Mysore Pak in Tamil | நெய் மைசூர் பாக் | Ghee Mysore Pak in Tamil | How to make soft Mysore Pak

See this Recipe in English

நெய் மைசூர் பாக் மைசூரில் இருந்து பெறப்பட்ட இனிப்பு வகை. இது பொதுவாக தீபாவளி நேரங்களில் செய்யப்படும். மைசூர்பாக் நாம் இரண்டு விதமாக செய்யலாம் ஒன்று மென்மையாகவும்  நெய் அதிகமாக சேர்க்கப்பட்டு வாயில் கரையும் சுவையுடன் இருக்கும்,  மற்றும் பாரம்பரிய முறையில் செய்யப்படும் சற்று கடினமாக சிறு சிறு ஓட்டைகள் உடன் இருக்கக்கூடிய மைசூர்பாக். இது  நெய் மைசூர் பாக்கில் இருந்து வேறுபட்டது இதற்கு அதிக அளவில் நெய் சேர்க்க தேவையில்லை. 

சுவையான நெய் மைசூர் பாக் செய்ய சில குறிப்புகள்

  1. மைசூர்பாக் செய்வதற்கு தரமான மற்றும் புதிதாக  அரைத்த அல்லது வாங்கிய கடலைமாவு பயன்படுத்தவும்.
  2. நெய்  மைசூர்பாக் செய்வதற்கு நெய சுவை பிரதானமாகும் எனவே தரமான பசு நெய்  பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
  3. ஒரு கப்  கடலை மாவு – ஒன்றேகால் கப் அளவு சர்க்கரை பயன்படுத்தியுள்ளேன். இது பொதுவான அளவு. நீங்கள் விருப்பப்பட்டால் சிறிதளவு கூடுதலாகவோ அல்லது குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம்.
  4. மைசூர்பாக் கிளறும் பொழுது குறைவான தீயில் வைத்து கிளற வேண்டும். அதிக தீயில் வைத்தால் அடி பிடிக்க வாய்ப்புள்ளது அல்லது மைசூர்பாக் கெட்டியாகி விடும் வாய்ப்புள்ளது.
  5. மைசூர்பாக் தயாரானவுடன் ஒரு டிரே அல்லது தட்டில் கொட்டிய பின்னர் முழுவதுமாக ஆர விடாமல் 30- 40 நிமிடங்கள் கழித்து அல்லது வெதுவெதுப்பாக இருக்கும்போது மற்றொரு பாத்திரத்தில் கொட்டி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளலாம்.

தீபாவளி இனிப்பு வகைகள் – ரவா லட்டு , மோட்டிச்சூர் லட்டுபாசிப்பருப்பு உருண்டை, பூந்திலட்டு, ரோஸ் பர்பி , குலாப் ஜாமுன், கோதுமை குலாப் ஜாமுன், கோதுமை அல்வா,  பாதாம் அல்வா, அசோகா அல்வா, திருநெல்வேலி அல்வா,   பால்கோவா, இனிப்பு காஜா, சாக்லேட் பர்ஃபி.

 

See this Recipe in English

நெய் மைசூர் பாக் செய்ய தேவையான பொருட்கள்

  • 1 கப் கடலை மாவு
  • 2 கப் நெய்
  • 1 1/4 கப் சர்க்கரை 

செய்முறை

1. ஒரு கடாய் அல்லது வாணலியில் ஒரு கப் கடலை மாவு சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து கொள்ளவும்.

2. பச்சை வாசனை போகும் வரை அல்லது மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும்.

3. கடலைமாவை வறுத்த பிறகு ஒரு நைஸ் சல்லடையில் சேர்த்து கட்டிகளில்லாமல் சலித்துக் கொள்ளவும்.

4. ஒரு பாத்திரத்தில் 2 கப் நெய்  சேர்த்து சூடாக்கவும்,  நெய் மிகவும் சூடாக அல்லாமல் லேசான வெதுவெதுப்பாக ஆனவுடன் அடுப்பை அணைத்து தனியே வைக்கவும்.

5. சலித்து வைத்துள்ள கடலை மாவு ஒரு கப் வெதுவெதுப்பான நெய் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கவும்.

6. ஒரு பாத்திரத்தில் ஒண்ணேகால் கப் சர்க்கரை சேர்த்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.

7. ஐந்து அல்லது ஆறு நிமிடங்களில் சர்க்கரை பாகு  தயாராகிவிடும், சக்கரை பாகு ஒரு கம்பிப் பதம் இருக்க வேண்டும்.

8. இப்பொழுது கடலை மாவு நெய் கலவையை சர்க்கரை பாகில் சேர்த்து குறைவான தீயில் கிளறவும்.

9. மீதமுள்ள ஒரு கப் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும்.

10. மைசூர் பாக் தயாராக 20 முதல் 25 நிமிடங்கள் வரை ஆகும்,  ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை நான் இரண்டு கரண்டி நெய் சேர்த்துள்ளேன்.

11. 20 – 25  நிமிடங்களுக்கு பிறகு  மைசூர் பாக் திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.

12. ஒரு ட்ரே அல்லது தட்டில் நெய் தடவி கொள்ளவும்,  தயாராக வைத்துள்ள மைசூர் பாக்கை அதில் கொட்டி 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஆறவிடவும்.

13. பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

14. சுவையான நெய் மைசூர்  தயார் .

Leave a Reply