Broken wheat Kesari in Tamil | கோதுமைரவை கேசரி | Cracked Wheat Kesari

See this Recipe in English

கோதுமை ரவை கேசரி உடைத்த கோதுமையை வைத்து செய்யப்படும் ஒரு சுவையான இனிப்பு வகை. இது உடைத்த கோதுமையுடன் வெல்லம், ஏலக்காய் பொடி, முந்திரி பருப்பு,  நெய், ஆகியவற்றைக் கொண்டு  செய்யப்படுகிறது.  உடைத்த கோதுமையை வைத்து பொதுவாக உப்புமா செய்வார்கள், அதுதவிர கோதுமை ரவை பாயசம், கோதுமை ரவை கேசரி, போன்றவையும் சுவையாக இருக்கும்.  இது விருந்தினர்களை உபசரிக்க,  விடுமுறை நாட்களில் செய்து உண்பதற்கு மற்றும்  இறைவனுக்கு  பிரசாதமாக படைப்பதற்கு  என எல்லாவற்றிற்கும் ஏற்றது. ரவா போன்று கோதுமை ரவையிலும் விரைவாக கேசரி செய்யலாம் எல்லாவற்றிற்கும் மேலாக சர்க்கரை சேர்க்காமல் வெல்லம் சேர்த்து செய்யக்கூடிய ஆரோக்கியமான இனிப்பு வகை. சுவையான கோதுமை ரவை கேசரி நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

 சுவையான கோதுமை ரவை கேசரி செய்ய சில குறிப்புகள்

  • கேசரி செய்ய நைஸ் கோதுமை ரவை பயன்படுத்திக் கொள்ளவும்,  கோதுமை ரவை குண்டாக இருந்தால் மிக்ஸியில்  நைசாக உடைத்துக் கொள்ளவும். 
  • 1 கப் கோதுமை ரவைக்கு 2  கப் வெல்லம் சேர்த்து உள்ளேன். நீங்கள்  விருப்பத்திற்கேற்ப வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
  • கோதுமை ரவையை பிரஷர் குக்கரில் வேக வைக்கலாம்,  இதே அளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் வைத்து வேக வைக்கவும்.
  • 1 சிட்டிகை உப்பு சேர்க்கும்போது சுவை கூடுதலாக இருக்கும்.
  • விருப்பப்பட்டால் கேசரி கலர் சேர்த்துக் கொள்ளலாம்.
  • முந்திரியுடன் காய்ந்த திராட்சையை வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.
  •  விருப்பத்திற்கேற்ப நெய் சேர்த்துக் கொள்ளலாம்.

பாயசம் வகைகள் – கேரமல் பாயாசம், கோதுமை ரவை பாயசம்ரவா பாயசம், ஜவ்வரிசி பாயசம், சிறுதானிய பாயசம், பருப்பு பாயசம், பாதாம் பால்.

இதர இனிப்பு வகைகள் – பிரட் குலாப் ஜாமுன், கோதுமை ரவை கேசரி, காசி அல்வா, மால்புவா, கோதுமை அல்வா, குலாப் ஜாமுன், ரவா லட்டு, இனிப்பு காஜா, கடலை பர்ஃபி, ரவா  இனிப்பு அப்பம், கோவில் சக்கரை பொங்கல், ரசமலாய், நெய்யப்பம்.

 

 

See this Recipe in English

 தேவையான பொருட்கள்

  • கோதுமை ரவை – 1 கப் – 200g
  • நெய் – 4  தேக்கரண்டி
  • வெல்லம் – 2  கப் – 500g
  • உப்பு – 1  சிட்டிகை
  • ஏலக்காய் பொடி – ½  தேக்கரண்டி
  • வறுத்த முந்திரி பருப்பு – 10 – 15 

செய்முறை

 1. ஒரு வாணலியில் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து சூடானதும் 1 கப் கோதுமை ரவை சேர்த்து கொள்ளவும்.

2. மிதமான தீயில் 3 – 4  நிமிடங்களுக்கு/ மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.

3. ஒரு பாத்திரத்தில் 3  கப் தண்ணீர் சேர்த்து  கொதிக்க வைக்கவும்.

4. நன்றாக கொதித்த  பின்னர் வறுத்து வைத்துள்ள கோதுமையில் சேர்க்கவும்.

5. நன்றாக கிளறி பின்னர் மூடி வைத்து மிதமான தீயில் வேக வைக்கவும்,  அவ்வப்போது கிளறவும். 

6. ஒரு பாத்திரத்தில் 2  கப் வெல்லம் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

7.  வெல்லம் நன்றாக கொதித்து வெல்ல பாகு தயாரானதும் தனியே எடுத்து வைக்கவும்.

8. கோதுமை ரவை  மென்மையாக பஞ்சு போன்று வெந்த பின்னர்  தயாராக வைத்துள்ள வெல்ல பாகை சேர்த்து  2 – 3  நிமிடங்களுக்கு நன்றாக கிளறவும்.

9. அதனுடன் 3  தேக்கரண்டியளவு நெய்  சேர்த்துக் கொள்ளவும்.

10. கோதுமை ரவை கேசரி கெட்டியாகும் வரை கிளறவும்.

11. பின்னர் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும்.

12. அதனுடன் ½  தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

13. 10 – 15  நெய்யில் வறுத்த முந்திரி பருப்புகளை அதனுடன் சேர்த்து கிளறவும்.  ஒரு நிமிடத்துக்குப் பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

14. சுவையான கோதுமை ரவை கேசரி தயார்.

 

Leave a Reply