See this Recipe in English
கோதுமை ரவை கேசரி ரவா, கோதுமை மாவு, சர்க்கரை ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் இனிப்பு வகை. இது விரைவாக செய்யக்கூடியது, அதே சமயத்தில் மிகவும் சுலபமாகவும் செய்யலாம். கோதுமை அல்வாவும், கேசரியும் கலந்தது போல் இதன் சுவை இருக்கும். 10 நிமிடங்களில் செய்யக்கூடிய இந்த இனிப்பை சுலபமாக செய்து பஜ்ஜி/வடை, காபியுடன் மாலை நேரங்களில் பரிமாறினால் சுவையான சிற்றுண்டியாக இருக்கும்.
சுவையான கோதுமை ரவை கேசரி செய்ய சில குறிப்புகள்
- கொரகொரப்பான ரவா பயன்படுத்தவும் நைஸ் ரவா பயன்படுத்தவேண்டாம்.
- முந்திரி மற்றும் பாதாம் தவிர பிஸ்தா, உலர் திராட்சை, போன்ற விருப்பப்பட்ட வற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
- ரவையை நெய்யில் மணம் வரும் வரை இரண்டு மூன்று நிமிடங்களுக்கு வறுத்துக் கொள்ளவும்.
- கோதுமை மாவை சேர்த்த பின்னர் அதன் பச்சை வாசனை போகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- நன்றாகக் கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீரை சேர்த்து கிளறவும் அப்போதுதான் அவை மென்மையாக வேகும்.
- நெய் தாராளமாக பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.
இதர உணவுகள் – கோவில் சக்கரை பொங்கல், சக்கரை பொங்கல், இனிப்பு பிடி கொழுக்கட்டை, ராகி புட்டு, அவல் பாயசம், பருப்பு போளி, பால் கொழுக்கட்டை, புளி சாதம், சுவையான எலுமிச்சை சாதம், சுசியம், பருப்பு பாயசம் , சிறுதானிய பாயசம் , கோதுமை ரவை பாயசம், எள்ளு பூரண கொழுக்கட்டை, தேங்காய் பூரண கொழுக்கட்டை | உளுந்து பூரண கொழுக்கட்டை, கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை
See this Recipe in English
தேவையான பொருட்கள்
- ரவா – 1 கப்
- சர்க்கரை – 1 கப்
- கோதுமை மாவு – 3 தேக்கரண்டி
- நெய் – 5 தேக்கரண்டி
- முந்திரிப் பருப்பு – ¼ கப்
- நறுக்கிய பாதாம் – ¼ கப்
- ஏலக்காய் பொடி – ½ தேக்கரண்டி
செய்முறை
- ஒரு கடாயில் நான்கு தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.
- நெய் சூடானதும் கால் கப் முந்திரி பருப்பு மற்றும் பாதாம் சேர்த்து கொள்ளவும்.
- பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் ஒரு கப் ரவை சேர்த்து வறுக்கவும்.
- நல்ல மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- அதனுடன் 3 தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளவும்.
- கோதுமை மாவின் பச்சை வாசனை போகும் வரை வறுத்துக் கொள்ளவும்
- பின்னர் 3 கப் அளவு தண்ணீரை கொதிக்கவைத்து சேர்த்துக் கொள்ளவும்
- ரவா வெந்து வரும் வரை நன்கு கிளறவும்.
- பின்னர் ஒரு கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
- ரவை சர்க்கரை உடன் ஒன்று சேர்ந்து திரண்டு வரும் வரை கிளறவும்
- இப்பொழுது 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும்.
- மூடி வைத்து குறைவான தீயில் இரண்டு நிமிடங்களுக்கு வைக்கவும்.
- இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு பரிமாறவும்.
- சுவையான கோதுமை ரவா கேசரி தயார்.
செய்முறை
1. ஒரு கடாயில் 4 தேக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.
2. நெய் சூடானதும் 1/4 கப் முந்திரி பருப்பு சேர்த்து கொள்ளவும்.
3. 1/4 கப் பாதாம் சேர்த்து கொள்ளவும்.
4. பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
5. அதனுடன் 1 கப் ரவை சேர்த்து வறுக்கவும்.
6. நல்ல மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
7. அதனுடன் 3 தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளவும்.
8. கோதுமை மாவின் பச்சை வாசனை போகும் வரை வறுத்துக் கொள்ளவும்.
9. பின்னர் 3 கப் அளவு தண்ணீரை கொதிக்கவைத்து சேர்த்துக் கொள்ளவும்.
10. ரவா வெந்து வரும் வரை நன்கு கிளறவும்.
11. பின்னர் 1 கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
12. ரவை, சர்க்கரை உடன் ஒன்று சேர்ந்து திரண்டு வரும் வரை கிளறவும்.
13. இப்பொழுது 1/2 தேக்கரண்டி ஏலக்காய் பொடி மற்றும் 1 தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும்.
14. மூடி வைத்து குறைவான தீயில் இரண்டு நிமிடங்களுக்கு வைக்கவும்.
15. இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு பரிமாறவும். சுவையான கோதுமை ரவா கேசரி தயார்.