டின் மீது வைக்கவும்.
14. மூடி வைத்து 20 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
15. இருபது நிமிடங்களுக்கு பின்னர் புடிங் காப்புகளை எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
16. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஜில்’லென்று பரிமாறவும்.
17. சுவையான பெங்காலி ஸ்பெஷல் ஸ்வீட் புடிங் தயார்.