Gulab Jamun in Tamil | பால் பவுடர் குலாப் ஜாமுன் | Gulab Jamun with Milk Powder | Gulab Jamun recipe in Tamil

See this Recipe in English

குலாப் ஜாமுன்  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு சுவையான இனிப்பு வகை. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமான இந்திய இனிப்பு பண்டம். குலோப் ஜாமுன் கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் மாவை வைத்து செய்யப்படுகிறது,  அதற்கு பதிலாக பால் பவுடர்,  மைதா மாவு,  பேக்கிங் சோடா ஆகியவற்றை கொண்டு வீட்டிலேயே செய்யலாம்.  இது மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.  குலோப் ஜாமுன் தீபாவளி தவிர்த்து கிறிஸ்மஸ்,  புத்தாண்டு,  போன்றவற்றிற்கும் செய்து சாப்பிட சிறந்த இனிப்பு வகை.  சுவையான குலோப்ஜாமுன் நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.


சுவையான குலாப் ஜாமுன் செய்ய சில குறிப்புகள்

  • குலோப் ஜாமுன் செய்வதற்கு Everyday பால் பவுடர் பயன்படுத்தி உள்ளேன் இதற்கு பதிலாக  வேறு எந்த பால் பவுடர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
  • சர்க்கரை 1 ¼  கப் முதல் 1 ¾ கப் வரை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
  • சர்க்கரை பாகு செய்ய ஏலக்காய் பொடி சேர்க்கும் பொழுது அதனுடன் ஒரு சிட்டிகை குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளலாம்.
  • சர்க்கரைப்பாகு ஓரளவு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்,  கம்பிப் பதம் வைத்தால் ஆறிய பின்னர் சர்க்கரை கட்டி ஆக வாய்ப்புள்ளது.
  • ஜாமூனை எண்ணெயில் பொரிக்கும் பொழுது குறைவான தீயில் வைத்து பொரிக்கவும்,  மிதமான தீயில் அல்லது அதிகமான தீயில் இருந்தால் போட்டவுடன் கரிந்து விட வாய்ப்புள்ளது.
  • ஜாமூனை சேர்க்கும் பொழுது,  சக்கரை பாகு ஓரளவு  வெதுவெதுப்பாக இருக்க வேண்டும்,  ஒருவேளை ஆறி இருந்தால் மீண்டும் லேசாக சூடாக்கி பின்னர் ஜாமினில் சேர்க்கவும்.
  • மாவு பிசையும் பொழுது,  பாலை சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும். மொத்தமாக சேர்த்து செய்யக்கூடாது.
  • வெடிப்புகள் இல்லாமல் மென்மையாக பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவு போன்று அதிக அழுத்தம் கொடுத்து செய்யக்கூடாது.
  • ஒருவேளை வெடிப்புகள் இருந்தால் மேலும் சிறிதளவு பால் சேர்த்து அதனை மென்மையாக பிசையவும்.

தீபாவளி பலகாரங்கள் – பொட்டுக்கடலை முறுக்கு, தேங்காய் பால் முறுக்கு, மெது பக்கோடா, ரிப்பன் பக்கோடா,  தட்டை முறுக்கு, முறுக்கு.

தீபாவளி இனிப்பு வகைகள் – ரவா லட்டு , மோட்டிச்சூர் லட்டுபாசிப்பருப்பு உருண்டை, பூந்திலட்டு, ரோஸ் பர்பி , குலாப் ஜாமுன், கோதுமை குலாப் ஜாமுன், கோதுமை அல்வா,  பாதாம் அல்வா, அசோகா அல்வா, திருநெல்வேலி அல்வா,   பால்கோவா, இனிப்பு காஜா, சாக்லேட் பர்ஃபி.

 

 

See this Recipe in English

தேவையான பொருட்கள்

  • பால் பவுடர் – 1 கப் – 125g
  • மைதா – ½ கப் – 70g
  • நெய் – 1  மேஜைக்கரண்டி
  • பேக்கிங் சோடா – ¼   தேக்கரண்டி
  • பால் – ¼ கப்
  • சமையல் எண்ணெய் –  பொரிக்க தேவையான அளவு
  • சர்க்கரை – 1 ¼ கப் – 250g
  • ஏலக்காய் பொடி – ¼  தேக்கரண்டி

செய்முறை

1. சர்க்கரைப்பாகு செய்வதற்கு  ஒரு பானில், 1¼  கப் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

2. பின்னர் சர்க்கரையை எடுத்த அதே கப்பில் 1¼ கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

3. அதனுடன் ¼  தேக்கரண்டி ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

4. மிதமான தீயில் வைத்து 5 – 6 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

5. சக்கரை பாகு  ஓரளவு கெட்டியானதும் அடுப்பை அணைத்து எடுத்து வைக்கவும். 

6. ஒரு பவுலில் 1  கப் பால் பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.

7. அதனுடன் ½  கப் மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும்.

8. 1 மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கொள்ளவும்.

9. ¼  தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்துக் கொள்ளவும்.

10. ¼ கப் பாலை சிறிது சிறிதாக சேர்த்துக் கொள்ளவும்.

11. இதனை வெடிப்புகள் இல்லாமல் மென்மையாக பிசைந்து கொள்ளவும்.

12. பிசைந்த பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

13. ஒரு கடாயில் சமையல் எண்ணெய்  சேர்த்து குறைவான தீயில் சூடு படுத்திக் கொள்ளவும். குலோப் ஜாமூன் உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்துக் கொள்ளவும்.

14. அவ்வப்போது திருப்பி போடவும்.

15. பொன்னிறமாக ஆனதும் எண்ணெய் வடித்து தனியே எடுக்கவும்.

16. இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள சர்க்கரை பாகில் உருண்டைகளை சேர்க்கவும்.

17. 2 மணி நேரம் ஊறவைத்தபின்னர் பரிமாறவும். சுவையான குலாப் ஜாமூன் தயார்.

Leave a Reply