Javvarisi Payasam in tamil | ஜவ்வரிசி பாயசம் | Sago Kheer | Payasam in Tamil | How to make Payasam | Easy Payasam

See this Recipe in English

ஜவ்வரிசி பாயசம் ஜவ்வரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, பால், மற்றும் கண்டன்ஸ்டு மில்க், கொண்டு செய்யப்படுகிறது. பாயசம் பலவிதமாக செய்யலாம், பால் பாயசம், சேமியா பாயசம், பருப்பு பாயசம், இவற்றில் பொதுவாக பால் சேர்க்கப்படுகிறது. மேலும் பருப்பு பாயசம் தவிர மற்ற எல்லா வகையிலும் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. பருப்பு பாயசம் வெல்லம் சேர்த்து செய்யப்படும்.

சுவையான ஜவ்வரிசி பாயசம் செய்ய சில குறிப்புகள்

  • ஜவ்வரிசியில் வெள்ளை ஜவ்வரிசி மற்றும் நைலான் ஜவ்வரிசி ஆகியவை கிடைக்கும். நைலான் ஜவ்வரிசி வெள்ளை ஜவ்வரிசி விட சுவையாக இருக்கும் அதேசமயம் இதனை ஊற வைக்கத் தேவையில்லை.
  • வெள்ளை அரிசி அல்லது நைலான் ஜவ்வரிசி இரண்டும் பயன்படுத்தலாம் ஆனால் வெள்ளை ஜவ்வரிசி பயன்படுத்தும்போது ஊறவைத்து பயன்படுத்த வேண்டும்.
  • சர்க்கரை மற்றும் கண்டன்ஸ்டு மில்க் சேர்க்கும் பொழுது தேவைக்கு தகுந்தாற்போல் சேர்த்துக் கொள்ளலாம்.
  • பாயசத்தில் முந்திரி, திராட்சையுடன் பாதாம், பிஸ்தா பருப்பு ஆகியவை சேர்க்கலாம் அல்லது இவற்றை சேர்க்காமலும் பாயசம் செய்யலாம்.

இதர பாயசம் வகைகள் – கோதுமை ரவை பாயசம்ரவா பாயசம், ஜவ்வரிசி பாயசம், சிறுதானிய பாயசம், பருப்பு பாயசம், பாதாம் பால்.

இதர இனிப்பு வகைகள் – பிரட் குலாப் ஜாமுன், கோதுமை ரவை கேசரி, காசி அல்வா, மால்புவா, கோதுமை அல்வா, குலாப் ஜாமுன், ரவா லட்டு, இனிப்பு காஜா, கடலை பர்ஃபி, ரவா  இனிப்பு அப்பம், கோவில் சக்கரை பொங்கல், ரசமலாய், நெய்யப்பம்.

See this Recipe in English

ஜவ்வரிசி பாயசம் செய்ய தேவையான பொருட்கள்

  • 500 ml பால்
  • 4 தேக்கரண்டி நெய்
  • 1/2 கப் ஜவ்வரிசி
  • 1/2 கப் கண்டன்ஸ்டு மில்க்
  • 1/2 கப் சர்க்கரை
  • 1/2 தேக்கரண்டி ஏலக்காய்த்தூள்
  • 1/2 தேக்கரண்டி குங்குமப்பூ
  •  10 முந்திரி பருப்பு
  •  10 காய்ந்த திராட்சை
  •  பாதாம் உடைத்தது சிறிதளவு
  •  பிஸ்தா பருப்பு உடைத்தது சிறிதளவு

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பால் சேர்த்து காய்ச்சவும்.

2. பால் காய்ந்த பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

3. அகலமான பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும், அரை கப் ஜவ்வரிசி சேர்த்து குறைவான தீயில் வறுக்கவும்.

4. இப்பொழுது ஜவ்வரிசி உப்பி வருவதை பார்க்கலாம்.

 

5. இளவரசி பொரிந்து வந்தபின்னர், ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் 2 முதல் 3 நிமிடங்கள் வைக்கவும்.

6. இப்பொழுது அடுப்பை அணைத்துவிட்டு 10 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.

 

7. பத்து நிமிடங்களுக்கு பின்பு ஜவ்வரிசி மென்மையாக வந்திருப்பதைப் பார்க்கலாம்.

8. இப்பொழுது மீண்டும் அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும் அதனுடன் காய்ச்சி வைத்துள்ள பால் சேர்க்கவும்.

 

9. மேலும் அரை கப் சர்க்கரை, அரை கப் கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும்.

10. அரைத்தேக்கரண்டி ஏலக்காய்த்தூள், அரைத்தேக்கரண்டி குங்குமப்பூ, ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

11. ஒரு சிறிய பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் 10 முந்திரி பருப்பு, 10 காய்ந்த திராட்சை, ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும்.

12. பொன்னிறமானதும் பாதாம் மற்றும் பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.

 13. இப்பொழுது வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, பாதாம், பிஸ்தாவை, பாயசத்தில் கலக்கவும்.

14. சுவையான பாயசம் தயார், இதனை இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு பரிமாறினால் மேலும் சுவையாக இருக்கும். 

 

Leave a Reply