மால்புவா வட இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற இனிப்பு வகை இது மைதா மாவு, சர்க்கரை, ரவை, கான்பிளவர், ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான இனிப்பு வகை. இதனை மிகவும் சுலபமான முறையில் 15 – 20 நிமிடங்களுக்குள் செய்து முடிக்கலாம். வழக்கமான தென்னிந்திய இனிப்பு வகைகளை காட்டிலும் வேறுபட்ட சுவையான மால்புவா நீங்களும் வீட்டில் செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான மால்புவா செய்ய சில குறிப்புகள்
- சர்க்கரை பாகு செய்யும் பொழுது ஓரளவுக்கு திக்காக காய்ச்சிக் கொள்ளவும், கம்பிப் பதம் வர தேவை இல்லை குலாப்ஜாமுன்க்கு செய்வதைவிட சற்று திக்காக இருக்க வேண்டும்.
- வெளிர் மஞ்சள் நிறத்திற்காக குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளலாம் அல்லது குங்குமப்பூ சேர்க்காமலும் செய்யலாம்.
- உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சர்க்கரையை சேர்த்துக்கொள்ளலாம்.
- எண்ணெயில் மாவை ஊற்றும் பொழுது குறைவான தீயில் வைத்து ஊற்றிக் கொள்ளவும், அது மேலெழும்பி வந்த பிறகு மிதமான தீயில் வைத்து பொரிக்கவும்.
- மால்புவா சர்க்கரை பாகில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும் அதிக நேரம் ஊற வைக்க வேண்டாம்.
இதர வட இந்திய இனிப்பு வகைகள் – பால் பவுடர் குலாப் ஜாமுன், மோத்திசூர் லட்டு, கேரட் அல்வா , ஹல்கோவா, குல்பி, கேரட் மில்க் ஷேக், கோதுமைரவை கேசரி, பிரட் குலாப் ஜாமுன், கோதுமை ரவை கேசரி, கோதுமை அல்வா, இனிப்பு காஜா, ரோஸ் ரசகுல்லா, ரசமலாய், பெங்காலி ஸ்வீட் புடிங், கோதுமை குலாப் ஜாமுன், பாதாம் அல்வா, பலுடா, பாதாம் பால்.
மால்புவா செய்ய தேவையான பொருட்கள்
சக்கரை பாகு
- சர்க்கரை – 1 கப் – 200g
- தண்ணீர் – 1/2 கப்
- ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
- குங்குமப்பூ – 1 சிட்டிகை
மால்புவா
- பால்கோவா (சர்க்கரை சேர்க்காதது) – 1 கப் – 200g
- மைதா மாவு – 1 கப் – 150g
- ரவை – ½ கப் – 80g
- கான்ப்ளவர் – ¼ கப் – 30g
- சர்க்கரை – 4 தேக்கரண்டி
- சோம்பு – 1/2 தேக்கரண்டி
- ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
- எண்ணை – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
- சர்க்கரை பாகு செய்வதற்கு ஒரு பேனில் 1 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
- அதனுடன் 1/2 கப் தண்ணீர், 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி மற்றும் 1 சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து கலக்கவும்.
- மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும்.
- சக்கரை பாகு ஓரளவு கெட்டி ஆனதும் அடுப்பை அணைத்து தனியே வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் 1 கப் சர்க்கரை சேர்க்காத பால்கோவா சேர்த்துக் கொள்ளவும்.
- அதனுடன் 1 கப் மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும்.
- 1/2 கப் ரவை சேர்த்துக் கொள்ளவும்.
- 1/4 கப் கான்பிளவர் மாவு சேர்த்துக் கொள்ளவும்.
- 1/2 தேக்கரண்டி சோம்பு மற்றும் 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.
- ஒரு ஸ்பூன் வைத்து நன்கு கலந்த பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தயார் செய்து வைத்துள்ள மாவை ஒரு குழி கரண்டி ஊற்றவும்.
- குறைவான தீயில் வைத்து பொரிக்கவும்.
- ஓரளவு வெந்து மேலெழும்பி வந்தபின்னர் மிதமான தீயில் வைத்து பொரிக்கவும்.
- பொன்னிறமானதும் எண்ணெய் வடித்து தனியே எடுக்கவும்.
- சர்க்கரை பாகில் 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின்னர் பரிமாறவும்.
- சுவையான மால்புவா தயார்.
செய்முறை
1. சர்க்கரை பாகு செய்வதற்கு ஒரு பேனில் 1 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
2. அதனுடன் 1/2 கப் தண்ணீர், 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி மற்றும் 1 சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து கலக்கவும்.
3. மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்கவும்.
4. சக்கரை பாகு ஓரளவு கெட்டி ஆனதும் அடுப்பை அணைத்து தனியே வைக்கவும்.
5. ஒரு பாத்திரத்தில் 1 கப் சர்க்கரை சேர்க்காத பால்கோவா சேர்த்துக் கொள்ளவும்.
6. அதனுடன் 1 கப் மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும்.
7. 1/2 கப் ரவை சேர்த்துக் கொள்ளவும்.
8. 1/4 கப் கான்பிளவர் மாவு சேர்த்துக் கொள்ளவும்.
9. 1/2 தேக்கரண்டி சோம்பு மற்றும் 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.
10. ஒரு ஸ்பூன் வைத்து நன்கு கலக்கவும்.
11. பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
12. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தயார் செய்து வைத்துள்ள மாவை ஒரு குழி கரண்டி ஊற்றவும்.
13. குறைவான தீயில் வைத்து பொரிக்கவும்.
14. ஓரளவு வெந்து மேலெழும்பி வந்தபின்னர் மிதமான தீயில் வைத்து பொரிக்கவும். பொன்னிறமானதும் எண்ணெய் வடித்து தனியே எடுக்கவும்.
15. சர்க்கரை பாகில் 10 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின்னர் பரிமாறவும்.
16. சுவையான மால்புவா தயார்.