Carrot Milkshake in Tamil | கேரட் மில்க் ஷேக் | Carrotshake recipe in Tamil

See this Recipe in English

கேரட் மில்க் ஷேக் வெயில் காலத்திற்கு உகந்த ஒரு சுவையான மற்றும் குளிர்ச்சியான பானம்.  இதை வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி மிகவும் சுலபமான முறையில் செய்யலாம். அதே சமயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை விரும்பி குடிப்பார்கள். உடல் நலத்திற்கு ஏற்றது மற்றும் சுவையும் அபாரமாக இருக்கும். கேரட் மில்க் ஷேக் கேரட்,  பால்,  பாதாம்,  தேன் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. சுவையான கேரட் மில்க் ஷேக்கை சுலபமான முறையில் உங்கள் வீட்டில் செய்து சுவைத்து மகிழுங்கள்.

 சுவையான கேரட் மில்க் ஷேக் செய்ய  சில குறிப்புகள்

  • கேரட் மில்க் ஷேக் செய்வதற்கு கேரட்டை வேக வைத்து பயன்படுத்தி உள்ளேன், நீங்கள் விருப்பப்பட்டால் வேக வைக்கலாம் அல்லது வேக வைக்காமல் இதே முறையில் மில்க் ஷேக் செய்யலாம்.
  • குக்கரில் வேக வைக்கும் பொழுது மென்மையாகும் வரை வேக வைத்துக் கொள்ளவும் 2 முதல் 3 விசில் வைக்கலாம்.
  • கேரட் வெந்த பிறகு நன்றாக ஆற விட்டு அதற்குப் பின்னர் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.
  • கேரட் மற்றும் பாலில் இனிப்பு சுவை இருக்கும், நீங்கள் விருப்பப்பட்டால் தேன், நாட்டுச் சர்க்கரை, பொடித்த வெல்லம், ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று சேர்த்துக் கொள்ளலாம் அல்லது இவை எதுவும் சேர்க்காமல் மில்க் ஷேக் செய்யலாம்.
  • விருப்பப்பட்டால் சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.

பாயசம் வகைகள் – கேரமல் பாயாசம், கோதுமை ரவை பாயசம்ரவா பாயசம், ஜவ்வரிசி பாயசம், சிறுதானிய பாயசம், பருப்பு பாயசம், பாதாம் பால்.

இதர இனிப்பு வகைகள் – பிரட் குலாப் ஜாமுன், கோதுமை ரவை கேசரி, காசி அல்வா, மால்புவா, கோதுமை அல்வா, குலாப் ஜாமுன், ரவா லட்டு, இனிப்பு காஜா, கடலை பர்ஃபி, ரவா  இனிப்பு அப்பம், கோவில் சக்கரை பொங்கல், ரசமலாய், நெய்யப்பம்.

 

See this Recipe in English

தேவையான பொருட்கள்

  • கேரட் – 3 (200g)
  • பால் –  1.5 கப் (375ml)
  • பாதாம் – 20 – 25
  • தேன் – 2  மேஜைக்கரண்டி

செய்முறை

1. 20 – 25  பாதாமை ½  கப் பாலில் 10 – 15 நிமிடங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளவும்.

2. ஒரு பிரஷர் குக்கரில் 200g  கேரட்டை தோலை சீவி  சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

 3. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 2 விசில் வைத்து வேக வைக்கவும்.

4.  கேரட் வெந்த பின்னர் ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து கொள்ளவும்.

 5. அதனுடன் பாலில் ஊற வைத்த பாதாமை பாலுடன் சேர்த்துக் கொள்ளவும்.

 6. அதனை நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

 7. அரைத்த பின்னர் மேலும் 1 கப் பால் சேர்த்துக் கொள்ளவும்.

 8. அதனுடன் 2 மேஜைக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ளவும்.

 9. மீண்டும் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.

 10. டம்ளரில் ஊற்றி சிறிதளவு பொடித்த பாதாம் அல்லது பிஸ்தா தூவி பரிமாறவும்.

11. விருப்பப்பட்டால் 1 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறலாம். சுவையான கேரட் மில்க் ஷேக் தயார். 

Leave a Reply