Millet Payasam in Tamil | சிறுதானிய பாயசம் | தினைப் பாயசம் | Thinai payasam | Sirudhanya payasam

See this Recipe in English

சிறுதானியம் ஒரு ஆரோக்கியமான உணவு வகை,  பொதுவாக பலவிதமான சிறுதானியங்கள் கிடைக்கின்றன. தினை,  வரகு,  சாமை, குதிரைவாலி, கம்பு,  கேழ்வரகு,  சோளம் ஆகியவை தமிழகத்தில் கிடைக்கின்ற மற்றும் பயன்படுத்தப்படுகின்ற சிறுதானிய வகைகள். கால்சியம், புரதம் மற்றும் நார்ச் சத்துக்கள் நிறைந்த  சிறுதானியம் பல வகைகளில் உடல் நலத்திற்கு ஏற்றது,  சிறுதானியத்தை தினமும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும்.

சிறுதானியத்தை பயன்படுத்தி விதவிதமான உணவு வகைகளை செய்யலாம்   இட்லி,  தோசை,  பொங்கல்,  உப்புமா,  வடை,  அதிரசம் போன்ற அரிசி பயன்படுத்தி செய்யப்படும் எல்லாவிதமான உணவுகளையும் சிறுதானியத்தை பயன்படுத்தியும் செய்யலாம்,  குறிப்பாக சிறுதானிய பாயசம் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பாயாசம் வகை.  சுவையான தினை பாயசம் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

சுவையான  சிறுதானிய பாயசம் செய்ய சில குறிப்புகள்

  • பாயசம் செய்வதற்கு  தினை பயன்படுத்தியுள்ளேன், அதற்கு பதிலாக  வரகு,  சாமை அல்லது குதிரைவாலி இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தியும் பாயசம் செய்யலாம்.
  • வெல்லம் சேர்ப்பதற்கு பதிலாக அதே அளவில் சர்க்கரை சேர்த்தும் பாயசம் செய்யலாம்.
  • குங்குமப்பூ சேர்த்து உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டது.
  • சிறிதளவு  தேங்காயை பொடி பொடியாக நறுக்கி   முந்திரி திராட்சை உடன் நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.

இதர பாயசம் வகைகள் – கேரமல் பாயாசம், கேரட் பாயசம், கோதுமை ரவை பாயசம்ரவா பாயசம், ஜவ்வரிசி பாயசம், சிறுதானிய பாயசம், பருப்பு பாயசம், பாதாம் பால்.

இதர இனிப்பு வகைகள் – கோதுமைரவை கேசரி, பிரட் குலாப் ஜாமுன், கோதுமை ரவை கேசரி, காசி அல்வா, மால்புவா, கோதுமை அல்வா, குலாப் ஜாமுன், ரவா லட்டு, இனிப்பு காஜா, கடலை பர்ஃபி, ரவா  இனிப்பு அப்பம், கோவில் சக்கரை பொங்கல், ரசமலாய், நெய்யப்பம்.

 

See this Recipe in English

 

தினை பாயசம் செய்ய தேவையான பொருட்கள்

  • தினை – ¼ கப் – 40g
  • பாசிப்பருப்பு -½ கப் – 100g
  • பால் – 3 கப் – 750ml + 5 தேக்கரண்டி
  • வெல்லம் – 1 கப் – 250g
  • ஏலக்காய் பொடி – ½  தேக்கரண்டி
  •  குங்குமப்பூ – 1  சிட்டிகை
  • நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை  –  தேவையான அளவு

 செய்முறை 

1. ஒரு பாத்திரத்தில் ¼ கப் தினை சேர்த்துக் கொள்ளவும்,  அதனுடன் ½ கப் பாசிப்பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.

2. மிதமான தீயில் வைத்து மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

3. பின்னர் 2  கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 3 விசில் வைத்து வேக வைக்கவும்.

4.  தினை மற்றும் பாசிப் பருப்பு நன்றாக வெந்தவுடன்,  ஒரு அகலமான   பாத்திரத்தில் மாற்றி  அதனுடன் அதனுடன் 3 கப் பால் சேர்த்துக் கொள்ளவும்.

5. குறைவான தீயில் வைத்து 10 நிமிடங்களுக்கு நன்றாக கிளறவும்.

6. ஒரு பானில்  1 கப் வெல்லம் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

7. வெல்லம் ஓரளவு கொதித்து வெல்ல பாகு தயாரானதும், அதனை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.

8. அதனை சிறிது நேரம் கொதிக்க வைத்த பின்னர்,  ½ தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

9. 5 தேக்கரண்டி பாலில் 1 சிட்டிகை குங்குமப் பூவை சிறிது நேரம் ஊற வைத்து சேர்த்துக் கொள்ளவும்.

10. பின்னர் சிறிதளவு முந்திரி மற்றும் திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளவும்.

11. ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விடவும். சுவையான சிறுதானிய/தினை பாயசம் தயார்.

Leave a Reply