Ribbon Pakoda Recipe in Tamil | ரிப்பன் பக்கோடா | Ribbon Pakoda | How to make ribbon pakoda

See this Recipe in English

ரிப்பன் பக்கோடா மாலை வேளைகளில் உண்ணக்கூடிய ஒரு கரகரப்பான சிற்றுண்டி. முக்கியமாக பண்டிகை காலங்களில், தீபாவளி நாட்களில் செய்யப்படுகிறது. அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை கொண்டு செய்யக்கூடிய மொறுமொறுப்பான உணவு வகை.

இது தீபாவளி நாட்களில் முறுக்கு, இனிப்பு வகைகள், மற்றும் மற்ற பலகாரங்களுடன் செய்யக்கூடிய சிற்றுண்டி. அது தவிர குழந்தைகளுக்கு கொடுப்பதற்கும் மாலை நேரங்களில் காபி மற்றும் தீயுடன் கொடுப்பதற்கும் ஏற்றது. இது விரைவாக மற்றும் சுலபமாக செய்யக் கூடியது. சுவையான ரிப்பன் பக்கோடா அவை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

சுவையான ரிப்பன் பக்கோடா செய்ய சில குறிப்புகள்

  • ரிப்பன் பக்கோடா செய்ய மாவு பிசையும் பொழுது மாவு பிசையும் பொழுது மிகவும் இறுக்கமாக பிசையவேண்டாம், பக்கோடா உடைந்து விழும் வாய்ப்புள்ளது. 
  • ரிப்பன் பக்கோடா பொரிக்கும் பொழுது  சூடான எண்ணெயில் பொரிக்கவும், ஒருவேளை சூடு குறைவாக இருந்தால் பக்கோடா மொறுமொறுப்பாக வராது.
  • ஒரு சிறிய துண்டு மாவை எண்ணெயில் போட்டு அது பொரிந்து மேலே வந்தால் எண்ணெய் தயாராக உள்ளது. 
  • ஆறிய பின்னர் காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து  வைக்கவும் 10 முதல் 15 நாட்களுக்கு கரகரப்பாக இருக்கும்.
  •  பக்கோடா செய்வதற்கு அரிசி மாவு மற்றும் கடலை மாவு இரண்டையும் சம அளவில் எடுத்து செய்யலாம். 
  • காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம் அல்லது மிளகாய் தூளுக்கு பதிலாக மிளகு தூள் சேர்த்தும் பக்கோடா செய்யலாம்.
  • வெள்ளை எள் சேர்ப்பதற்கு பதிலாக நீங்கள் சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்.

இதர தீபாவளி பலகாரங்கள் – பொட்டுக்கடலை முறுக்கு,  தேங்காய் பால் முறுக்கு, மெது பக்கோடா, தட்டை முறுக்கு, முறுக்கு.

இதர தீபாவளி இனிப்பு வகைகள் – ரவா லட்டு , மோட்டிச்சூர் லட்டுபாசிப்பருப்பு உருண்டை, பூந்திலட்டு, ரோஸ் பர்பி , குலாப் ஜாமுன், கோதுமை குலாப் ஜாமுன், கோதுமை அல்வா,  பாதாம் அல்வா, அசோகா அல்வா, திருநெல்வேலி அல்வா,   பால்கோவா, இனிப்பு காஜா, சாக்லேட் பர்ஃபி.

See this Recipe in English

 ரிப்பன் பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்

  •  அரிசி மாவு – 1 கப்
  •  கடலை மாவு – 1/2 கப்
  •  பொட்டுக்கடலை மாவு – 1/2 கப்
  •  வெள்ளை எள் – 1 தேக்கரண்டி
  •  மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  •  தேவையான அளவு உப்பு
  •  பெருங்காயத் தூள் – 1/2 தேக்கரண்டி
  •  சூடான எண்ணெய் – 2 தேக்கரண்டி
  •  எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

செய்முறை 

1. ஒரு பாத்திரத்தில் 1 கப் அரிசி மாவு, 1/2 கப் கடலை மாவு, 1/2 கப் பொட்டுக்கடலை மாவு                    (பொட்டுக்கடலையை மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்) ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

 2. அதனுடன் 1 தேக்கரண்டி வெள்ளை எள்,  தேவையான அளவு உப்பு,  1/2 தேக்கரண்டி பெருங்காயத்தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 2 தேக்கரண்டி சூடான எண்ணெய், ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

 3. அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மென்மையான மாவு பிசையவும்.

 4. ரிப்பன் பக்கோடா செய்யும் பட்டையான அச்சு முறுக்குக் குழலில் மாட்டவும்.

 5. முறுக்கு செய்யும் குழலில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.                       நல்லெண்ணெய் தடவும் பொழுது மாவு ஒட்டாமல் வரும்.

 6. இப்பொழுது மாவை நிரப்பி மூடிக்கொள்ளவும்.

 7. ஒரு வாணலியில் எண்ணெய் சூடானதும் மெதுவாக பிழியவும்.

 8. வட்டமாக வாணலி முழுவதும் பரவும்படி ஒரு முறை சுற்றி பிழியவும்.

 9. இரண்டு அல்லது மூன்று நிமிடங்களுக்கு பிறகு திருப்பிப் போடவும்.

 10. நுரை முழுவதுமாக அடங்கிய பின்னர் ரிப்பன் பக்கோடா எடுத்துவிடவும்.

 11. சுவையான மொறுமொறுப்பான ரிப்பன் பக்கோடா தயார்.

 

Leave a Reply