See this Recipe in English
பாப்கார்ன் சிக்கன் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள். இதனை மிகவும் சுலபமான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம். மைதா மாவு, சோள மாவு, எலும்பில்லாத சிக்கன் ஆகியவற்றை கொண்டு செய்யப்படுகிறது. இது மயோனைஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ், ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும். சுவையான பாப்கான் சிக்கனை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
சுவையான பாப்கார்ன் சிக்கன் செய்ய சில குறிப்புகள்
- பாப்கான் செய்ய தோல் எலும்புகள் நீக்கப்பட்ட சிக்கனை பயன்படுத்தவும்.
- சிக்கனை ஊற வைக்கும் பொழுது 1 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை வைக்கலாம். அதிக நேரம் ஊறவைத்தால் பாப்கான் சுவையாக இருக்கும்.
- மசாலா பொருட்கள் சேர்த்த பின்னர் சிக்கனை ஃப்ரிட்ஜில் வைத்து ஊறவிடவும்.
- சோளமாவு சேர்க்காமல் வெறும் மைதா மாவில் பிரட்டி எடுத்தும் செய்யலாம்.
- சிக்கனை பொரிக்கும் பொழுது மிதமான தீயைக் காட்டிலும் சற்றுக் கூடுதலான தீயில் வைத்து பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
- பூண்டு பொடி மற்றும் இஞ்சி பொடி (Garlic Powder & Ground Ginger) சேர்ப்பதற்கு பதிலாக இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளலாம்.
இதர வகைகள் – சிக்கன் பர்கர்,பன்னீர் பர்கர்,பர்கர் பன், பர்கர் வடை, தவா பர்கர், வெஜிடபிள் பர்கர், ஓவன் இல்லாமல் பீட்சா, பிரெட் பீட்சா,பீஸ்ஸா செய்வது எப்படி?
இதர வகைகள் – சிக்கன் பிரியாணி, சிக்கன் கிரேவி, செட்டிநாடு சிக்கன் குழம்பு, தலப்பாகட்டி பிரியாணி, இறால் தொக்கு, சிக்கன் வருவல், முட்டை மசாலா, முட்டை தம் பிரியாணி, சிக்கன் 65, முட்டை ஃப்ரைட் ரைஸ், சில்லி சிக்கன், முட்டை குழம்பு, முட்டை கொத்து பரோட்டா.
See this Recipe in English
தேவையான பொருட்கள்
சிக்கன் ஊற வைக்கத் தேவையான பொருட்கள்
- எலும்பில்லாத சிக்கன் – 400g
- உப்பு – தேவையான அளவு
- மிளகாய் தூள் – ½ தேக்கரண்டி
- சில்லி சாஸ் – ½ தேக்கரண்டி
- பூண்டுப்பொடி (Garlic Powder) – ½ தேக்கரண்டி
- இஞ்சி பொடி (Ground Ginger) – ½ தேக்கரண்டி
- புளிப்புள்ள மோர் – ¼ கப்
- முட்டை – 1
இதர பொருட்கள்
- மைதா – 1 கப் – 140g
- சோள மாவு – ½ கப் – 80g
- உப்பு – தேவையான அளவு
- மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி
- சமையல் எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் தோல், எலும்பில்லாத சிக்கனை சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
2. அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் ½ தேக்கரண்டி, சில்லி சாஸ் ½ தேக்கரண்டி, பூண்டுப்பொடி (Garlic Powder) ½ தேக்கரண்டி, இஞ்சி பொடி (Ground Ginger) ½ தேக்கரண்டி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
3. அதனுடன் லேசான புளிப்பு உள்ள மோர் ¼ கப் சேர்த்துக் கொள்ளவும்.
4. இவற்றை நன்றாக கலந்த பின்னர் மூடி வைத்து 1 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
5. ஒரு அகலமான பாத்திரத்தில்/தட்டில், 1 கப் மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும்.
6. அதனுடன் ½ கப் சோள மாவு சேர்த்துக் கொள்ளவும்.
7. மேல் மாவிற்கு தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்,.
8. ½ தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
9. எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
10. 1 மணி நேரத்திற்கு பிறகு, சிக்கனில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கலந்து கொள்ளவும்.
11. சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து கலந்து வைத்துள்ள மாவில் போட்டு பிரட்டவும்.
12. எல்லா சிக்கன் துண்டுகளையும் இதேபோல பிரட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
13. சிக்கன் துண்டுகளை எடுத்த பின்னர் மீதமுள்ள மசாலாவில் சிறிதளவு ஐஸ் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
14. சிக்கன் துண்டுகளை தண்ணீரில் 2 – 3 வினாடிகள் வைத்து மீண்டும் அதே மாவில் பிரட்டி எடுத்து வைக்கவும் .
15. பின்னர் மிதமான தீயைக் காட்டிலும் சற்றுக் கூடுதலான தீயில் எண்ணையை சூடாக்கி பின்னர் சிக்கன் துண்டுகளை சேர்த்து பொரிக்கவும்.
16. அவ்வப்போது திருப்பி போடவும், பொன்னிறமானதும் எண்ணெயை வடித்து தனியே எடுக்கவும்.
17. சுவையான பாப்கார்ன் சிக்கன் தயார்.