See this Recipe in English
மசாலா டீ சுவையும் புத்துணர்ச்சியும் அளிக்கக்கூடிய டீ. இது தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. சிறிய கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை எல்லாவற்றிலும் மசாலா டீ விற்பனை செய்யப்படுகிறது. இதனை மசாலா சாய் என்று சொல்வார்கள். சாதாரணமாக டீ-யில் ஏலக்காய் அல்லது இஞ்சி தட்டி சேர்ப்பார்கள், அது தவிர பட்டை, லவங்கம் போன்றவற்றையும் சேர்த்து செய்யும்போது சுவையும், மணமும் அபாரமாக இருக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
சுவையான மசாலா டீ செய்ய சில குறிப்புகள்
- திக்கான பால் அல்லது தண்ணீர் சேர்த்து சிறிது இலகுவான பால் என எது வேண்டுமானாலும் உங்கள் சுவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளலாம்.
- ஏற்கனவே காய்ச்சிய பாலை மீண்டும் சூடு படுத்தாமல் பிரஷ்ஷாக பாலை காய்ச்சி பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.
- மசாலா பொருட்களை கல்லில் இடிக்கலாம் அல்லது மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
- பட்டை, லவங்கம், ஏலக்காய், சேர்த்து இடிக்கும் பொழுது ஏலக்காய் விதை தூளாகும் வரை இடித்து கொள்ளவும்.
- சூடான தண்ணீரில் டீ தூளை சேர்த்து நன்றாக கொதித்த பின்னர் மசாலா பொருட்களை சேர்க்கவும்.
- மசாலா பொருட்கள் மற்றும் டீத்தூள் ஆகியவை மணம் வரும் வரை அல்லது பாதியாக சுண்டும் வரை காய்ச்சி அதன் பின்னர் டீ போடவும்.
- டீத்தூள் மற்றும் சர்க்கரை உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
- டீ டிகாஷன் செய்ய தண்ணீரை சேர்க்கும் பொழுது உங்கள் விருப்பத்திற்கேற்ப கூடவோ அல்லது குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம்.
இதர வகைகள் – பர்கர் வடை, தவா பர்கர், வெஜிடபிள் பர்கர், சோயா கட்லட், பாசிப்பருப்பு இட்லி, மசாலா பாஸ்தா, பாசிப்பருப்பு ஃப்ரை, பிரட் சில்லி, போண்டா சூப், பிரெட் பீட்சா, உடனடி மெதுவடை, உருளைக்கிழங்கு ரிங்ஸ், சேமியா போண்டா , மொரு மொரு வடை, காலிஃப்ளவர் ஸ்னாக்ஸ், ரவா இட்லி, ஓவென் இல்லாமல் பீஸ்ஸா, வெஜிடபிள் கட்லெட்.
See this Recipe in English
தேவையான பொருட்கள்
- பால் – 2 கப்
- ஏலக்காய் – 6
- பட்டை – 1 துண்டு
- லவங்கம் – 4
- இஞ்சி – 1 துண்டு
- டீ தூள் – 2 தேக்கரண்டி/ தேவைக்கேற்ப
- சர்க்கரை – 2 தேக்கரண்டி/ தேவைக்கேற்ப
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் 2 கப் பால் சேர்த்து காய்ச்சவும்.
2. ஒரு இடிக்கும் கல் அல்லது மிக்சி ஜாரில் 6 ஏலக்காய் சேர்த்துக் கொள்ளவும்.
3. அதனுடன் 1 துண்டு பட்டை சேர்க்கவும்.
4. பின்னர் 4 லவங்கம் சேர்த்து நைசாக இடித்துக் கொள்ளவும்.
5. கல்லில் 1 துண்டு இஞ்சி சேர்த்து இடிக்கவும். பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.
6. ஒரு பானில் 1 கப் தண்ணீர் சேர்த்து சூடானதும் 2 தேக்கரண்டி டீத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
7. டீத்தூள் கொதிக்கும் பொழுது அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் இஞ்சியை சேர்த்து கலக்கவும்.
8. அதனை 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வைக்கவும் அல்லது பாதியாக சுண்டி வரும் வரை கொதிக்க வைக்கவும்.
9. பின்னர் 2 தேக்கரண்டி அல்லது உங்கள் தேவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
10. பால் பொங்கி வந்ததும் அதனை டீ டிகாஷன் உடன் சேர்த்து கொள்ளவும்.
11. மேலும் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.
11. அதனை ஒரு வடிகட்டிக் கொண்டு வடிகட்டி சூடாக பரிமாறவும்.
12. சுவையான மசாலா தயார்.