கோதுமை அல்வா திருநெல்வேலி அல்வா போன்ற ஒரு சுவையான அல்வா வகை, ஆனால் இது திருநெல்வேலி அல்வா வில் இருந்து மாறுபட்டது. இதற்கு கோதுமை பால் எடுக்க தேவையில்லை. கோதுமை மாவை நேரடியாக சேர்த்து செய்யப்படுகிறது. இது விரைவாக செய்யக்கூடிய ஒரு சுலபமான சுவையான அல்வா. நான் முன்பே கோதுமை அல்வாவில் சர்க்கரை சேர்த்து செய்துள்ளேன், இந்த அல்வாவில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்து செய்துள்ளேன்.
சுவையான கோதுமை அல்வா செய்ய சில குறிப்புகள்
- கோதுமை மாவை பச்சை வாசனை போகும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
- வெல்லம் சேர்ப்பதற்கு பதிலாக நீங்கள் அதே அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து பயன்படுத்தலாம்.
- கோதுமை மாவை வேக வைப்பதற்கு நன்றாக கொதித்துக் கொண்டிருக்கும் நீர் சேர்க்கவேண்டும் சூடு குறைவாக இருந்தால் மாவு சரியாக வேகாது.
- மாவு நன்கு வெந்த பின்னர் வெல்ல பாகு சேர்த்துக் கொள்ளவும்.
- அல்வாவின் நிறத்திற்காக நான் சர்க்கரையை caramelise செய்து சேர்த்துள்ளேன், அதற்கு பதிலாக கேசரி கலர் சேர்த்துக் கொள்ளலாம்.
- கேசரி கலர் சேர்ப்பதாக இருந்தால் அதனுடன் கால் தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.
இதர அல்வா வகைகள் – கேரட் அல்வா, காசி அல்வா, கோதுமை அல்வா, கோதுமை அல்வா, அசோகா அல்வா, திருநெல்வேலி அல்வா, பாதாம் அல்வா
இதர பாரம்பரிய உணவுகள் – கோவில் சக்கரை பொங்கல், சக்கரை பொங்கல், இனிப்பு பிடி கொழுக்கட்டை, ராகி புட்டு, அவல் பாயசம், பருப்பு போளி, பால் கொழுக்கட்டை, புளி சாதம், சுவையான எலுமிச்சை சாதம், சுசியம், பருப்பு பாயசம் , சிறுதானிய பாயசம் , கோதுமை ரவை பாயசம், எள்ளு பூரண கொழுக்கட்டை, தேங்காய் பூரண கொழுக்கட்டை | உளுந்து பூரண கொழுக்கட்டை, கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை.
கோதுமை அல்வா செய்ய தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு – 1/2 கப் – 75 கிராம்
- வெல்லம் – 3/4 கப் – 180 கிராம்
- நெய் – 6 மேஜை கரண்டி
- சர்க்கரை – 4 தேக்கரண்டி
- முந்திரி பருப்பு – 1/4 கப்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் வெல்லம் சேர்த்து அதனுடன் கால் கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- அதனை மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.
- வெல்ல பாகு ஓரளவு திக் ஆனதும் அடுப்பை அணைத்து தனியே வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- மிதமான தீயில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
- ஒரு கடாயில் 4 மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.
- நெய் சூடானதும் கால் கப் முந்திரிப்பருப்பு சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
- முந்திரிப்பருப்பு பொன்னிறமானதும் தனியே எடுத்து வைக்கவும்.
- அதே நெய்யில் கோதுமை மாவு சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
- பச்சை வாசனை போகும் வரை நன்கு வறுக்கவும்.
- பின்னர் கொதிக்க வைத்துள்ள தண்ணீரை சேர்த்து கிளறவும்.
- மாவு வேகும் வரை கைவிடாமல் தொடர்ந்து கிளறவும்.
- ஒரு சிறிய கடாயில் 4 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- சர்க்கரை கொதித்து caramelize ஆனபின்னர், வேக வைத்துள்ள மாவில் சேர்த்து கிளறவும்.
- இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள வெல்ல பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.
- வெல்ல பாகு நன்றாக கலக்கும் வரை கிளறவும்.
- இப்பொழுது இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும்.
- ஓரங்களில் நெய் பிரிந்து வந்த பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பை சேர்த்து கிளறவும்.
- சுவையான கோதுமை அல்வா தயார்.
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் வெல்லம் சேர்த்து அதனுடன் கால் கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
2. அதனை மிதமான தீயில் கொதிக்கவைக்கவும்.வெல்ல பாகு ஓரளவு திக் ஆனதும் அடுப்பை அணைத்து தனியே வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். மிதமான தீயில் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
4. ஒரு கடாயில் 4 மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.
5. நெய் சூடானதும் கால் கப் முந்திரிப்பருப்பு சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
6. முந்திரிப்பருப்பு பொன்னிறமானதும் தனியே எடுத்து வைக்கவும்.
7. அதே நெய்யில் கோதுமை மாவு சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
8. பச்சை வாசனை போகும் வரை நன்கு வறுக்கவும்.
9. பின்னர் கொதிக்க வைத்துள்ள தண்ணீரை சேர்த்து கிளறவும்.
10. மாவு வேகும் வரை கைவிடாமல் தொடர்ந்து கிளறவும்.
11. ஒரு சிறிய கடாயில் 4 தேக்கரண்டி சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
12. சர்க்கரை கொதித்து caramelize ஆனபின்னர், வேக வைத்துள்ள மாவில் சேர்த்து கிளறவும்.
13. இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள வெல்ல பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.
14. வெல்ல பாகு நன்றாக கலக்கும் வரை கிளறவும்.
15. இப்பொழுது இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும்.
16. ஓரங்களில் நெய் பிரிந்து வந்த பின்னர் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பை சேர்த்து கிளறவும்.
17. சுவையான கோதுமை அல்வா தயார்.