Wheat Halwa in Tamil | கோதுமை அல்வா | Gothumai Halwa | Halwa using wheat flour | Wheat flour halwa

See this Recipe in English

கோதுமை அல்வா தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான அல்வா வகை,  பொதுவாக அல்வா என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது திருநெல்வேலி அல்வா இது சம்பா  கோதுமை பால் கொண்டு செய்யப்படும் அற்புதமான அல்வா.  இதுதவிர மஸ்கோத் அல்வா பிரபலமான அல்வா வகை.  திருநெல்வேலி அல்வாவை தவிர்த்து திருவையாறு அசோகா அல்வா தமிழகம் முழுவதும் பிரபலம். இது பாசிப்பருப்பை வைத்து செய்யப்படுகிறது. சம்பா கோதுமையை  அரைத்து பால் எடுத்து அல்வா செய்வதற்கு பதிலாக,  கோதுமை  மாவை வைத்து பால் எடுத்து சுலபமான முறையில் அல்வா செய்யலாம்.  இதுபோன்ற மிகச் சுலபமான முறையில் கோதுமை அல்வாவை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.


சுவையான கோதுமை அல்வா செய்ய சில குறிப்புகள்

  • அல்வா செய்வதற்கு தரமான கோதுமை மாவு பயன்படுத்தவும்.
  • சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.
  • ஒரு கப் கோதுமை மாவிற்கு ½  கப் முதல் ¾  கப் வரை நெய் தேவைப்படும்.
  • கோதுமைப் பால் ஓரளவு கெட்டியானதும் அடுப்பை குறைந்த தீயில் வைத்து கிளறவும்.
  • நான்ஸ்டிக் (non-stick) பாத்திரம் பயன்படுத்தி அல்வா செய்தால் கிளறுவதற்கு சுலபமாக இருக்கும்.
  •  ஊற்றிய நெய் ஓரங்களில் பிரிந்து, பாத்திரத்தில் ஒட்டாமல் தனியாக வந்தால் அல்வா தயாராகி விட்டது என்று அர்த்தம்.

இதர அல்வா வகைகள் –  கேரட் அல்வாகாசி அல்வா, கோதுமை அல்வா, கோதுமை அல்வா, அசோகா அல்வா, திருநெல்வேலி அல்வா, பாதாம் அல்வா

இதர பாரம்பரிய உணவுகள் – கோவில் சக்கரை பொங்கல்சக்கரை பொங்கல்,  இனிப்பு பிடி கொழுக்கட்டை,  ராகி புட்டு, அவல் பாயசம்,  பருப்பு போளி, பால் கொழுக்கட்டை, புளி சாதம், சுவையான எலுமிச்சை சாதம், சுசியம், பருப்பு பாயசம் , சிறுதானிய பாயசம் , கோதுமை ரவை பாயசம், எள்ளு பூரண கொழுக்கட்டை, தேங்காய் பூரண கொழுக்கட்டை | உளுந்து பூரண கொழுக்கட்டை, கடலைப்பருப்பு பூரண கொழுக்கட்டை

 

 

See this Recipe in English

தேவையான பொருட்கள்

  • கோதுமை மாவு –  1 கப் – 150g
  • சர்க்கரை –  1 ¼  கப் – 250g
  • நெய் – ½ கப்
  • கேசரி கலர் – 1  சிட்டிகை
  • முந்திரி பருப்பு – 10
  • ஏலக்காய் பொடி – ¼  தேக்கரண்டி

செய்முறை

1. ஒரு அகலமான பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவு எடுத்துக் கொள்ளவும்.

 

2. அதனுடன் ½  கப் அல்லது தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

3. பிசைந்த பின்னர் 3 கப் தண்ணீர் ஊற்றி 1 முதல் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

4. 2 மணி நேரத்திற்குப் பிறகு கையால் பிசைந்து கோதுமை பால் எடுக்கவும்.

5. நன்றாக பிசைந்த பின்னர் ஒரு வடிகட்டியில் ஊற்றி மாவை வடிகட்டிக் கொள்ளவும்.

6. கோதுமை பாலை வடிகட்டிய பின்னர் அதனை 1 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

7. தண்ணீர் மேலே பிரிந்து கீழே கோதுமை பால் இருப்பதைக் காணலாம்.

8. மேலே இருக்கும் தண்ணீரை ஊற்றி விடவும் அதனை பயன்படுத்த தேவையில்லை.

9. அல்வா செய்ய கோதுமை பால் தயார்.

10. ஒரு பாத்திரத்தில் 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.

11. நெய்  சூடானதும் 10 முந்திரிப் பருப்புகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்து கொள்ளவும்.

12. பொன்னிறமாக வறுத்து பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

13. ஒரு பாத்திரத்தில் 1 ¼ கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

14. அதனுடன்3/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

15. சர்க்கரை கரைந்து கொதிக்கும் பொழுது தயாராக வைத்துள்ள கோதுமை பாலை சேர்க்கவும்.

16. மிதமான தீயில் வைத்து கிளறவும்.

17. ஓரளவு கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை குறைவான தீயில் வைக்கவும்.

18. இப்பொழுது சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும். 

19. பின்னர் ஒரு சிட்டிகை கேசரி கலரை 2 தேக்கரண்டி தண்ணீரில் கரைத்து விட்டு சேர்க்கவும்.

20. மீண்டும் தேவையான அளவு நெய் சேர்த்துக் கொள்ளவும். 

21. சேர்த்த நெய் உள்ளே போனதும்,  வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பை சேர்த்து கொள்ளவும். அதனுடன் ¼  தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

22. ஓரங்களில் நெய் பிரிந்து வரும் வரை கிளறவும்.

23. சுவையான கோதுமை அல்வா தயார்.

Leave a Reply