See this Recipe in English
மில்க் கேக் பால்கோவா போன்று பால் மற்றும் சர்க்கரையை கொண்டு செய்யப்படுகிறது. ஆனால் பால்கோவாவை விட வேறுபட்ட சுவையுடன் இருக்கும். இது மிகவும் எளிமையாக செய்யலாம் ஆனால் செய்வதற்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை தேவைப்படும். ஸ்வீட் ஸ்டால்களில் கிடைக்கும் அதே சுவையில் குறைந்த செலவில் செய்யலாம். பால்கோவா, பால், மற்றும் சர்க்கரை, ஏலக்காய் பொடி, ஆகியவை மட்டும் கொண்டு செய்யப்படுகிறது, மில்க் கேக், பால், சர்க்கரை, பன்னீர், சிறிதளவு நெய், மற்றும் பொடித்த பாதாம், பிஸ்தா ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது.
சுவையான மில்க் கேக் செய்ய சில குறிப்புகள்
- மில்க் கேக் செய்வதற்கு ஃபுல் க்ரீம் மில்க் என சொல்லப்படும் முழு கொழுப்புள்ள பால் பயன்படுத்தவும்.
- பன்னீர் செய்யும் பொழுது வினிகர் அல்லது எலுமிச்சை பழச்சாறு இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம்
- தண்ணீரில் இருந்து வடிந்த தண்ணீரை வீணாக்காமல் சமைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
- பால்கோவா செய்யும் பொழுது குறைவான தீயில் வைத்து செய்யவும், ஒருவேளை அடிபிடித்தால் தீய்ந்த வாடை வர வாய்ப்புள்ளது.
- பால்கோவா போன்ற இனிப்பு வகைகள் செய்வதற்கு நான்ஸ்டிக் பயன்படுத்தலாம் அல்லது இரும்பு சட்டி பயன்படுத்தலாம் அல்லது அடிகனமான பாத்திரம் பயன்படுத்தவும்.
- நீங்கள் விருப்பப்பட்டால் இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
- சர்க்கரை உங்கள் சுவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளவும்.
- விருப்பப்பட்டால் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளலாம்.
- பால்கோவா நன்கு ஆறிய பின்னர் வெளியே எடுப்பதற்கு கடினமாக இருந்தால் பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து லேசாக சூடுபடுத்தி பின்னர் வெளியே எடுக்கவும்.
இதர பாரம்பரிய உணவுகள் – கோவில் சக்கரை பொங்கல், சக்கரை பொங்கல், இனிப்பு பிடி கொழுக்கட்டை, ராகி புட்டு, அவல் பாயசம், பருப்பு போளி, பால் கொழுக்கட்டை, புளி சாதம், சுவையான எலுமிச்சை சாதம், சுசியம், பருப்பு பாயசம் , சிறுதானிய பாயசம் , கோதுமை ரவை பாயசம், எள்ளு பூரண கொழுக்கட்டை, தேங்காய் பூரண கொழுக்கட்டை | உளுந்து பூரண கொழுக்கட்டை, கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை
See this Recipe in English
மில்க் கேக் செய்ய தேவையான பொருட்கள்
பன்னீர்
- 1 லிட்டர் பால்
- 2 முதல் 3 தேக்கரண்டி வினிகர் அல்லது எலுமிச்சம் பழ சாறு
மில்க் கேக்
- 2 லிட்டர் பால்
- 3/4 கப் சர்க்கரை
- 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி
- 1 தேக்கரண்டி நெய்
- 5 பாதாம் பொடித்தது
- 5 பிஸ்தா பொடித்தது
செய்முறை
1. பன்னீர் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் பால் சேர்த்து சூடாக்கவும்.
2. பால் சூடானதும் அதில் 2 முதல் 3 தேக்கரண்டி அளவு வினிகர் அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கொள்ளவும்.
3. சேர்த்த பின்னர் தொடர்ந்து கிளறவும் அப்போது பால் திரிந்து வருவதை பார்க்கலாம்.
4. பால் திரிந்த பின்னர் ஒரு வடிகட்டியில் சுத்தமான காட்டன் துணி போட்டு அதன் மீது தண்ணீரை வடிகட்டவும்.
5. சுத்தமான தண்ணீர் ஊற்றி மீண்டும் ஒரு முறை அலசவும்.
6. 30 முதல் 45 நிமிடங்களுக்கு அல்லது தண்ணீர் வடியும் வரை தொங்க விடவும்.
7. தண்ணீர் வடிந்த பின்னர் அதனை ஒரு தட்டில் வைத்து நன்றாக உடைத்து விடவும், பன்னீர் தயாராக உள்ளது இதனை தனியே வைக்கவும்.
மில்க் கேக் செய்யும் முறை
1. ஒரு அகலமான இரும்பு சட்டி அல்லது நான்ஸ்டிக் பாத்திரத்தில் 2 லிட்டர் அளவு பால் சேர்த்துக் கொள்ளவும்.
2. இப்பொழுது அடிப்பிடிக்காமல் மிதமான தீயில் வைத்துக் கிளறவும்.
3. ஒரு மணி நேரத்திற்கு பிறகு பால் பாதியாக சுண்டி இருக்கும். இப்பொழுது குறைவான தீயில் மீண்டும் கிளறவும்.
4. ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு தயார் செய்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து கலக்கவும்.
5. நன்கு கலந்த பின்னர் அரைத்தேக்கரண்டி ஏலக்காய் பொடி மற்றும் முக்கால் கப் அளவு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
6. சர்க்கரை சேர்த்த பின்னர் இளகி வருவதைப் பார்க்கலாம். ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.
7. கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.
9. தயாராகியுள்ள பால்கோவாவை நெய் தடவிய பாத்திரத்தில் மாற்றி லேசாக அழுத்தி விடவும்.
10. அதன்மீது பொடியாக நறுக்கி வைத்துள்ள பாதாம் மற்றும் பிஸ்தா சேர்த்து மீண்டும் ஒருமுறை லேசாக அழுத்தி விடவும்.
11. ஐந்து முதல் ஆறு மணி நேரத்திற்கு பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பரிமாறவும்.
12. சுவையான மில்க் கேக் தயார்.